Page 54 of 63 FirstFirst ... 4445253545556 ... LastLast
Results 531 to 540 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #531
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரசிக வேந்தர் சார்,

    ஒன்றும் சொல்வதற்கில்லை. விதியைத் தான் நொந்து கொள்ள வேண்டும். அனைவரது உழைப்பும் விழலுக்கிழைத்த நீராகி விட்டது.

    வருத்தத்துடன்
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #532
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுரை நகர் வீதியிலே மாமன்னனின் வசந்த மாளிகை
    மக்கள் நெஞ்செல்லாம் அவருடைய ஆளுகை
    கொண்டாட்டங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
    நம்மை மகிழ்வூட்டுவது
    வாசுதேவனாரின் திருக்கை

    நன்றி சார், இலவசமாக மதுரை நகரை சுற்றிப் பார்க்க வைத்தமைக்காக...
    எங்கெங்கு காணிணும் மாளிகையடா... என கூற வைக்கிறது தங்களுடைய நிழற்படங்கள்.
    தங்களுக்கும் தங்களுக்கு இவற்றை அனுப்பி வைத்த அன்பருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #533
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
    வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #534
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    10-3-2013 சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடந்த 'வசந்த மாளிகை' உற்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதி தங்கள் முன் விடியோவாக. நம் இதய தெய்வத்திற்கு மாலைகள் ஊர்வலமாக எடுத்து வரும் காட்சிகளும், ஊர்வலத்தில் ரசிகர்களின் உற்சாக நடனங்களும். கண்டு மகிழுங்கள். இதய தெய்வத்தின் புகழ் பாடுங்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #535
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thank you Vasu for Madurai VM photos

    Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks to Vasu sir

    for your commitment to bring Madurai VM celebration and posters photos. So colourful and having complete satisfaction to see these posters and feel like been in Madurai.

    Thanks again.

    Cheers,
    Sathish

  7. #536
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
    வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?
    பின்னணி இசையில் எதுவும் மாற்றமில்லை மாற்றப் படவுமில்லை. ஆனால் ஒலிச் சேர்க்கை அல்லது ஒலியின் தரம் அல்லது ஒலியின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் பரவலாக வருத்தம் நிலவுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #537
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரே சமயத்தில் கடலூரிலும், மதுரையிலும் சென்னையிலும் நம்மை உலா வர வைக்க வாசு சார் ஒருவரால் மட்டும் தான் முடியும்...

    சூப்பர் சார் ....

    கலக்குங்க...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #538
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
    வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?
    டியர் ஜோ சார்,

    சினிமாஸ்கோப்பில் Restoration செய்யும்போது காட்சிகளின் resolution elaborate ஆகும் போது குவாலிட்டி அடிபட்டுப் போகாமல் கவனமாக கையாள வேண்டும். அதுமட்டுமல்ல... நிறைய இடங்களில் தலைப்பகுதி horizontal position இல் மேற்புறத்திலும் சரி, கீழும் சரி... வெட்டப்பட்டு அதாவது தலைபகுதி கட்டாகி பார்க்கவே என்னவோ போல் இருக்கிறது. ஆடியோ seperation அறவே இல்லை. 2.1 channel இல் கூட நன்றாக இசை பிரியும். ஆடியோ பிரியவே இல்லை.

    ஈஸ்ட்மென் கலரில் நம் கண்களை காந்தமாய் இழுத்த காவியம் இப்போது வெளுத்துப் போய் நம்மை வெறுத்துப் போ என்கிறது. வசந்தமாளிகையை நடிகர் திலகம் வாணிஸ்ரீக்கு சுற்றிக்காட்டி பேசும் போது தலைவரும் வாணிஸ்ரீயும் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது. எவ்வளவு முக்கியமான சீன் அது! வெறும் வசனம் மட்டுமே காதில் விழுகிறது. வெளுத்துப் போன நிறங்களில் காட்சிகள் தெரிகின்றன. காட்சிகளின் போது குறிப்பாக இடது புறத்தில் ரவுண்ட் வடிவில் ஒரு வெள்ளை வட்டம் வந்து தெரிந்து உயிரை வாங்குகிறது. ஒரு சில இடங்களில் காட்சிகள் அப்படியே மழுங்கி அப்புறம் கொஞ்சம் தெளிவாகின்றன.

    இத்தனைக்கும் ஆல்பர்ட் திரையரங்கிற்காக வேண்டி சில காட்சிகள் மீண்டும் ஓரளவிற்கு சரி பார்க்கப்பட்டதாக சொல்கிறார்கள். சண்டே அன்று பார்க்கும் போது பெட்டராகத் தான் இருந்தது. பாடல் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. ஆனால் கலர்புல்லாக இல்லை.

    பேசாமல் 35mm இலேயே release செய்திருக்கலாம் என்று பலபேர் கூறுவதைக் கேட்க முடிந்தது. வண்ணக் கலவை அருமையாக இருந்திருக்கும்.

    எனக்கென்னவோ Restoration என்று ஒன்று நடக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 35mm film சினிமாஸ்கோப்பில் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவே! ஒலி மாற்றமெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை போல் இருக்கிறது.

    Restoration என்பது குறைந்த பட்சம் ஒரு முப்பது ஆண்டுகளாவது மறு வெளியீடுகளில் கை வைக்காமல் திரும்ப திரும்ப ரிலீஸ் செய்ய வைப்பதற்காகத்தான். Restoration செய்யும் நோக்கமும் நம் தலைமுறை வரையிலாவது நாம் அடிக்கடி கண்டு களிக்க ஏதுவாக இருப்பதற்காகத்தான்.

    ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரேஞ்சுக்கு இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. perfection என்பது இந்த மாதிரிப் படங்களுக்கு மிக மிக அவசியம். அதை உணர்ந்து வெளியிட்ட மாதிரி தெரியவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அத்துணை சிவாஜி ரசிகர்களும், ஏன் பொது மக்களும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி இருப்பது தெரிகிறது. பல பேருடைய உழைப்பு சில பேருடைய அலட்சியத்தினால் வீணடிக்கப்பட்டிருகிறது. கர்ணன் பெற்ற வெற்றியை வசந்த மாளிகை ஏன் பெறவில்லை என்ற கேள்வி எழுந்தால் எப்படி விடை சொல்வது என்று குழம்பிப் போய் நிற்கிறோம். திருவிளையாடல் மிக அருமையாக Restoration செய்யப்பட்டு இறுதியில் விநியோக சட்ட சிக்கல்களினால் நம கண்ணெதிரிலேயே சின்னா பின்னமானது. அந்த அதிர்ச்சியை வசந்த மாளிகை மூலம் மீட்டுத் தருவார்கள் என்று ஆசையாய் இருந்தோம். அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ. இனி ஆண்டவன் விட்ட வழி.
    Last edited by vasudevan31355; 13th March 2013 at 10:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #539
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #540
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சதீஷ் சார்,

    போதுமா... இன்னும் இருக்கிறதா? அடேயப்பா!... இத்தனை நன்றிகளா! அத்தனை நன்றிகளுக்கும் சேர்த்து என் அன்பு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 54 of 63 FirstFirst ... 4445253545556 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •