-
1st March 2013, 11:34 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
P_R
Interpretation என்பது வேறு அங்கே 'இட்டு நிரப்ப' இடம் விட்டு எழுதலாம். ஆனால் நான் குறிப்பிட்டது தகவல் பகிர்வு பற்றி. நீங்கள் சொல்லாத பட்சத்தில் விக்கிபீடியாவைத் தான் குடைய வேண்டும். அங்கு அந்நபர்களின் ஜாதகவிவரங்களும், பராக்கிரமங்களும் இருக்குமே ஒழிய, அவர்கள் பாணிக்கும் சிவாஜிக்கும் உள்ள தொடர்பு நீங்கள் தான் எழுதவேண்டும்.
Dear Prabhu,
Gopal தன் பதிவிலேயே ஒவ்வொரு நடிப்புப்பள்ளியின் பாணியை சிவாஜி எப்படி தழுவியுள்ளார் என்பதை சுருங்க சொல்லி விட்டாரே!இதோ அந்த விளக்கம்:
quote:
ஏனெனில், நடிகர்திலகம் Stalinovsky ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objective படி கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த்தி,காத் து,அழ ித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.
இதற்கு மேல் வேண்டுமெனில்,இன்னும் சற்று விவரமாக தனித்தனி காட்சி அமைப்பின் விளக்கத்தின் மூலம் மேற்கண்ட பாணிகளை விவரிக்க சொல்லலாம்.
-
1st March 2013 11:34 AM
# ADS
Circuit advertisement
Bookmarks