-
7th March 2013, 07:33 AM
#11
Junior Member
Newbie Hubber
வசந்த மாளிகை - இன்னொரு கர்ணனாக ,அனைத்து பக்தர்கள் சார்பிலும் அந்த நடிப்பு கடவுளையே பிரார்த்திக்கிறேன். கேட்கும் செய்திகள் அனைத்துமே ,உவப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியவையே. ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி. நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே. நடிகர்திலகம் என்ற சூறாவளியால் உலகத்துக்கு நன்மையே.
எந்த ஒரு தமிழனும்(ஈழம் உள்ளிட்ட) மறக்க இயலாத காதல் காவியம்.
இந்த படத்தின் structuring ,form ,content ,spacing எல்லாமே, எந்த திரைப்பட இலக்கணத்திலும் அடங்காத அதிசயம்.
முதலில், கேளிக்கை பாடல்கள், பாத்திர அறிமுகங்கள் என்ற முகாந்திரங்கள் முடிந்து, கதாநாயகனின் காயங்கள்(முன் வாழ்க்கை),தொடர்ந்த மன மாற்றம், தொடரும் மெல்லிய காதல் வேட்கை, பரஸ்பர பரிமாற்றம், மெல்லிய மறைமுக எதிர்ப்பு, சதி. ஆனால் ஆச்சரியம். முறிவுக்கு ,பிரிவுக்கு மற்றோரின் மெல்லிய எதிர்ப்பு காரணமல்ல. நாயகியின் ,தன்மானம்,கலந்த சுய மரியாதையே.(நாயகனால் சீண்ட படுகிறது). நாயகனின், தன் உடல் உபாதைககளை கூட புறந்தள்ளும், பிடிவாதம்(கொடுத்த சத்தியம்). பிறகு வரும் பரபரப்பான இறுதி கட்டம்.
படத்தின் உயிர்நாடிகள் நடிகர் திலகம், வாணிஸ்ரீ(என்ன ஒரு இணைவு,இயைவு, ரசாயனம்),கண்ணதாசன்,மாமா மகாதேவன், பாலமுருகன்,வின்சென்ட், பிரகாஷ்ராவ், எல்லாவற்றுக்கும் மையமான அரேகபூடி கௌசல்யா தேவியின் கதை.
ஒரு இளைய நண்பர்கள் குழுமத்துடன், 2000 இல் ,இந்த படம் பார்த்து கொண்டிருந்தேன் இந்தோனேசியாவில். அப்போது, ஒரு நண்பர் ,சிவாஜி 25 வயதில் படு அழகாய் இருந்திருக்கிறார் என்றார்.நான் சொன்னேன் இந்த படம் வரும் போது அவரின் வயது 44 என்று.நாற்காலியில் இருந்து விழும் அளவு அதிர்ந்த அவரின் மோவாய் தரையை தொட்டது. வாணி ஸ்ரீ பற்றி ஒரு நண்பர் அடித்த comment .சிம்ரன் எல்லாம் இவளிடம் பிச்சை வாங்கவும் தகுதியில்லை.படம் முழுவதும் நிரவியுள்ள உயிர் துடிப்பான காட்சிகள்.வசனங்கள்,பாடல்கள் எதை சொல்ல எதை விட.??!!
என் மனம் அங்குதான் உங்களுடன் உலவி கொண்டிருக்கும்.
Last edited by Gopal.s; 7th March 2013 at 01:54 PM.
-
7th March 2013 07:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks