-
8th April 2013, 12:28 AM
#2521
Senior Member
Seasoned Hubber
இன்றைய மாலைப் பொழுது மறக்க முடியாத பொழுதுகளில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.
100 ஆண்டு காண உள்ள தமிழ்த் திரையுலகைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முக்கிய காரணமாயிருக்கும் திரு அனந்தன் அவர்களை கௌரவித்தது, நம்மை நாமே கௌரவித்துக் கொண்டதற்கு சமம். நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் மூலம் அது நிறைவேறியிருப்பது பேரானந்தம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th April 2013 12:28 AM
# ADS
Circuit advertisement
-
8th April 2013, 05:47 AM
#2522
Junior Member
Newbie Hubber
P_R,
I am in 1000% agreement with you. It is the best complete Tamil Movie ever made.
Last edited by Gopal.s; 8th April 2013 at 05:53 AM.
-
8th April 2013, 05:49 AM
#2523
Junior Member
Newbie Hubber
P _R , முரளி,ராகவேந்தர்,
நான் யாரை பார்த்தும் வயிற்றெரிச்சல் பட்டதில்லை. ஆனால் சிக்கலாரை பெரிய திரையில் நேற்று கண்டு களித்த அனைவர் மீதும்........ H mmm . Ex -Pat ஆக வாழ்வதின் சோகம் இந்த மாதிரி பொன்னான தருணங்களை வாழ்க்கையில் இழப்பதே.
ஒரே அசல் தமிழ் படம். இந்திய அளவிலேயே பார்த்தாலும் சிறந்த ஐந்துக்குள் வரும்.
முழு கதையை bind form இல் படித்துள்ளேன். (ஆஹா! இந்த சுகமே அலாதி) விடுமுறை நேரங்களில் அம்மாவின் வழி பாட்டி தாத்தா இருந்த திருவிடை மருதூர் சென்று விடுவோம். விறகடுப்பு வெந்நீர் குளியல். (அ ) காவிரி,வீரசோழன் ஆற்று குளியல்(climate பொறுத்து மற்றும் ஆற்றின் தண்ணீர் வரத்து).. பாட்டியின் கும்மிட்டி அடுப்பு சமையல். மதியம் முழுவதும் தாத்தாவின் easy -chair கவர்ந்து,கிணற்றடியில், தென்னை,பாக்கு மர பெரிய தோட்டத்தில், டெல்லி மோடா என்ற விஷயத்தை காலுக்கு தோதாய் வைத்து, ஆனந்த விகடன், குமுதம், கல்கி முதலிய பத்திரிகைகளில் இருந்து கிழிக்க பட்டு தைக்க பட்ட bind செய்த கதைகள்(கிழிக்க பட்ட பக்கங்களில், இந்த புதிருக்கு விடை 71 ஆம் பக்கம் என்று நாம் பார்க்கும் 21 ஆம் பக்கத்தில் இருக்கும். 71 ஆம் பக்கத்திற்கு எங்கே போவது).. பக்கத்தில்(left side) transistor . ceylon ஆசிய சேவை, madras ,trichy ,pondicherry வானொலி.இன்னொரு பக்கத்திலே(right side) சீடை,முறுக்கு,காரா சேவு, தேன்குழல் போன்ற home-made unlimited snacks .
வீட்டின் மேளா போல கும்மோணம்(kumbakonam) போய் சினிமா.ஒரு வாரம் திட்டமிட்டு நடை பெரும் நிகழ்வு. ஹெகல் சொல்லிய Thesis ,Anti -thesis ,Synthesis ஒவ்வொரு சினிமா அனுபவத்திலும் உண்டு.முடிந்தவுடன் "Ariya bhavan" dinner (idli ,dosai க்கு side -dish சாம்பார் ,சட்னி கூட இன்றைய காலங்களில் தரத்தில் தேய்ந்து கொண்டே இருக்கிறது. கலர் கலரான odourless ,tasteless .இன்றைய படங்கள் போலவே )
தாத்தா ,பாட்டி, அம்மா,நான் ,என் தங்கை, தம்பிகள்,அனைவரும், குடந்தை jupiter theatre இல்
டிசம்பர் 15 வாக்கில்.1968.(எனக்கு அரை பரீட்சை லீவ்.) தாத்தாவுக்கு படு favourite படம். ஆனால் புலம்பி கொண்டே இருந்தார்."மன்னவன் வந்தானடி" பாட்டு போல ஒன்று கூட அமையவில்லையே என்று.(high bench mark setting என் ரத்தத்திலேயே ஊறியுள்ள ரகசியம் புரிந்திருக்குமே?)
நேற்று பூரா mood -out . Borges " labyrinth " எடுத்து revise செய்தேன்.ஆனால் மனசு பூரா soviet centre மீது.
Last edited by Gopal.s; 8th April 2013 at 11:20 AM.
-
8th April 2013, 08:01 AM
#2524
Senior Member
Seasoned Hubber
-
8th April 2013, 08:04 AM
#2525
Senior Member
Seasoned Hubber
-
8th April 2013, 08:11 AM
#2526
Senior Member
Seasoned Hubber
-
8th April 2013, 10:11 AM
#2527
Senior Member
Seasoned Hubber
Simpliciy of NT
Guys,
Just watch this video at from 3:09, play back singer Bala Saraswathi Devi praises about our NT and his simplicity.
http://www.youtube.com/watch?feature...=vGUQJhQif9o#!
Cheers,
Sathish
Last edited by goldstar; 8th April 2013 at 10:14 AM.
-
8th April 2013, 10:35 AM
#2528
Junior Member
Seasoned Hubber
Watch tomorrow in Murasu TV NT's Super Hit Comedy
movie Sabhash Meena at 7.30 pm
-
8th April 2013, 11:30 AM
#2529
Moderator
Platinum Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நன்றி P_R பிரபு ராம் ....
இந் நிகழ்ச்சியினைத் தாங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Very much!
நன்றி திரு. ராகவேந்திரன்.
வட்டமெல்லாம்
பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher 
பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows
), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.
பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!
VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.
நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)
முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.
திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்..
).
ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read
இனிமையான தற்செயல்.
திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.
திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.
படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.
ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.
அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)
படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான் 
இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.
once again for the memorable show.
PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன் 
PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.
Last edited by P_R; 8th April 2013 at 11:41 AM.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th April 2013, 12:16 PM
#2530
Junior Member
Seasoned Hubber
Excellent Coverage of the function Mr Raghavendra Sir, as i was out
of station could not make it to the function.
Mr P R Sir,
Again wonderful writeup of your experience of watching the evergreen
classic of Thillana.
Bookmarks