Page 32 of 67 FirstFirst ... 22303132333442 ... LastLast
Results 311 to 320 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #311
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    பொன்மனச்செம்மல் mgr - filimography news & events- திரி

    5 ஸ்டார் அந்தஸ்து - என்ற பெருமை கிடைத்த தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நமது நன்றி .
    திரு ராகவேந்திரன் அவர்கள் நமது திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் பட செய்திகளை பதிவிட்டு வருவது பெருமைக்குரியதாகும் .

    பொன்மனச்செம்மல் - திரி இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அயராத உழைப்பும் , மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் எல்லாவற்றையும் டைப் செய்து வரிசை படி பதிவிட்டு வருவதும் சாதனையாகும் .
    1936 சதிலீலாவதி துவங்கி இன்று ராஜகுமாரி -1947 வரை வந்து விட்டோம் .
    தொடர்ந்து நமது நண்பர்களின் பதிவுகளுடன் பொன்மனச்செம்மல் திரி மேன் மேலும் வெற்றி பெற விரும்பும்
    வினோத்


    நமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.


    அன்புடன்


    எஸ். ரவிச்சந்திரன்
    ----------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    ----------------------------------------------

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #312
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி படத்தின் தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமை தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வழங்கிய செவகுமார் சார் வினோத் சார் இருவருக்கும் எனது நன்றிகள் அதேபோல் வீடியோ பதிவுகள் வழங்கிய ஜெய் சார் சைலேஷ் சார் ரூப் சார் உங்களுக்கும் எனது நன்றிகள் போட்டோ பதிவு வழங்கிய ரவி சார் அவர்களுக்கும் நன்றிகள்

    தலைவன் தன்னுடைய இளம் வயதில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எப்படி போராடி நடித்திருப்பார் என்பதனை நினைக்கும் போது என்னால் தாங்கமுடியவில்லை நண்பர்களே காரணம் மிகப்பெரிய நடிகர்களுக்கு மத்தியில் அதுவும் பாடி நடித்தால்தான் நடிக்க வாய்ப்பு என்ற நிலைமையில் நம் தலைவன் எப்படி போராடி நடித்திருப்பார் என்னும்போதுகண்கள் குளமாகிறது

    .திரையுலகில் நம் தலைவன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் பின்னாளில் வந்த நடிகர்களுக்கு மிகவும் சுலபமாக மாறிவிட்டது ஏனென்றால் கதாநாயகன் பாடினால்தான் நடிக்கமுடியும் என்ற நிலைமையை மாற்றியவன் நம் தலைவன் இன்னும் எவ்வளவோ கூறலாம் நம் குலதெய்வத்தை பற்றி

    அன்புடன் வேலூர்
    இராமமூர்த்தி

  4. #313
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    It is a pleasure to hear that this thread has received 5 star status.

  5. #314
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரிக்கு 5Star அந்தஸ்து கிடைக்கக் காரணமான அத்துணை பேரின் உழைப்பிற்கும் வணக்கம்.

  6. #315
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    திரு.செல்வகுமார் சார்

    சென்ற வாரம் சனி அன்று ராஜகுமாரி படத்தகவல்களை பதிவு செய்தீர்கள். அதன் பின்பு அடுத்த படமான பைத்தியக்காரன் படத்தகவல்களை எதிர் பார்த்தேன்.தாங்கள் பதிவிடவில்லை. ஏன் இந்த கால தாமதம். இன்றாவது பதிவிடுங்கள். ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்.

    உங்கள் அன்பு நண்பர்


    எஸ். ரவிச்சந்திரன்
    ----------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    ----------------------------------------------------------

  7. #316
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    திரு.செல்வகுமார் சார்

    சென்ற வாரம் சனி அன்று ராஜகுமாரி படத்தகவல்களை பதிவு செய்தீர்கள். அதன் பின்பு அடுத்த படமான பைத்தியக்காரன் படத்தகவல்களை எதிர் பார்த்தேன்.தாங்கள் பதிவிடவில்லை. ஏன் இந்த கால தாமதம். இன்றாவது பதிவிடுங்கள். ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்.

    உங்கள் அன்பு நண்பர்


    எஸ். ரவிச்சந்திரன்
    ----------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    ----------------------------------------------------------

    [b]திரு. ரவிச்சந்திரன் சார் அவர்கள் அறிவது :


    தங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள் பல. பல்வேறு அலுவல்கள் காரணமாக, பொன்மனசெம்மலின் 16வது படமான "பைத்தியக்காரன்" பற்றிய தகவல்களை உடன் பதிவிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    இன்று அப்படத்தினை பற்றிய தொகுப்பினை அளிக்கிறேன்.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன் [/b]

  8. #317
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    [b[size=4]]பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    1. இத்திரைப்படம் வெளியான தேதி : 26-09-1947

    2. தயாரிப்பு : கலைவாணரின் "என்.எஸ்.கே. பிலிம்ஸ்" நிறுவனம்

    3. இயக்குனர்கள் . : கிருஷ்ணன் - பஞ்சு

    4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : மூர்த்தி

    5. பாடல்கள் : கே.பி. காமாக்ஷிசுந்தரன், உடுமலை நாராயணகவி,
    டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரி மற்றும்
    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    6. திரைக்கதை, வசனம் : சஹஸ்ரநாமம்

    7. இசை : சி. ஆர். சுப்பராமன் & பார்ட்டி

    8. கதாநாயகன் மற்றும் நாயகி : எஸ். வி. சஹஸ்ரநாமம் - எஸ்.ஜெ. காந்தா

    குறிப்பு : கலைவாணர் என்.எஸ். கே. அவர்கள் மனைவி டி.ஏ. மதுரம், தனது கணவர் என்.எஸ். கே. தவிர வேறு எவருடன் ஜோடியாக நடிப்பதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். ஆனால் அந்த உறுதியினை சற்று தளர்த்தி, அவர் ஜோடியாக நடித்தது
    நமது மக்கள் திலகத்துடன் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. அந்த படம் தான் "பைத்தியக்காரன்". நமது இதய தெய்வத்துடன் ஒரு டூயட் பாடலும் உண்டு. காந்தா - வள்ளி என இரட்டை வேடங்களில் டி..ஏ. மதுரம், அவர்கள் நடித்து அசத்தினார்

    இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகிய இருவரையும் கவுரவப்படுத்தி, அவர்களின் புகைப்படத்துடன் இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன் [/b][/size]

  9. #318
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" கதைச்சுருக்கம் :
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கல்யாணம் ஆன சில மாதங்களில் விதவையாகி விட்ட நளினாவுக்கு மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் தமையன் சேகர் வாதாடுவதை தந்தை ஆறுமுக முதலியார் பிடிவாதமாக ஆட்சேபிக்கிறார். ஆனால்,அவர் மட்டும் மனைவியை இழந்தவுடன் ஓர் பெண்ணை இரண்டாந்தாரமாக கொள்கிறார். மணப்பெண் காந்தா முற்போக்கான கொள்கை உடையவள். படித்தவள். தற்போது அவள் காதலன் மூர்த்தி அபாண்டமாக திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறான்

    காந்தா ஆறுமுக முதலியாருக்கு மனைவியாக வாழ மறுக்கிறாள். அவரை தாலி கட்டிய "தகப்பனார்" என்றே மதிக்கிறாள். நளினாவின் ஏக்கமாகவே இருந்து வரும் சேகருக்கு வேளையில் சாப்பிடுவது, தூங்குவது கூட முடிவதில்லை. ஆறுமுக முதலியாரின் நிம்மதி அடியோடு குலைகிறது

    மூர்த்தி விடுதலை அடைகிறான் காந்தா ஆறுமுக முதலியாரிடம் தான் அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி கேட்கிறாள். அவரும் வேறு வழியில்லாமல் அவள் விருப்பத்துக்கு, தலை வணங்குகிறார் இதுவரை பட்டுத் தெளிந்ததின் பலனாக நளினாவுக்கு கல்யாணம் செய்வது என்று நிச்சயிக்கிறார்.

    ஆனால் நளினாவின் பால்ய நண்பன் சோமு அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவளைக் கெடுத்து விடுகிறான். பிறகு அவளை மணக்க மறுக்கிறான். நளினா தற்கொலை செய்து கொள்கிறான்.

    சேகர் ஆத்திரத்துடன் சோமுவைக் கழுத்தைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கையில், அவன் (சோமு) சுவற்றிலிருந்த ஆணியில் மோதுண்டு உயிர் துறக்கிறான். சேகர் "பைத்தியக்காரனைப்" போல், "பெண்களே ! நீங்களெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள்: கல்யாணம் செய்து கொண்டால் விதவையாகி விடுவீர்கள்" என்று கதறுகிறான்.

    ------ கதை சுருக்கம் முற்றியது. ------------

    இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  10. #319
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    "பைத்தியக்காரன்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் :

    நமது மக்கள் திலகத்துடன் நடிகை டி.ஏ. மதுரம் அவர்கள்





    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #320
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த பைத்தியக்காரன்? திரைப்படத்தின் நிழற்படங்களின் ஒரு கலவை



    பைத்தியக் காரன் படப் பெயரை பதியும் பொழுது முடிவில் ஒரு கேள்விக் குறியினையும் இடவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 32 of 67 FirstFirst ... 22303132333442 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •