Page 347 of 398 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3461
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
    ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..


    இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


    மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..பிற நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை இந்த ஒரு படம் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் வெற்றிப்படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..
    தங்களின் விமர்சனம் மிகவும் அருமை
    நன்றி கலியபெருமாள் சார்
    அதேபோல் எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் புதுச்சேரி பதிவுகள் அத்தனையும் அருமை சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3462
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு முரளி அவர்களின் ஆதங்கம் புரிகின்றது .

    தமிழ் மொழி - இனம் - கலாசாரம் - இந்திய அரசியல் - உலக அரசியல் - அந்நிய சகோதர மண்ணில் கண்ணீர்

    இந்திய அரசியலில் பாழாய் போன நிர்வாக கோளாறுகள் - சட்டத்துறையில் ஓட்டைகள் - நீதி துறையில் பணமுதலைகள் - காவல் துறையின் அட்டூழியங்கள் - முதலாளிகளின் பகல் வேஷங்கள் - மக்களை சோம்பேறி களாக்கும் இலவசங்கள் - உழைக்க மறுக்கும் இளம் வயதினர்கள் - கட்டு கோப்பில்லாத பெற்றோர்கள் - பிள்ளைகள் -
    இளம் பருவத்தினரை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அரசியல்வாதிகளின்
    ஊடகங்கள் - ஆபாசமான ஆடை அலங்காரம் - எல்லை மீறிய பாலுணர்வு தூண்டும் காட்சிகள்
    தினசரி - வார - மாத இதழ்கள்
    எதற்குமே தணிக்கை இல்லாத அவல நிலை
    பெரிய திரை - சின்ன திரை எல்லா மொழிகளிலும் மக்கள் மனதில் விஷத்தை ஊற்றி பணம் சேர்க்கும்
    முதலைகள் - கல்வி - மருத்துவம் இரண்டும் அரக்கன் களில் கையில்
    இப்படி எல்லா துறையிலும் கண்ணீர் வரும் அவல நிலையில் நம் நாடு உள்ளது .எனவே நாடு நடப்பு எல்லாம் எங்களுக்கு நன்கு புரியும் .

    இந்த கவலை எல்லாம் மறக்கத்தான் நாங்கள் எல்லோரும் மையம் திரியில்

    மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களின் புகழ் பரப்பி அவரது கலை -அரசியல் பொற்கால நிகழ்வுகளை அசை போட்டு மனம் மகிழ்ந்து பயணிக்கிறோம் .
    எங்கள் பயணத்தில் மக்கள் திலகம் எம்ஜியார் மட்டுமே இலக்கு .
    Last edited by esvee; 23rd March 2013 at 07:54 PM.

  4. #3463
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    தங்களின் புதுமையான தலைவனின் பதிவுகள் அதனையும் அருமை இரவிச்சந்திரன் சார் நன்றி

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

  5. #3464
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3465
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சக்கரவர்த்தித் திருமகள்
    வெளியான தேதி : 18-01-1957
    மொத்தப் பாடல்கள் : 13
    =============================
    இயக்கம் : ப.நீலகண்டன்

    தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்
    தயாரிப்பாளர் : ஆர்.எம்.ராமநாதன்

    நீளம் : அடி

    கதாநாயகன் : எம்.ஜி.ஆர்
    கதாநாயகி : அஞ்சலி தேவி

    இசையமைப்பாளர் : ஜி.ராமநாதன்
    பாடலாசிரியர்கள் : தஞ்சை ராமையாதாஸ்,கே.டி.சந்தானம்,கு.சா.கிருஷ்ண மூர்த்தி,கு.மா.பால.சுப்ரமணியம்,
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,க்ளவுன் சுந்தரம்
    பாடகர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, டி.வி.ரத்னம், சீர்காழி.எஸ்.கோவிந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், எஸ்.வரலஷ்மி, ஏ.பி.கோமளா, என்.எஸ்.கிருஷ்ணன்
    இசைக்குழு : ஜி.ராமனாதன் கோஷ்டி


    நடிகர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.சகாதேவன், ஆர்.பாலசுப்ரமண்யம், டி.ஆர்.நடராஜன், ராமராவ், வீராசாமி, கோப்ராஜ், பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.பொன்னுசாமி பிள்ளை, பி.பி.ரெங்காச்சாரி, எம்.லட்சுமணன், எஸ்.கே.கரிக்கோல்ராஜ், குண்டுமணி,
    கொட்டாபுளி ஜெயராமன்
    நடிகைகள் : எஸ்.வரலட்சுமி, டி.ஏ.மதுரம். பி.சுசீலா, டி.பி.முத்துலட்சுமி, லட்சுமி பிரபா

    நடன இயக்குநர்கள் : ஸோகன்லால், தங்கராஜ்
    நடனக் கலைஞர்கள் : ராகினி, இ.வி.சரோஜா, ஜி.சகுந்தலா, தங்கம், சுகுமாரி

    சண்டைப் பயிற்சி : ஆர்.என்.நம்பியார்

    உதவி இயக்கம் : எம்.லட்சுமணன், மோகன், சி.பொன்னுசாமி

    கதை : பி.ஏ.குமார்

    வசனம் : இளங்கோவன்

    தயாரிப்பு உதவி : கோபால் நாயர், ஹரிஹரன், சுப்ரமணியன்

    ஒளிப்பதிவு : வி.ராம்மூர்த்தி
    உதவி : கர்ணன், சாயி, எஸ்.என்.சட்டர்ஜி.

    ஒலிப்பதிவு : கிருஷ்ணய்யர் (வாஹினி), மோகனசுந்தரம்,எம்.வி.கருணாகரன் (நியூடோன்), டி.எஸ்.ரங்கசாமி, (ரேவதி)

    பின்னணி ஒலிப்பதிவு : ராஜகோபால்

    படத்தொகுப்பு : ஆர்.தேவராஜ்ன்
    உதவி : வி.பி.கிருஷ்ணன், தேவதாஸ்

    கலை : சையது அகமது

    ஆடை அலங்காரம் : எஸ்.நடராஜன், என்.அப்பாராவ்
    உதவி : முத்து, வெங்கடேஸ்வரராவ்

    ஒப்பனை : ஹரிபாபு, ராமதாஸ்
    உதவி : பி.கிருஷ்ணராஜ், ஆறுமுகம்

    புகைப்படங்கள் : ஆர்.வெங்கடாச்சாரி

    படப்பிடிப்பு நிலையம் : வாஹினி, நியூடோன், ரேவதி, நெப்டியூன்

    வெளியீடு : ஏ.எல்.எஸ்

  7. #3466
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலை காட்சியில்

    மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன் - திரைப்படம்

    ஒளிபரப்பபடுகிறது .

  8. #3467
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3468
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    பொல்லாமையைப் போக்கி மக்களின் மனத்தை மாற்றியைக் கொடுமை என்றது உங்கள் அரசாட்சி . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் , வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி . அணைக்கத் தாவும் என் மனசாட்சி . ஏன் இப்படி ? எதற்க்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டின் தலைவன் ஆகும் வரை உங்கள் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளுக்கு எல்லையே இல்லை என்று முடிவு செய்து புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல ; அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு ; கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை ; குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை . கத்தி எடுக்காத , ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .

    A MGR dialogue from Nadodi Mannan.




  10. #3469
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    Slow motionல் இந்தக் காட்சிகள் மேலும் அழகாக இருக்கின்றன. பதிவிட்டமைக்கு நன்றி.

  11. #3470
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன் அவர்களுடன் மக்கள் திலகம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •