விருதுகளுக்கு படங்களை அனுப்பும் போது ஒரு படைப்பில் உள்ள சில பகுதிகளை நீக்கி விட்டு அனுப்புவது உலகெங்கும் உள்ள நடைமுறை தான். இதற்கு எந்தக் கலையும் விதிவிலக்கல்ல, சினிமா உள்பட. அதே போல் எந்த குப்பைப் படமாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு அம்சம் அல்லது பங்களிப்பு விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டு விருது பெறுவதும் நடைமுறையில் உள்ளது தான். இதில் ஆஸ்கார் பரிசும் அடங்கும். எத்தனையோ முறை மோசமான படம் கூட ஏதாவது ஒரு துறைக்கு விருது பெற்றுள்ளது. எனவே படங்களைத் தேர்ந்தெடுத்து ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு சமர்ப்பிப்பது ஒன்றும் எதிர்க்கக் கூடிய விஷயமல்ல,சொல்லப் போனால் அப்படித் தான் செய்ய வேண்டும். உதாரணம் செவாலியே விருது. செவாலியே விருதிற்கு அவர் நடித்த அத்தனை படங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் பார்த்து தான் விருதுக்கு consider பண்ண வேண்டும் என்றால் குறைந்தது இதற்கே ஒரு வருடமாவது ஆயிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே தேர்ந்தெடுத்து படங்களை அனுப்புவது தான் நடைமுறை.

ஆஸ்கார் குழுவின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகர் திலகத்திற்கு வழங்க வேண்டுமென்றால் அதற்கு PREPARATION செய்ய வேண்டும். அவர் திரையுலக காலம் 50 ஆண்டுகள் என்றால் அந்த 50 ஆண்டு காலம் முழுதும் அவருடைய சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அது மட்டுமின்றி அவற்றில் பல மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததையும் ஆதாரத்துடன் நிரூபித்து, அவர் வாங்கிய விருதுகள், அவருடைய திரைப்படங்கள் மூலம் சமுதாயத்தின் மேன்மைக்கு அவருடைய பங்களிப்பு போன்றவையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

அவருடைய முதல் படம் தொடங்கி இறுதிப் படம் வரை [கௌரவ வேடத்தையும் சேர்த்து]யிலான 300க்கும் மேலான படங்களில் தேர்ந்தெடுத்த காட்சிகளைத் தொகுத்து அனுப்புவதே சிறந்தது. இதில் கால கட்டத்தை நிர்ணயிப்பது நிச்சயமாக நியாயமாக இருக்காது. தேர்ந்தெடுக்கும் குழு அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்து அவற்றிலிருந்து காட்சிகளைத் தொகுப்பதே முறை.