Page 340 of 398 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3391
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    உங்கள் பாராடுக்களுக்கு நன்றி

    என் தவம் தலைவன் பணி செய்து கிடப்பதே

    இது என் அனுபவம்



    Kanavan film
    கணவன் படம் kotehena colombo திரை அரங்கில் மிண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடியபோதில் ஒரு நாள் கல்லூரியை cut அடைத்து விட்டு கையில் புத்தகத்துடன் காலைக் காட்சிக்கு நான் போனேன். இடைவேளையின் போது எனது பக்கத்து இருக்கையில் உள்ள தலைவர் ரசிகர் , கடை ஒன்றில் வேலை செய்பவர், எனக்கு கூல் டிரிங்கும் சுடச் சுட வடையும் வாங்கித் தந்தார். மறுத்த போதும் என்னை force பண்ணி வாங்க வைத்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர, அதன் பின் எனக்கு சொன்னவை .


    படிக்கும் காலத்தில் படிக்க வேண்டும், காலத்தே பயிர் செய்ய வேண்டும் , இனிமேல் கல்லூரியைக் cut பண்ண கூடாது.


    எனக்குத் தெரியாத் ஓர் அன்பர், நான் MGR ரசிகர் என்பதால் மட்டுமே தன பணம் செலவு செய்து என் வயிறு நிரம்பிய பின் தலைவர் போலவே எனக்கு அறிவுரையும் தந்தார் நான் நலம் வாழ.


    MGR போல் அவர் ரசிகர்களும் மனித நேயம் கொண்டவர்கள் அன்றி வேறில்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3393
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    தேங்க்ஸ் வினோத் சார்..இது எப்பொழுது, எங்கே, யாரால் நடத்தப்பட்டது சார்

  5. #3394
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கலியபெருமாள் சார்

    சமீபத்தில் இனைய தளத்தில் youtube -வீடியோ பதிவுகள் காணும் போது மக்கள் திலகத்தின் பெயரால் நடத்த பட்ட விழா தெரிந்தது . உடனே பதிவு செய்தேன் .

  6. #3395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில்
    தெய்வீக படங்கள்
    புராண படங்கள்
    மாயாஜால படங்கள்
    சரித்திர படங்கள்
    சமூக படங்கள் என்றெல்லாம் பல்வேறு வந்து அந்தந்த கால கட்டங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது .
    1950 ஆண்டின் துவக்கத்தில் பல சமூக படங்களில் அண்ணன் -தங்கை உறவு பற்றிய பல படங்கள் வந்தாலும்
    முதன் முதலில் 1952ல் வந்த மக்கள் திலகத்தின் என்தங்கை படம் மிக பெரிய வெற்றி படமாகவும் அண்ணன் -தங்கை உறவு பற்றிய அருமையான ,படமாகவும் , சிறந்த நடிப்புடன் மக்களின் ஆதரவை பெற்ற படமாகவும் வந்தது .
    இன்று படம் பார்த்தாலும் மக்கள் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பும் - கதையும் காண்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவு இருப்பது தெரியும் .

    1947- 1952 இந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் ராஜ -ராணி கதை ஒட்டியே வந்தது .
    எம்ஜியாரால் குடும்ப கதைகளில் நடிக்க இயலாது என்று பல பத்திரிகைகளும் , விமர்சகர்களும் கிண்டல் செய்தார்கள் .
    1952ல் என் தங்கை யில் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பாற்றலை பார்த்த பின்னர் அனைவரும்
    வியப்பில் பாராட்டியது உண்மையான சம்பவம் .

    பின்னர்
    அந்தமான் கைதி
    பணக்காரி
    குமாரி
    கூண்டுக்கிளி
    மலைக்கள்ளன்
    தாய்க்கு பின் தாரம்
    தாய் மகளுக்கு கட்டிய தாலி
    நல்லவன் வாழ்வான்
    போன்ற சமூக படங்களில் வெற்றிகரமாக நடித்து மக்கள் மனங்களில் மக்கள் திலகமாக உயர்ந்தார் .

  7. #3396
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3397
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை."

    இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.

    தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!

    இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள

    என்தங்கை பட்டி தொட்டி எங்கும் நன்கு ஓடி வசூலில் சாதனை படைத்தது .

  9. #3398
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
    மக்கள் திலகம் எம்ஜியார் .

  10. #3399
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்!

    பரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.

    ''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.

    ''ஒரு கரடி இருக்கிறதாமே...''

    ''இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!

    ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    ''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.

    அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.

    ''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.

    ''அதுதான் கோயில்?''

    ''என்ன கோயில்?''

    ''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''

    ''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.

    ''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.

    ''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

    '' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''

    ''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''

    நான் ஒன்றும் சொல்லவில்லை.

    பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.

    ''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!

    நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.

    ''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.

    சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.

    எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

    '' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.

    அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.

    கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.

    ''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.

    ''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.

    ''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.

    அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.

    எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!

    ''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''

    ''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''

    ''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''

    ''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''

    ''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''

    ''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.

    அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்.

  11. #3400
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    அன்பு நண்பர் திரு வினோத் அவர்கள் அறிவது -

    திரைப்படங்கள் அல்லாமால் இது போன்ற video clipping ஐ, பலரும் அறியும் வண்ணம் பதிவேற்றம் செய்வது மிக்க மகிழ்ச்சிக்குரியது. பாராட்டத் தக்கது

    "என் தங்கை" ஒரு வெள்ளி விழாப் படமும் கூட. அண்ணன்-தங்கை பாசத்தினை மையமாக கொண்டு இதுவரை வெளியான மற்ற எல்லா படங்களுக்கும் இது தான் முன்னோடி.

    நமது இதய தெய்வம் ஈடுபட்ட எல்லாத் துறையிலும் ஒரு தனித்துவம் பெற்று, மகத்தான சாதனை படைத்தவர். அப்படிப்பட்ட ஒரு கலியுக கடவுளுக்கு நாம் எல்லாம் பக்தர்களாய் விளங்கி வருவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

    ஓங்குக எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள். இறைவன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •