-
18th February 2013, 11:27 AM
#1761
Senior Member
Diamond Hubber
தலைவரின் 'வணங்காமுடி' காவியம் தெலுங்கில்
'THALAVANCHANI VEERUDU' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் "ஓங்காரமாய் விளங்கும் நாதம்" பாடல் தெலுங்கில் திரு கண்டசாலா அவர்களால் பாடப்பட்டது.
திரு கண்டசாலா அவர்களின் குரலும் தலைவருக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!
-
18th February 2013 11:27 AM
# ADS
Circuit advertisement
-
18th February 2013, 01:13 PM
#1762
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களது "தங்கச் சுரங்கம்" படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றிய அலசலை இப்போது தான் பார்த்தேன். தங்களுக்கேயுரிய எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான நடையில் எழுதி இருந்தீர்கள்.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
18th February 2013, 01:27 PM
#1763
பெற்ற மனம் பாடலையும் நடிகர்திலகத்தின் உணர்ச்சிமயமான குரலையும் கேட்டேன்.
புதிர் அளித்த திரு ராகவேந்திரா அவர்களுக்கும், விடை அளித்த அன்பு வாசு அவர்களுக்கும் நன்றி..
வணங்காமுடி தெலுங்குப்பதிவுக்கு சிறப்பு நன்றி....
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
18th February 2013, 08:15 PM
#1764
Junior Member
Veteran Hubber

Originally Posted by
adiram
Dear Sankar sir,
Sivandha Mann is an adventurous movie (puratchikaaran story) and it will not come in BOND series.
Sivandha Mann and Dharmam Enge will come in one catagory.
In Sivandha Mann Two Connery/Bond movie scenes were adopted.The helicopter chase where like Connery our NT has taken risk of using no stunt doubles (energetic NT moves like Connery's Bond swiftly when the copter comes over his head) was from the 1963 Bond Movie 'From Russis With Love'. Another scene was the flight fight with Thengai Seenivasan, was adopted from the 1963 Bond Movie 'Goldfinger' again Connery with the villain in the climax. Even NT makes a walk in the climax of Deiva Magan in a James Bond tuxedo with guns in hand, replicating the gun barrel sequence of Connery Bond films. NT in his Pudiya Paravai had also admirably followed Sean Connery's style of drinking in the Bond Introduction scene of Dr.No. In many movies the Bond dress fitted our NT as glove in hand, particularly Thangasurangam and Raja. In this world almost all actors have tried Bond mannerisms but only few were so close to Connery's screen presence as Bond. NT with his acting prowess has polished the desi version of Bond infused with sentiments that are non-Bond pattern. Since Makkal Kalaignar Jai Shankar used to play light roles only without much sentiments he was at that time titles as the Thennagaththu James Bond! But NT tried to give a polish to Bond as a real life spy than a larger than life hero. In Thangasurangam and Raja NT's dresses were very impressive for his lean and fitting body at that time like a Bond.
-
18th February 2013, 11:10 PM
#1765

Originally Posted by
vasudevan31355
தலைவரின் 'வணங்காமுடி' காவியம் தெலுங்கில்
'THALAVANCHANI VEERUDU' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் "ஓங்காரமாய் விளங்கும் நாதம்" பாடல் தெலுங்கில் திரு கண்டசாலா அவர்களால் பாடப்பட்டது.
திரு கண்டசாலா அவர்களின் குரலும் தலைவருக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!
அன்பு வாசு அவர்களுக்கு
அதுதான் வரம் வாங்கி வந்த கலைஞர்களின் தவப்பயன்..
டி. எம். எஸ் அவர்கள் எப்படி பலருக்குப் பொருத்தமாய்ப் பாடவல்லவரோ
அதேபோல் தலைவர் பலர் குரலுக்கு மெத்தப்பொருத்தமாய் உடல்மொழி காட்டிச் சிறப்பிக்க வல்லவர்..
அவரால் எந்தப் பாடலும் இன்னும் உயரத்துக்குப்போகும்...
அவரால் இராமானாகவும் இராவணனாகவும் பரதனாகவும் ஏன் தசரதனாகவும் தமது 20 வயது முதல் 70 வயது வரை நடிக்க முடிந்திருக்கும் என்றால்
அவர் திறன் அறிவலசலுக்கு அப்பாற்பட்டதுதானே...
பலரும் இதில் ஏதாவது ஒன்றை ஒரு காலகட்டத்தில் சிறப்பாகச் செய்யலாம். ஆனால் ஏககாலத்தில் செய்ய வல்லவர் நம் ஏகலைவர் மட்டுமே!
பி பி எஸ், சந்திரபாபு, ஏ,எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.எஸ், பாலா, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், எஸ் டி சுந்தரம் -
இன்னும் இங்கே சுட்டியில் டி ஏ மோத்தியின் குரலுக்கும் அழகுயிர் உருவம் தந்து உயர்த்தும் உன்னதக் கலைஞர் அல்லவா நம் தலைவர்..
Last edited by kaveri kannan; 18th February 2013 at 11:12 PM.
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
19th February 2013, 06:55 AM
#1766
Senior Member
Seasoned Hubber

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி. நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான கருடா சௌக்கியமா படத்தை பார்த்திராத பல நண்பர்களுக்காக இதோ இணையத்திலேயே இனிய வாய்ப்பு. முழுப்படமும் கீழே யூட்யூப் இணைய தளத்தின் உபயத்தால் காணக் கிடைக்கிறது. இதற்காக யூட்யூப் மற்றும் தரவேற்றிய நிறுவனத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.
இன்று வரை இப்படத்தின் நெடுந்தகடு தமிழகத்தில் வெளியாகவில்லை என எண்ணுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th February 2013, 07:08 AM
#1767
Senior Member
Diamond Hubber
நன்றி பார்த்தசாரதி சார். தங்களின் அடுத்த அசத்தலான பாடல் ஆய்வு எப்போது?
-
19th February 2013, 07:14 AM
#1768
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி கண்ணன் சார். காணா இன்பப் பாடலை கனிவோடு தந்த தங்களுக்கு நன்றிகள் பல. ரசனையில் மேம்பட்ட தங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். டி ஏ மோத்தி அவர்களின் குரல் வித்தியாசமானது. அத்தகைய வித்தியாசமான குரலை தன் திறமையால் மேலும் மெருகேற்றி அழகுபடுத்தி தலைவர் அளித்திருப்பார். மழையில் நனைந்து கொண்டே மாலினியுடன் இளமைத் துள்ளல் போட்டு (இந்தப் பாடல் முழுதும் கலகல' என்று சிரித்தபடியே பின்னுவார்) நெஞ்சை அப்படியே அள்ளிக் கொண்டு போவார். நன்றிகள் சார்.
Last edited by vasudevan31355; 19th February 2013 at 07:21 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th February 2013, 07:21 AM
#1769
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்!
என்னை ஒரு வழி பண்ணுவது என்று முடிவு கட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. நேற்று சிந்தனை செய்ய சொல்லி தேனினும் இனிய பாடலை சிம்மக் குரலுடன் கேட்டு இன்புறச் செய்து, இன்று கருடா சௌக்கியமா என்ற என் உள்ளம் கொள்ளை கொண்ட தீன தயாளுவை நாள் முழுதும் காணச் செய்து விட்டீர்கள். இன்று வேலைகள் ஆனாற் போலதான். இன்று முழுதும் தீன தயாளு என்னை ஆட்கொள்வார். முழு சுட்டிக்கும் நன்றி!
-
19th February 2013, 07:35 AM
#1770
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணி விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார். நாம் யாரிடம் காட்டுவது... அதான் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை வழி வந்து விட்டேன். அடுத்த பதிவைப் பார்த்தால் என்ன ஆவீர்களோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks