Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள்

    ஆஹா! இந்தப் படம் இளைஞர் திரு. பிரபு ராம் அவர்களை ருஷ்ய கலாச்சார மய்யத்துக்கு வரவழைத்தது ஒரு மகிழ்ச்சி என்றால், அவரது ஆழ்ந்த அலசல்களையும் சேர்த்து இந்தத் திரிக்கு வரவழைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

    ஒரு திரைப்படம் மிகச் சிறந்த படம் என்று சொல்வதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம் - சிறந்த கதை/திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், etc. ஆனால், மிக மிக முக்கியமான தலையாய காரணம் எனக்குத் தெரிந்து ஒன்று தான். காலங்கள் கடந்து நிற்கும் தன்மை - one which stands the test of time!

    ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களிலும் 99 சதவிகிதம் நிறைவை அடைந்த படம் என்றால் அது தில்லானா மோகனாம்பாள் மட்டும் தான். நகைச்சுவை, சோகம், பிரம்மாண்டம் என்று அனைத்து அம்சங்களும் அழகாகவும்/அளவோடும் அமைந்திருக்கும். தான் சார்ந்திருக்கும் சமூகம்/கலாச்சாரத்தைப் பற்றி அமைந்ததும், அனைத்து பாத்திரங்களுக்கும் மிகச் சரியான நடிக/நடிகையர்களைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவரும் தத்தம் பங்கினைச் செம்மையாகச் செய்ததும், ஏ.பி. நாகராஜன் அவர்களின் அற்புத இயக்கமும், இந்தப் படத்தைக் காலங்கள் கடந்து நிற்கின்ற படமாக்கி விட்டது. 100 சதவிகிதம் கிடைக்காததற்கு மிக முக்கிய காரணம் படத்தின் இறுதியில் வரும் மதன்பூர் எபிசோட் தான்! இதில் குறை ஏதும் இல்லை; இருப்பினும், அது வரை இருந்த வேகத்தையும் சரளத்தையும் சற்றே குறைத்து விட்டது. நலம் தானா பாடலுடன் முடிந்திருந்தால், உலகத்திலேயே இது தான் சிறந்த திரைப்படம் என்கிற அளவிற்குச் சென்றிருக்கும்!

    நடிகர் திலகம் மிக மிக நேர்த்தியாகவும், அதே சமயம் சரளமாகவும், பாத்திரத்திற்கு என்ன எவ்வளவு தேவையோ அதை மிகச்சரியாகத் தந்து நடித்த பல படங்களில் இது தலையாய படம். (திரு. கோபால் அவர்களின் கட்டுரையில் சொல்வது போல், அவர் பல தரப்பட்ட பள்ளி நடிப்பை வெவ்வேறு படங்களில் நடித்து விட்டது வேறு விஷயம்.) இத்தனைக்கும், இந்தப் படம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புதிய இன்னொரு பாட்டையில் - "தங்கை" மூலம் பயணிக்கத் துவங்கி விட்டார்! புதிய இளைஞர் கூட்டம் அவரை ரசிக்கத் துவங்கி விட்டது! (இது போன்ற படங்கள் எந்தப் பள்ளிகளிலும் வராதோ!)

    இன்று காலை எங்கள் நிறுவனத்திற்கு வந்திருந்த ஒரு Trainer-இடம் பேசிக் கொண்டிருந்த போது தெரிந்தது அவரும் என்னைப் போல் நடிகர் திலகம் மற்றும் கவியரசுவின் ரசிகர் என்று. அவரிடமும் இதைப் பற்றி தான் பேசி கொண்டிருந்தேன் (of course உணவு இடைவேளை நேரத்தில் தான்). 1968-ஆம் வருடத்தில் தான் அவர் எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்று (மேலும் பல வருடங்கள் உண்டு - தில்லானாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் இந்த வருடம்) - திருமால் பெருமை - (பக்திப் படம்); ஹரிச்சந்திரா (புராணப் படம்); கலாட்டா கல்யாணம் (முழு நீள நகைச்சுவை); என் தம்பி (காரம், மணம், குணம், ஸ்டைல் நிறைந்த மசாலா - அற்புத நடிப்பையும் தாங்கி); தில்லானா (எல்லாம் சொல்லியாகி விட்டது); எங்க ஊர் ராஜா (மசாலா செண்டிமெண்ட் ஒருங்கிணைந்த ஜனரஞ்சகம்); லட்சுமி கல்யாணம் (ஒரு விதமான கலைப் படம் - off beat to a great extent - திரைக்கதையில் சொதப்பியிருந்தாலும்!); உயர்ந்த மனிதன் (மிகச் சிறந்த உயர் தரக் குடும்பப் படம்).

    அது எப்படி இவரால் மட்டும் ஒரே நேரத்தில் விமர்சகனுக்கும், அனைத்து தரப்பினருக்கும், வெகு ஜனத்திற்கும், தன்னுடைய ரசிகனுக்கும், தனக்கும் (ஆத்ம திருப்தி) நடிக்க முடிந்தது?

    தொடரும்.....

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

    P.S.:- திரு பிரபு ராம் - "ங்கொப்புரான" - நான் சொல்லவில்லை! "ஏய்..." சொன்னது - அது நாந்தேன் ஹி...ஹி... (இந்த முழுப் படத்தில் நடிகர் திலகத்தின் ரசிகனுக்கான பிரத்தியேக நடிப்பு இந்த ஒரு இடத்தில் தான் - எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்களே!)

    நலந்தானா பாடலில் - நானும் அன்று தான் கவனித்தேன் - மூலையில் focus ரேஞ்சின் மூலையில் இருக்கும் வடிவாம்பாளின் கடு கடு முகத்தை! ஏ பி என் - இவரது நுணுக்கம் மற்றும் [பரிபூரணத்துவம் வியக்க வைக்கிறது. இதே குணங்கள் நடிகர் திலகத்திடமும் இருந்ததால் தான் இருவரும் இணைந்து காலத்தைக் கடந்து நிற்கின்ற படங்களைத் தந்தார்கள்!)
    Last edited by parthasarathy; 10th April 2013 at 05:21 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •