-
12th April 2013, 03:48 PM
#71
Junior Member
Platinum Hubber
Raman thediya seethai - 1972
13.4.1972.
மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.
ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .
மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .
காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .
மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .
மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை
மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .
பாடல் காட்சிகள் - ஒரு அலசல்
முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .
என் உள்ளம் உந்தன் ஆராதனை ........
இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .
நல்லது கண்ணே ...........
1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - அசோகன்
மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .
கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .
நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் மட்டுமே ஓடியது .
இலங்கை - கொழும்பு - கேபிடல் அரங்கில் 100 நாட்கள் ஓடியது .
41 ஆண்டுகள் ஆனாலும் , ராமன் தேடிய சீதை படம் - இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .
-
12th April 2013 03:48 PM
# ADS
Circuit advertisement
-
12th April 2013, 04:01 PM
#72
Junior Member
Platinum Hubber
Malaisudar - review
ராமன் தேடிய சீதை-(1972)
.
.
மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ராமன் தேடிய சீதை. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.
திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை
பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு
ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான மாட்டுக்கார வேலன் அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
-
12th April 2013, 05:58 PM
#73
Senior Member
Seasoned Hubber
ராமன் தேடிய சீதை படத்தைப் பற்றிய நினைவலைகள்
தங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காது என எண்ணுகிறேன். இப் படத்தில் ஒரு வயதான தம்பதியர் நடித்திருக்கின்றனர். முதலில் பிரபலமான குணசித்திர நடிகரும் நடிகையும் நடிப்பதாய் இருந்தது. [அவர்கள் யாரெனத் தெரியாது. ] ஒரு முறை ஓடியன் திரையரங்கு வழியாக எம்.ஜி.ஆர். வந்த போது சாலை ஓரத்தில் நடைபாதையில் ஒரு சின்ன தார்ப்பாலினுக்குக் கீழே இந்த வயதான தம்பதியைரைப் பார்த்திருக்கிறார். அவர்களின் அந்நியோன்யம் அந்த வயதிலும் ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்வதை அவர்களின் பார்வையிலேயே கவனித்து அறிந்திருக்கிறார். பின்னர் இயக்குநரிடம் சொல்லி அவர்களை அணுகி அவர்களையே அப்படத்தில் நடிக்க வைத்து விட்டார்கள்.
இன்று அந்த இடம் அடையாளம் காண முடியாத அளவிற்கு பிரம்மாண்டமான ஷாப்பிங் கட்டிடமாக ஜொலிக்கிறது. அந்தப் பக்கம் எப்போது போனாலும் அந்த தம்பதியர் நினைவும் இந்தப் படமும் எனக்கு நினைவுக்கு வரும்.
Last edited by RAGHAVENDRA; 12th April 2013 at 06:00 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2013, 05:59 PM
#74
Junior Member
Platinum Hubber
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்.......
எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...
ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர்.
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... என இழுத்திருக்கிறார்.
அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.
நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு..என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம்.
எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.
ஊருக்கு வந்தவர்...
திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.
நன்றி ;- சண்டிய காரன் - இணையத்தளம்
-
12th April 2013, 06:03 PM
#75
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
நீங்கள் குறிப்பிட்ட இந்த ராமன் தேடிய சீதை தகவல் இதுவரை கேள்வி படாத அபூர்வ செய்தி .
நன்றி சார்
-
12th April 2013, 06:11 PM
#76
Junior Member
Platinum Hubber
ராமன் தேடிய சீதை - 41 ஆண்டுகள் பின்னர் இணைய தளத்தில் இன்றும் பார்க்க வாய்ப்பு தந்த YOUTUBE
நிறுவனத்திற்கு நன்றி
மீண்டும் பார்ப்போமே
-
12th April 2013, 06:45 PM
#77
Junior Member
Platinum Hubber
நன்றி - ருத் ரன் பக்கம் - இனைய தளம் .
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.
, டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம்.
ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!
பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1
இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் zen. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று,எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன்.
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.
-
12th April 2013, 07:41 PM
#78
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
‘ராமன் தேடிய சீதை’-(1972)
.
.
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.
‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’
‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’
‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’
ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான ‘மாட்டுக்கார வேலன்’ அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
Your review is nice Sir. I feel the movie is not a usual MGR movie. MGR's appearance is felt only in the begining and end of the movie. And all the time Jayalalitha dominates the movie.
-
12th April 2013, 07:46 PM
#79
Junior Member
Veteran Hubber
-
12th April 2013, 08:14 PM
#80
Junior Member
Veteran Hubber
Bookmarks