Page 46 of 63 FirstFirst ... 36444546474856 ... LastLast
Results 451 to 460 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #451
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வெங்கி ராம்,
    கட் அவுட் கலாச்சாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் பொருள் தரும் விதமாக அந்தக் கால கட்டத்தில் அறிமுகப் படுத்தப் படவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    கட் அவுட் என்பது ஒரு விளம்பர யுத்தி. ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன் படுத்தப் படும் பல்வேறு வகை உபாயங்களில் ஒன்று. அதில் ஒரு புதுமையாக வணங்காமுடி திரைப்படத்திற்கு சென்னை சித்ரா திரையரங்கின் முகப்பில் பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப் பட்டு படத்திற்கு ஒரு talk கொடுத்தது. அதைத் தொடர்ந்து மற்ற படங்களுக்கும் அது தொடர்ந்தது. இதில் எந்த விதமான தவறும் இல்லை.

    ஆனால் இதனை அரசியல் வாதிகள் தங்கள் சுய விளம்பரத்திற்காக பயன் படுத்தத் தொடங்கிய போது தான் இந்த கட்அவுட் கலாச்சாரம் என்கிற சொல்லே பரிச்சயமானது. இதைப் பற்றி விவாதிக்க ஏராளமான பக்கங்கள் வேண்டும்.

    கட் அவுட் வைப்பதை முதலில் தொடங்கி வைத்தது விளம்பர நிறுவனங்கள். பின்னாளில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் மேல் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #452
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்களுக்கு அதிர்ச்சி...

    என்ன நண்பர்களே ... தலைப்பு பயமுறுத்துகிறதா ... தின மலரில் வெளியாகி இருக்கும் இச் செய்தியைப் படியுங்கள் .. புரியும்

    சிவாஜி கட்அவுட்டுக்கு பண மாலை! ரசிகர்கள் கொண்டாட்டம்!!



    நடிப்பு மேதை சிவாஜியின் அற்புதமான நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று வசந்த மாளிகை. காலத்தால் அழியாத இந்த காதல் காவியத்தில் இப்போதைய நவீன தொழில் நுட்பத்தை இணைத்து மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்றைய தகவல்படி பழைய படம்தானே என்று சாவகாசமாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு பலத்த அதிர்சசியாம்.. அதாவது, பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு வைத்திருந்தார்களாம். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இதே நிலைதானாம்.

    குறிப்பாக, அந்த காலத்து ரசிகர்கள் மட்டுமின்றி, இப்போதைய யூத் ரசிகர்களும் வசந்த மாளிகையில் சிவாஜியின் நடிப்பைப்பற்றி கேள்விப்பட்டு இப்போது வந்து பார்க்கிறார்களாம். மேலும், ஒவ்வொரு தியேட்டர் வாசல்களிலும் சிவாஜிக்கு பெரிய அளவில் கட்அவுட்களும் வைத்திருக்கிறார்கள். அப்படி ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கட்அவுட்க்கு மிகப்பெரிய பணமாலை அணிவித்திருக்கிறார்களாம். அதில் கோர்க்கப்பட்டுள்ள மொத்த பணத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாம். இன்னும் பல ஊர்களில் பாலாபிஷேகம், பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டதாம்.
    மேலே காணப் படும் தினமலர் செய்தி வெளிவந்துள்ள இணையப் பக்கத்திற்கான இணைப்பு

    http://cinema.dinamalar.com/tamil-ne...ating-huge.htm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #453
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    கட்-அவுட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது நடிகர் திலக ரசிகர்கள்தானா?
    வெங்கி சார்,

    பல முதல்களுக்கு சொந்தமானவர் நம் நடிகர்திலகம் மட்டுமே.

    அன்றைய காலகட்டங்களில்,மக்களிடம் ,படங்களை கொண்டு சேர்க்க உதவியவை, பத்திரிகை,போஸ்டர் ,bit notice போன்றவையே. (TV ,internet வழக்கிலில்லை. வானொலி ,வர்த்தக சேவையை துவங்கவில்லை). 50 களில் நடிகர்திலகம், போட்டியே இல்லாத தனிக்காட்டு ராஜா. ஆனால், நடிகர்திலகம், பணம் கொடுத்து இவற்றை ஊக்குவிக்கவில்லை. அவர் மேலிருந்த ஈர்ப்பால் இயல்பாக நடந்தவை, இந்த விளம்பரங்கள், ரசிகர் மன்றங்கள் எல்லாமே. அகில இந்தியாவிலும், நட்சத்திரம் சார்ந்து திரை பட துறையில் நிகழ்ந்த shift ,நடிகர்திலகத்தினால் ,தமிழ் நாட்டில் துவங்கி, அகில இந்தியாவிற்கும் பரவியது.

    அன்று அவை ஒன்றுதான் விளம்பர வாசல்கள்.அவற்றில் ஒன்றுதான், பெரு நகரங்களில் கவன ஈர்ப்புக்கான வானத்தை தொடும் cut -out .முதல் முதலில், 1957 இல் வணங்காமுடி படத்திலிருந்து துவக்கம்.

    ஆனால், எப்படி மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தும், இன்றும் stress என்றால் flight -fight response ஆக adrenalin சுரப்பது போல ,இவ்வளவு விளம்பர வளர்ச்சி அடைத்த பிறகும், cut -out ,political meetings போன்ற out -dated விஷயங்களும் தொடர்கின்றன.

    ஆனால், நடிகர்திலகம் தன் தொழிலை மட்டும் பார்த்த perfectionist &genius .அவர் இதற்கெல்லாம் அப்பாற் பட்டவர், இதையெல்லாம் கண்டு கொள்ளாதவர்.
    Last edited by Gopal.s; 11th March 2013 at 09:28 AM.

  5. #454
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்

    நிழற்படங்கள் தொடர்ச்சி ...

    மக்கள் திரள் - மாலைக் காட்சி துவங்க இருக்கும் நேரம் ...



    மாலை சாற்றப் பட்ட மற்றோர் பேனர்



    பிரம்மாண்டமான பேனர் மாலை சாற்றப் பட்டபின் முழுமைத் தோற்றம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #455
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்

    அரங்கினுள் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடல் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகக் கொண்டாட்டமும்

    தாய்மார்களும் சிறுமிகளும் படத்தோடு சேர்த்து ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையும் ரசிக்கும் காட்சி



    இந்த ரசிகர் கை தட்டுகிறாரா அல்லது கும்பிடுகிறாரா ...

    இல்லை இல்லை ... இரண்டுமே செய்கிறார் ... எனத் தோன்றுகிறதல்லவா ...



    ஆட்டமும் பாட்டமும் ...



    திரைக்கு முன் ரசிகர்கள் ஆடுவதைத் தன் நண்பருக்கு சுட்டிக் காட்டுகிறாரா இவர் ...



    இந்தக் கொண்டாட்டங்களெல்லாம் மீண்டும் எப்போது ...



    ஆல்பர்ட் அமர்க்களங்கள் ...நிழற்படங்களின் நிறைவு

    நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #456
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    [QUOTE=RAGHAVENDRA;1025211]இன்றைய [ 10.03.2013 ] தினம் மறக்க முடியாத நாள். சென்னை நகரில் இப்படி ஓர் அளப்பரையை சமீப காலத்தில் எந்த நடிகரின் படமும் பெற்றிருக்காது என ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்ல வைத்த நாள். சென்னை ஆல்பர்ட்டில் எழுந்த ஆரவாரம் நம் தங்கத் தலைவனாம் நடிகர் திலகத்தை விண்ணுலகில் உசுப்பி எழுப்பி யிருக்கும். வந்திருந்த புதியவர்கள் தங்கள் அனுபவத்தை தாங்கள் பார்த்ததை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரே வார்த்தை

    பிரமிப்பு

    ஆட்சியில் இருந்தவரில்லை, அதிகாரம் படைத்தவரில்லை, உண்மையைத் தவிர வேறேதும் அறிந்தாரில்லை, இப்படிப் பட்ட ஓர் உன்னத மனிதரை, இறந்து 11 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த அளவிற்கு வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்றால் அது உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.

    இன்றைய தினம் ஜனத் திரளில் ஆல்பர்ட் திரையரங்கும் திக்கு முக்காடிப் போனது உண்மை. ஏதோ திருவிழாவிற்கு வருவது போல் மக்கள் வருகையைக் கண்டு பிரமித்துப் போனவர்களில் பலர் என்றாலும் குறிப்பிடத் தக்கவர்



    வெண்கலக் குரலோன் டி.எம்.சௌந்தர் ராஜன் அவர்கள்.

    விரிவான இடுகை தொடரும் முன்,

    நாமெல்லாம் இத்திரியில் இணையக் காரணமான முரளி சாரின் திரு முகத்தைப் பார்ப்போமா



    Murali Srinivas எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் தான் முரளி சார். அவரை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். நடிகர் திலகத்தின் புகழை இம் மய்யத்தின் மூலம் ஊரறியச் செய்யும் அத் திருக்கரங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அத் திருமுகத்தைப் பார்க்க வேண்டாமா.



    இன்று நம்முடைய மய்ய நண்பர்கள் திருவாளர்கள் நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், பம்மலார், பார்த்த சாரதி, கிருஷ்ணா ஜி, பால தண்டபாணி, திரு ராதா கிருஷ்ணன் என பெரும்பாலானோர் வந்திருந்தனர். நமது மற்றோர் ஹப்பர் திரு ராமஜெயம் அவர்களும் வந்திருந்தார்.

    அளப்பரை கூட்டம் அலங்காரம் போன்ற அனைத்தையும் பற்றித் தொடரும் பதிவுகளில் பார்ப்போம். ஆனால் அதற்கெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும் இந் நிழற்படத்தைப் பார்ப்போமா .. பக்கம் பக்கமாய் நாம் எழுத எண்ணுவதை இப்படம் ஒன்றே விளக்கிடுமே.

    [/QU

    ALBERT THEATRE ALAPARAI STILL LINGERING IN MY MIND GREAT WRITEUP BY RAGHAVENDRA MURALI OTHERS IDHU POLA ELLA NT PADANGALUM VANDHU RASIGARGALAI IN PARTICULAR PRESENT GENERATION REACH PANNAVENDUM. YESTERDAY one more incident
    TMS Wanted to enjoy the movie by sitting in front rows and he did so amidst rasigargal aarpattam. a memorable SIVAJI RATHIRI.

  8. #457
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Dear Goldstar Satheesh sir and friends,

    Vasandha Malligai not only released in Sydney, but in (Saudi Arabia) Jeddah city also.

    Yesterday evening I have screened Vasandha Malligai cristal clear DVD in my home in wide LCD tv and invited my friends with their family. Nearly 30 audience gathered in my home and fully enjoyed the movie. In between we shared the enjoyment going on Chennai Albert and whole Tamil Nadu.

    after the show we distributed snacks and pepsi to all and were talking about each scene of VM, for more than an hour.

    So happy that we also celebrated Vasandha Maaligai release in Saudi Arabia.

  9. #458
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Dear Goldstar Satheesh sir and friends,

    Vasandha Malligai not only released in Sydney, but in (Saudi Arabia) Jeddah city also.

    So happy that we also celebrated Vasandha Maaligai release in Saudi Arabia.
    Good on you Mr. Adiram, its glad to know that Vasantha Maligai has been re-released around the world same day like in TN. I hope VM re-released in Vietnam by Mr. Gopal....

    Cheers,
    Sathish

  10. #459
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Good on you Mr. Adiram, its glad to know that Vasantha Maligai has been re-released around the world same day like in TN. I hope VM re-released in Vietnam by Mr. Gopal....

    Cheers,
    Sathish
    Satish,
    You guessed it right. Saturday one show along with Amour, sunday one more show along with Argo.Sunday Night again, special show with selected scenes, oru kinnaththai,kudimagane, adi-vashi (Plum) scene and mayakkamenna till mid-night. I really envied our fortunate brothers in Albert and kept disturbing them with my calls.

  11. #460
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //இன்னும் நிறைய பேசலாம்!//

    Murali sir,

    peasa vendum. Neengal pesikkonde irukka vendum.

    Naangal kettukkonde irukka vendum.

    By the help of your sweet varnananai and Raghavendar sir's superb photos, we were mentally inside chennai albert theatre.

    Thanks a lot.

Page 46 of 63 FirstFirst ... 36444546474856 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •