-
1st March 2013, 08:53 AM
#2021
Junior Member
Seasoned Hubber
Gopal Sir ,
Your Mudhal Mariyadhai analysis is superb
-
1st March 2013 08:53 AM
# ADS
Circuit advertisement
-
1st March 2013, 09:03 AM
#2022
Junior Member
Newbie Hubber
MY ALL TIME FAVOURITE SONG- LORRY DRIVER RAJAKANNU
-
1st March 2013, 09:26 AM
#2023
Moderator
Platinum Hubber

Originally Posted by
Gopal,S.
ஆனால் எனது எழுத்தில் வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலுக்கு தீனி போடும் விழைவு அதிகம். அதனால் வந்த ஆர்வ கோளாறு.
Interpretation என்பது வேறு அங்கே 'இட்டு நிரப்ப' இடம் விட்டு எழுதலாம். ஆனால் நான் குறிப்பிட்டது தகவல் பகிர்வு பற்றி. நீங்கள் சொல்லாத பட்சத்தில் விக்கிபீடியாவைத் தான் குடைய வேண்டும். அங்கு அந்நபர்களின் ஜாதகவிவரங்களும், பராக்கிரமங்களும் இருக்குமே ஒழிய, அவர்கள் பாணிக்கும் சிவாஜிக்கும் உள்ள தொடர்பு நீங்கள் தான் எழுதவேண்டும்.

Originally Posted by
RAGHAVENDRA
சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது....
கிட்டத் தட்ட மூன்று நான்கு பக்கங்கள் கோபால் ஒருவருக்கே கோட்டா வாகி விட்டது.
எனவே இவர்களெல்லாம் தங்கள் படங்களை அலசியது போக மிச்சம் மீதி நமக்கு அளித்த பிறகு நாம் மற்றவற்றைப் பற்றிப் பேசலாம்.
ஏன் இப்படி எல்லாம் இடுகைகள்?
எங்கே வந்தது முன்னுரிமையும் பின்னுரிமையும்? தத்தம் ரசனைக்கேற்ப எல்லாரும் எழுதலாம், வாசிக்கலாம்.
ஏன உங்களுக்கு ஒரு sense of disenfranchisement? யாரும் யாரையும் முடக்கவில்லையே.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st March 2013, 09:28 AM
#2024
Moderator
Platinum Hubber

Originally Posted by
adiram
(enakku tamil fontil ezudha theriyaamaikku romba varuththappadukiren. therindhaal unggalai paaraattu mazaiyil nanaiththu pacific kadadil muzhugadiththiruppen).
Just try typing here exactly the same way as you typed the above line: http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st March 2013, 09:33 AM
#2025
Senior Member
Diamond Hubber
திரு கோபால்.. முதல் மரியாதை பற்றிய உங்களது அலசல் மிகவும் அருமை. ஆவணப்படுத்தி வைத்துக்கொண்டு அசை போட வேண்டிய கருத்துக்கள். தொடர்ந்து எழுதவும்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st March 2013, 09:36 AM
#2026
Moderator
Platinum Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தினத்தந்தி வாசகன் என்பதை நிரூபித்து விட்டேனாக்கும்
Good one
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st March 2013, 09:58 AM
#2027
Junior Member
Devoted Hubber
சம்பந்தபட்டவர்கள் சம்மதமின்றி ஆனால் அவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பந்தத்தை பற்றிய பதிவு இது
.(நன்றி: திரு.விசு)
நண்பர் கோபால் என்ற சரவெடிக்கும்,நண்பர் ராகவேந்திரா என்கிற ஊதுவத்திக்கும் இடையே உள்ள திரி இது.முதல்வர் ஒரு பதிவு போடுவதும்,இரண்டாமவர் அதை சற்று உரசுவதும், உடனே டமால் டுமீல் சத்தமும் ஒரு அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டன...
நண்பர் கோபால் அவர்களுக்கு: உங்கள் சிவாஜி பாசம்/பக்தி ஜகத் பிரசித்தம்; ஆனால் உங்கள் பழகுமுறை, நெருங்கி பழகியவர்கள் மட்டுமே அறியக்கூடியது.பந்தியில் அமர்ந்து விருந்து உண்டு கொண்டு இருக்கிறீர்கள்.பரிசாரகர் வந்து,"கத்தரிக்காய் பொரியல் வேண்டுமா?:" என கேட்கிறார்." " வேண்டாம்" என சுருக்கமாக சொல்லி விட்டு போங்களேன்.கூடவே எதற்காக ,"கத்தரிக்காயை மனுஷன் சாபிடுவானா?" என்ற விளக்கம்? அருகில், அதை, சாததத்துடன் குழைத்து, பாத்தி கட்டி, ஒரு பிடி பிடித்துக்கொண்டிருக்கும், சக விருந்தினர்கள் மனோ நிலையை சற்று யோசிக்கவேண்டாமா??
ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன்.நம்ம என்ன இப்போ I&B ministry அனுமதியுடன்,Federal express courier service van வாசலில் காத்திருக்க,அனுப்பவேண்டிய படச்சுருள் உள்ள பொட்டி தில்லானா மோகனாம்பாளா அல்லது மிருதங்க சக்ரவர்த்தி யா எனும் விவாதம் செய்யவேண்டிய நிலைக்கா வந்து விட்டோம்? இப்போதான் பொண்ணே புஷ்பவதி ஆயிருக்கா!.அதற்குள் அவளுக்கு கலயாணமாகி, பிறக்கும் மகனை heart surgeonஆக்குவதா அல்லது neurosurgeon ஆக்குவதா என்ற விவாதம் இப்போ எதற்கு? சற்றே யோசியுங்கள்..
நண்பர் ராகவேந்திரா அவர்களுக்கு:என்னது திரியில் உங்களுக்கு இடம் இல்லையா? என்ன சார் இது? திரியே நீங்கதானே! அதுவும் இது என்ன, ஏதாவது குத்து விளக்கு திரி போல சின்னதா என்ன? அப்படியே திருவண்ணாமலை பரணிதீபம் திரி அல்லவா? நேற்று வந்த சுமிதா அம்மணியே ஒளவையார் ரேஞ்சிற்கு உபதேசங்களை வாரி விடுவதற்கு இடம் அளிக்கும் இந்த திரி, உங்கள் பதிவுகளையா ஒதுக்கப்போகிறது? நண்பர் கோபால் பாட்டிற்கு Polonsky,Romansky,scotch whisky Tata sky, என்று போடட்டுமே !
நீங்கள் உங்கள் படங்களையும் பதிவையும் அதற்கு முன்னும் பின்னும் வெளியிடலாமே!
நானும் ஜனரஞ்சகமாக,--பாசமலர் படத்தை பார்ப்பவர்கள், பொதுவாக, இரண்டாம் பாதியிலிருந்துதான் சங்கடப்படுவார்கள்.ஆனால் திருச்சி பிரபாத் டாக்கீஸில் இப்படத்தைப்பார்ப்பவர்கள் News reel லிருந்தே சங்கடப்படுவார்கள்.காரணம் மூட்டைபூச்சிகள்.-- என்று பதிவிடுகிறேன்..
ஆயிரக்கணக்கானோர் பார்ப்பதாக சொல்லப்படும் இத்தளத்தில் பதிவிடுவது என்னவோ ஒரு ஐந்தாறு பேர் ~அவர்களுக்குள் ஏன் இந்த குழப்பம் ?
எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக அவர் புகழ் பாடி மகிழ்வோமே!
-
1st March 2013, 10:07 AM
#2028
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ragulram11
Ganpat Sir,
I have seen Once more many times could you say from which movie(s) the flash back episodes were taken ? I guess it was not from a single movie but from many movies.
நண்பரே ,அந்த காட்சிகள் இடம் பெறும் படம் "இருவர் உள்ளம்"..கோமா வில் உள்ளவர்களைக்கூட எழுப்ப வல்லமை உள்ள பாடல் அது ..(நதி எங்கே போகிறது")
-
1st March 2013, 10:20 AM
#2029
Senior Member
Seasoned Hubber
David Griffith, Birth of a Nation, Roman Polansky, Knife in the Water, Battleship Potemkin, Bicycle Thief, என்று எழுதலாம் தவறில்லை. எந்த விதத்தில் இங்கு அது பொருந்துகிறது என்பதையும் சேர்த்து எழுதலாம். உலகப் பட விழாக்களில் அல்லது FILM SOCIETY பட நிகழ்ச்சிகளில் தமிழனையும் தமிழையும் நமது தலைநகரிலேயே ஒரு பிள்ளைப் பூச்சியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அங்கே நடிகர் திலகம் படத்தையும் சிலர் ஒரு மாதிரி பேசியதைப் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாராட்ட முடியுமா. அவர்களை ரசியுங்கள். ஆனால் நம்மவரை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் விவாதம் செய்து அதில் பல பேரை கன்வின்ஸ் பண்ணியிருக்கிறேன். முதலில் ஒரு மாதிரி பார்த்தவர்கள் ஒவ்வொரு கருத்தாக நான் சொல்லச் சொல்ல அதன் பிறகு நடிகர் திலகம் என்ற உலக மகா கலைஞனை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படி என் விளக்கத்தை கேட்டு அதை எடுத்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள். நம்மவர்கள் - நம் தமிழ் நாட்டவர்கள் - போலி கௌரவத்தினால் சிவாஜி என்றாலே ஒரு மாதிரி எளக்காரமாய்ப் பார்த்ததெல்லாம் அனுபவித்திருக்கிறேன். இவையெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல. சில வெளிநாட்டவர்கள் என்னிடம் பின்னாளில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் திலகத்தின் சில படங்களைப் பற்றி கேட்டறிந்ததும் உண்டு.
எந்தக் களத்திலும் நாம் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. இதைத் தான் நான் வலியுறுத்தி வருகிறேன். இதில் என்ன தவறு உள்ளது. உலகப் படங்களுக்கோ அல்லது உலக நடிகர்களுக்கோ நம் நடிகர் திலகம் ஒரு இம்மியளவு கூட குறைவில்லை. இவருடைய அளவில் ஒரு சதம் கூட அவர்களெல்லாம் வர முடியாது. பின் ஏன் அவர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக் கொண்டு இருக்க வேண்டும். இரு முறை உலகப் படவிழாக்களில் DELEGATE ஆகச் சென்றவன், பட கருத்தரங்குகளில் கலந்து கொண்டவன், தியரிகளில் இன்றைய சில முன்னணி நடிகர்களுக்கு அன்றைய விழாக்களில் நோட்ஸ் கொடுத்தவன் என்ற முறையில் தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.
உலகப் படங்களையும் உலக நடிகர்களையும் எழுதுங்கள். ஆனால் அவர்களை ஒப்பிட்டுத் தான் நடிகர் திலகத்தைப் பற்றிப் புகழ வேண்டும் என்பதில்லை.
Rudolf Valentino உள்பட பல உலக நடிகர்களை நடிகர் திலகம் Inspiration ஆக கொண்டுள்ளார். ஆனால் எந்த நடிகரின் பாதிப்பையும் தன் நடிப்பில் வர விடவில்லை. எந்த ஸ்டைலானாலும் அதனை நம்முடைய கலாச்சார வளையத்திற்குள் அடக்கி அதற்கேற்றவாரு தந்துள்ளார்.
இந்த அடிப்படையை வைத்து அவருடை நடிப்பையும் அவருடைய படங்களையும் அணுகினால் பல புதிய பரிணாமங்களில் கருத்துக்கள் வெளிவரும். இதற்கு சரியான நண்பர் கோபால் ஒருவரே. அந்த உரிமையில் தான் அவரிடம் இவ்வளவு விவாதங்களும். ஏனென்றால் மற்ற உலக நடிகர்களை விட நடிகர் திலகம் பல மடங்கு சிறந்து விளங்குவது எப்படி என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதக் கூடியவர்
நண்பர் கோபால் ஒருவரே.
இதைத் தான் அவரிடம் நான் எதிர்பார்க்கிறேன். மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அவருடைய அனைத்துப் படங்களையும் பாருங்கள். எந்தப் படத்தையும் BIASSED கண்ணோட்டத்தில் அணுகாதீர்கள். ஒரு உலகப் பட ரசிகர் எப்பேர்ப்பட்ட குப்பைப் படமாக இருந்தாலும் ஒரு விநாடி கூட விடாமல் பார்ப்பார். அப்படி இருக்கும் போது நடிகர் திலகத்தின் எந்தப் படமாக இருந்தாலும் நாம் அத்தனை படங்களையும் பார்த்து அதிலிருந்து அவருடைய நடிப்பில் உள்ள பல நுணுக்கமான விஷயங்களைப் பார்ப்போமானால் IT WILL RENDER JUSTIFICATION TO OUR APPROACH.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st March 2013, 10:54 AM
#2030
எனது முதல் தமிழ்ப்பதிவு, இணையத்தில் எனது தமிழ் ஆசான் திரு பிரபுராம் அவர்களுக்கு சமர்ப்பணம்.
Bookmarks