-
11th April 2013, 04:50 PM
#2641
Senior Member
Veteran Hubber
தில்லானா மோகனாம்பாள் பற்றிய ஆய்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. இதற்கு முந்திய ஆய்வுகளில் இருந்து சற்று வேறுபட்டு, புதிய கோணங்களில் அலசப்பட்டிருந்தது. ஆய்வுகளை சிறப்பாகச் செய்திருந்த கோபால் சார், ராகவேந்தர் சார், கண்பட் சார், பிரபுராம் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி.
-
11th April 2013 04:50 PM
# ADS
Circuit advertisement
-
11th April 2013, 04:54 PM
#2642
Senior Member
Veteran Hubber
கவரிமான் (06.04.1979 - 06.04.2013)
முப்பத்தைந்தாவது ஆண்டு துவக்கம்.
நடிகர்திலகத்துக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதுவரை தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட்டு, அப்போது கொடிநாட்டத்துவங்கியிருந்த புதிய தலைமுறையினருடன் நடிகர்திலகம் இணைந்த முதல் படம். இசைஞானி இளையராஜாவுடன் மூன்றாவது படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சுவின் கதை வசனம், பாபுவின் ஒளிப்பதிவு என முற்றிலும் புதிய கூட்டணி அமைந்த படம். ஆச்சாரமாகவும் கௌரவமாகவும் வாழும் ஒரு மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நாகரிக மோகம் கொண்ட ஒரு மனைவியால் / மகளால் ஏற்படும் சீரழிவை மிக அற்புதமாக சொன்ன படம்.
1979 ஏப்ரல் துவக்கம், ஜனவரியில் வெளியாகியிருந்த திரிசூலம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மகத்தான காலகட்டத்தில், திரிசூலம் அனைத்து அரங்குகளிலும் 71-வது நாளாக வெற்றி நடை... இல்லையில்லை.. வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏப்ரல் 6 அன்று வெளியானது கவரிமான் என்ற அற்புத திரைக்காவியம்.
சென்னையில் மிட்லண்ட், பிராட்வே, உமா, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 6 காலை சாந்தியில் அகில இந்திய சிவாஜி மன்றத்துக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதற்காக இரண்டு நாட்கள் முன்பாகவே எங்கள் மன்ற தலைவர் பார்த்தசாரதி மூலம் டிக்கட்டுகளை வாங்கி விட்டோம். அதற்கு முதல் நாளிரவு 12 மணி வரை மிட்லண்ட் தியேட்டரில் அலங்காரங்கள் நடப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம. எங்கள் மன்றத்தின் சார்பில் வழக்கம்போல தலைவரின் கட் அவுட்டுக்கு ராட்சத காகித மாலை ஏற்பாடு செய்திருந்தோம். வடசென்னை மிண்ட் ஏரியாவில் காகித மாலைகள் செய்யும் ஒரு குழுவினரிடம் ஆர்டர் கொடுத்திருந்ததை இரவு 9 மணிக்கு நானும் கோவை சேது, மந்தவெளி ஸ்ரீதர் முவரும் ஆட்டோவில் சென்று வாங்கி வந்ததும் மற்ற நண்பர்கள் மேலே ஏறி அதனைபபொருத்தும் வேலையில் ஈடுபட்டனர். மற்ற மன்றங்களின் அலங்காரங்களும் விமரிசையாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. தியேட்டர் ஊழியர்களும் ஒத்துழைத்தனர்.
மறுநாள் காலை 8 மணிக்கே சாந்தியில் கூடி விட்டோம். அங்கங்கே சிறுசிறு வட்டங்களாக ரசிகர்கள் கூடி நின்று தமிழகமெங்கும் திரிசூலத்தின் அபார ஓட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டும், வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்தித்தாள்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் பரவ விட்டுக்கொண்டு இருந்தனர். சென்னை மாரீஸ் ஹோட்டலில் பணி செய்த நண்பர் சந்திரசேகர், திருச்சி தினத்தந்தி பதிப்புகளை வரவழைத்து அங்கு சுழற்சி முறையில் வலம் வரச் செய்து கொண்டிருந்தார். திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம், மாயவரம், பகுதிகளில் திரிசூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது மனதுக்கு உற்சாகமாக இருந்தது.
சாந்தியில் ஒன்பது மணிக்கு ஸ்பெஷல் ஷோ துவங்கியது. ஆரம்பமே மிக வித்தியாசமான படமாக இருந்தது. யேசுதாஸின் கர்னாடக பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. பாத்திரங்களின் அறிமுகம் சற்று குழப்பமாக இருந்தபோதிலும் அந்த டைனிங் டேபிள் காட்சி சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. பூப்போலே பாடலுக்கு தலைவர் ஸ்டைலுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது. ரசிகர்மன்ற ஷோவாச்சே. அதனால் காட்சிக்கு காட்சி கைதட்டல். பூப்போலே பாடலுக்கு பிரமீளாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு எடுத்ததால் சற்று உறுத்தியது. (நடிகர்திலகத்தின் படத்துக்கு கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிரமீளா பிஸியா என்ன)
ரவிச்சந்திரன் வரும் காட்சிகள் சைலன்ட்டாக ஓடின. ரசிகர்கள் ரொம்பப்பேர் அந்த ரோலில் ரவிச்சந்திரனை விரும்பவில்லை. டெல்லி போன தலைவர் பயணம் ரத்தாகி வீட்டுக்கு வர, பஸ்ஸர் ஒலிக்கும் காட்சியிலேயே கைதட்டல் துவங்கி விட்டது. வேலைக்காரியின் சமாளிப்பை ஏற்று வேறு பக்கம் செல்ல இருந்தவர், மாடியில் தன அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்தே தலையைத் திருப்பிப் பார்க்கும் இடத்தில் மீண்டும் பலத்த கைதட்டல். அப்போது ஆரம்பித்த ஆரவாரம், அவர் தன மனைவியை அந்நியனுடன் காணும் கோலம் கண்டு துடித்து, செய்வதறியாது தவித்து இறுதியில் பாட்டிலால் மனைவியின் தலையில் அடிக்கும் வரை ஆரவாரம் அடங்கவில்லை. படத்தின் ஹைலைட்டே அந்த இடம்தானே.
(ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த இக்காட்சி பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வியப்படைவார்)
படம்பார்த்த அந்த தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாயிருப்பதாகவே சொன்னார்கள். ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லாது அன்றைய மாலைக் காட்சிக்கும் மிட்லண்ட் அரங்கில் ரிசர்வ் பண்ணியிருந்தோம். வழக்கம்போல நான்கு மணிக்கே தியேட்டரில் கூடி விட்டோம். எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் ரோட்டை அடைத்து நின்றிருந்தது. ஐந்து மணி சுமாருக்கு இயக்குனர் எஸ்.பி.முததுராமன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் வந்து, படம் துவங்கும்வரை தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர்திலகத்துடன் பணியாற்றிய பெருமை அவர்கள் பேச்சில் எதிரொலித்தது. தான் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனபின்னர் நடிகர்திலகத்துடன் முதல் படம் இது எனக்குறிப்பிட்ட பாபு, தில்லானா மோகனாம்பாளில் கே.எஸ்.பிரசாத்தின் உதவியாளராக நடிகர்திலகத்துடன் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்தார். தன்னுடைய பிஸ்கட் கலர் ‘பியட்’ காரைத் தானே ஓட்டிவந்த விஜயகுமார், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்து இயக்குனரோடும் ரசிகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.
தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். (தியேட்டர் உள்ளே மேட்னி ஷோ இன்னும் முடியவில்லை என்பதால் உள்ளே போக முடியவில்லை). சற்று நேரத்தில் (மாஸ்ட்டர்) சேகரும் வந்தார். ரோஸ்கலர் புல்ஷர்ட்டும் கருப்பு பேண்ட்டும் அணிந்து மோட்டார் பைக்கில் வந்து இறங்கியவரை ரசிகர்கள் சூழ்ந்து, அவரது சிறப்பான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். (படத்தில் ஸ்ரீதேவியின் ஜோடி, மற்றும் இரண்டாவது வில்லன்). முதல் எபிசோட்டில் மனைவியே ஒரு அயோக்கியனுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்யும் சூழல் என்பதால் அதில் மனைவி கொல்லப்படுகிறாள். அயோக்கியன் தப்பிவிடுகிறான். ஆனால் இரண்டாவதில் மகளின் சம்மதமின்றி கற்பழிக்க முயற்சிக்கும் சூழலில் அயோக்கிய காதலன் கொல்லப்படுகிறான். சேகருக்கு இது வித்தியாசமான ரோல். நன்றாக செய்திருந்தார். அவரும் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். நடிகர்திலகத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்', சிவாஜி அங்கிள்' என்று குறிப்பிட்டார். (பாவம், மிகச்சிறிய வயதில் விபத்தில் பலியாகிவிட்டார்).
மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்து, ஏற்கெனவே திரண்டிருந்த கூட்டத்துடன் சேர, குறுகலான ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு டிராபிக் ஜாம் ஆனது. மாலைக்காட்சியின்போது காலையில் ரசித்ததை விட ரசிகர்களும் பொதுமக்களும் நன்றாக ரசித்தனர். அதிலும் "பூப்போலே உன் புன்னகையில்" பாடல் இரண்டாம் முறையாக ஹோட்டலில் பாடும்போது நடிகர்திலகத்தின் ஸ்டைலை ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தனர். படத்தை உருவாக்கியவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் நாட்கள் நகர நகர புன்னகை நீடிக்கவில்லை.
சமீபத்தில் கூட தொலைகாட்சியில் கவரிமான் பார்த்தபோது, ஏன் இப்படம் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது.
-
11th April 2013, 05:13 PM
#2643
Junior Member
Newbie Hubber
கவரிமான் எதிர்பார்த்த வெற்றி பெறாதது பெரும் புதிர். ரொம்ப நாள் கழித்து எங்களுக்கு கார்த்திக் சாரின் full meals .
-
11th April 2013, 05:51 PM
#2644
vandhuttaarayyaa......... vandhuttaarayyaa.........
-
11th April 2013, 09:42 PM
#2645
Junior Member
Senior Hubber
kavarimaan SIVAJI Idhu mathiri roles nadithathu makkaluku total aga pidikkavillai.
ladies disliked this role played by NT. my observations from the first three days people's reports.
-
11th April 2013, 10:54 PM
#2646
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய வருகை நம் அனைவருக்கும் யுகாதி மற்றும் தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது. தங்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். மேள தாளத்துடன் கவரிமானை வரவேற்று சிக்கலாரின் நாதஸ்வரத்தில் நலந்தானா எனக் கேட்க வைத்து விட்டீர்கள்.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2013, 10:57 PM
#2647
Senior Member
Seasoned Hubber
கார்த்திக் சார் சொன்னது போல கவரிமான் முதல் நாள் மிட்லண்ட் திரையரங்க நிகழ்வுகள் நெஞ்சில் நிலைத்து விட்டவை. இன்று அந்தப் பக்கம் போனால் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிகிறது. பல காவியங்கள் வெளியான அந்த திரையரங்கம் இன்று ஒரு கிடங்கு அளவிற்கு மாறி விட்டது. பிராப்தம், விளையாட்டுப் பிள்ளை, போன்று மிட்லண்டில் தலைவர் படம் பார்த்து விட்டு வாய்ப்புக் கிடைக்கும் போது பக்கத்திலேயே சத்யமூர்த்தி பவனில் பெருந்தலைவரை தரிசித்து வந்த நாட்கள், மறக்க முடியாத நாட்கள் ... குறிப்பாக அந்தமான் காதலி திரைப்படம் ஓடும் அத்தனை நாட்களும் அங்கேயே தவம் கிடந்ததெல்லாம் இன்று நினைத்தால் நெஞ்செல்லாம் நெகிழும் உணர்வுகள்...
Last edited by RAGHAVENDRA; 11th April 2013 at 11:00 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2013, 07:19 AM
#2648
Senior Member
Seasoned Hubber

இவ்வாண்டின் ஸ்வராலயா விருது பெற உள்ள திரு டி.எம்.எஸ். அவர்களுக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள டி.எம்.எஸ். அவர்களைப் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு
http://www.thehindu.com/features/fri...cle4605769.ece
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2013, 07:21 AM
#2649
Senior Member
Seasoned Hubber

மறக்க முடியாத கட்டபொம்மன் வசனம் உள்பட பல படங்களில் நடிகர் திலகத்திற்கு வசனம் எழுதிய திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் ஹிந்து நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கான இணைப்பு. வழங்கியவர் நமது ஹப்பரும் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் உப தலைவருமான திரு மோகன் ராம் அவர்கள்.
ஹிந்து நாளிதழ்க் கட்டுரைக்கான இணைப்பு
http://www.thehindu.com/features/cin...?homepage=true
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2013, 10:29 AM
#2650
Junior Member
Seasoned Hubber
Welcome Mr Karthik Sir, after a long gap.
Hope Mr Pammalar also will join soon.
Bookmarks