திரு கலியபெருமாள் அவர்கள் அறிவது :

நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் சுடப்படுவதற்கு முன்னே, நடித்த மேலும் சில காட்சிகள் :


1. "அடிமைப்பெண்" திரைப்படத்தில், நமது மக்கள் திலகம் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மற்றும், அபிநய சரஸ்வதி திருமதி. சரோஜா தேவி - புன்னகை அரசி திருமதி கே. ஆர். விஜயா அவர்களுடன் இணைந்து நடித்த சில காட்சிகள்.


2. "அன்னமிட்ட கை" திரைப்படத்தில் சில ஆரம்ப காட்சிகள்,


3. "புதிய பூமி" படத்தில் நமது பொன்மனசெம்மலுடன் , ஜெயலலிதா உணவை பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவை காட்சி


4. "குடியிருந்த கோயில்" திரைப்படத்தில் - ஆடலுடன் பாடலை கேட்டு ( உலக சினிமா வரலாற்றில் 'பாங்காரா' நடனத்துடன் இடம்
பெற்ற ஒரே பாடல்) என்ற பாடல் காட்சி , நீயேதான் எனக்கு மணவாட்டி மற்றும் நான் யார் நான் யார் நீ யார் ? பாடல் காட்சிகள்,

ரயில்வே ஆவணங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெறும், படத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் இரு நாயகர்களும் சந்திக்கும்
அருமையான காட்சி


5. "அரசகட்டளை" படத்தின் 60 சதவிகித காட்சிகள்


6. "ராஜா வீட்டு பிள்ளை" என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட "ராஜா வீட்டு பெண்ணானாலும் நியாயம் இருக்கணும்" என்ற பாடல் காட்சி.

(பின்பு இத்திரைப்படம் ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடி நடிப்பில் வெளியானது)


குறிப்பு : "நம் நாடு" மற்றும் "தலைவன்" ஆகிய திரைப்படங்களின் எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை.



தகவல்கள் அளித்து உதவியவர் - திரு. ஏ.எஸ். கலைமணி, கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, சென்னை.


திரு. கலைமணி அவர்களுக்கு நன்றி


அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்