-
14th February 2013, 03:01 PM
#1701
Senior Member
Devoted Hubber
-
14th February 2013 03:01 PM
# ADS
Circuit advertisement
-
14th February 2013, 04:11 PM
#1702
Junior Member
Seasoned Hubber
In this world there is no recognition for Nija Karnan.
Vilambarathai Virumbatha Vindhai Manithar.
Kalam oru naal bathil sollum.
-
15th February 2013, 02:55 AM
#1703

Originally Posted by
abkhlabhi
நன்றி abkhlabhi அவர்களே!
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
காற்றைக் கையில் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவர் இல்லை!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
15th February 2013, 11:23 AM
#1704
Senior Member
Seasoned Hubber

இன்று முதல் ஈரோடு விஜயா திரையரங்கில் தினசரி 2 காட்சிகளாக நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக் காவியம்
என்னைப் போல் ஒருவன்
தகவல் உபயம் - நண்பர் சுப்பு எ சுப்ரமணியம்
Last edited by RAGHAVENDRA; 15th February 2013 at 07:26 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th February 2013, 07:26 PM
#1705
Senior Member
Seasoned Hubber
ஈரோடு விஜயா திரையரங்கினைப் பற்றி திரு சுப்பு அவர்கள் தந்த தகவல்கள்
அரங்கின் இருக்கை சுமார் 200 பேர் இருக்கும்.
பிரதான ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது.
நுழைவுக் கட்டணம் ரூ 15.00
ஒரு நாளைக்கு புதிய படங்கள் ரூ.800லிருந்து 1000 வரை வசூலாகுமாம். ஆனால் பழைய படங்கள் நல்ல வசூலைத் தருமாம். குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குமாம்.
ஒரு நாளைக்கு இரு காட்சிகள் மட்டும். மாலை மற்றும் இரவு காட்சி.
நேற்று ஒரு நாளைக்கு மட்டும் என்னைப் போல் ஒருவன் கிட்டத் தட்ட ரூ.2,500 வசூல் செய்துள்ளதாம்.
மேற்கொண்டு நிழற்படங்கள் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
அவருக்கு நமது நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th February 2013, 10:34 PM
#1706
Senior Member
Diamond Hubber
மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர்.
தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.
தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!
மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.
எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.
தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக O.A.K.தேவர்.
சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.
கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.
ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...
"போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...
தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.
தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி

பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.
தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்

மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.
படம்: தங்கச் சுரங்கம்.
Last edited by vasudevan31355; 16th February 2013 at 04:44 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th February 2013, 10:41 PM
#1707
அன்பு வாசு அவர்களுக்கு,
தங்கத்திலே வைரம்!
முழுக்க மசாலா என எண்ணவைக்கும் தங்கசுரங்கத்தில் இருந்து இப்படி வைரம் எடுத்துத் தரும் உங்கள் அழகிய ரசனைக்கு என் வந்தனம்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
15th February 2013, 10:48 PM
#1708
Senior Member
Seasoned Hubber
சூப்பர் சார்...
சோபாவில் அமர்ந்து நடிகர் திலகம் துடிக்கும் நெஞ்சுடன் அமர்ந்திருக்கும் போது பின்னணியில் அப்படியே பாடல் துவங்கும் .. எஸ்.வரலக்ஷ்மி அவர்களின் குரலில் பெற்ற மனம் சிறையிலே பாடல். ஒரே FRAMEல் ஒரு புறம் நடிகர் திலகம் ஒரு புறம் வரலக்ஷ்மி, ஒரு புறம் ஓ.ஏ.கே. தேவர் என மூவருமே தங்களுடைய உணர்ச்சிகரமான நடிப்பால் அந்த அருமையான பாடலுக்கு ஜீவன் அளித்திருப்பார்கள். அந்த FRAME COMPOSITIONஐ விளக்க வேண்டுமென்றால் பின்னாளில் மன்னவன் வந்தானடி படத்தில் காதல் ராஜ்ஜியம் எனது பாடலின் முடிவில் ஒரே FRAMEஐ நான்காக diagonalஆக பிரித்திருப்பார்கள். அதே கம்போஸிஷனில் இப்பாடல் காட்சியும் இருக்கும். மூன்று SPLITகள் சில வினாடிகள் வரும். முதலில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் தோற்றம் வரும். பின்னர் மூன்று ஸ்ப்ளிட்டிலூம் நடிகர் திலகம் தோன்றி கலக்கி விடுவார்.
இப்பாடல் காட்சி இப்போதெல்லாம் எந்த பிரதியிலும் இடம் பெறவில்லை.
மிகச் சிறப்பான தொரு காட்சியை பகிர்ந்து கொண்டு அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th February 2013, 10:51 PM
#1709
அன்பு ராகவேந்திரா அவர்களுக்கு
வாசு அவர்கள் பதித்த வைரத்தை உங்களுக்கேயுரிய கூரிய ரசனையால் பட்டைதீட்டினீர்கள்..
இன்னும் ஜொலிக்கிறது இக்காட்சி!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
15th February 2013, 11:53 PM
#1710
வாசு சார்,
தங்கசுரங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை மிக அழகாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விவரிப்பில் மன கண்ணில் மீண்டும் அந்த காட்சியை காணும் வாய்ப்பு. வாழ்த்துக்கள்.
சாரதி,
எல்லோரும் கொண்டாடுவோம் மற்றும் எங்கே நிம்மதி பாடல்களை பற்றிய பதிவைப் படித்தேன். சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் பிரமாதம். அதைப் பற்றிய கூடுதல் அலசல் செய்ய வேண்டும்.
நண்பர் ராகுல்ராம் குறிப்பிட்டது போல கோவை டிலைட் திரையரங்கில் ஹரிச்சந்திரா வியாழன் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படம் பொதுமக்களின் ஆதரவை பெரிதும் பெற்று வருவதாக செய்தி வந்திருக்கிறது. Non A/C திரையரங்கான இதில் கூட பகல் காட்சிக்கு வந்த கணிசமான பொது மக்கள் கூட்டம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் வரவேற்பு அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
Bookmarks