-
28th April 2013, 02:49 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Ganpat
தலைவரின் மிகப்பெரிய சாதனை என்ன?
அவர் படங்களில் காட்டிய ஸ்டைலா?
அவர் அணிந்த உடைகளா?
அவர் காட்டிய முகபாவங்களா?
அவர் ஈட்டிய வசூலா?
அவரின் பன்முக ஆற்றலா?
அவரின் ஒப்பற்ற நேர்மை குணமா?
அவரின் தேச பக்தியா?
இப்படி பலதலைப்புகளில் விவாதிக்கலாம்.
அனைத்தும் உண்மையும் கூட.
ஆனால் அவரின் ஒப்பற்ற சாதனை ,என நான் கருதுவது..
தமிழ் மக்களின் ரசனையை உயர்த்தியது.அப்படி உயர்த்தி
அவர்களையும் தன்னைப் போல,மாற்றியது.
தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில்
எல்லாருக்கும் ஒரு கெளரவத்தை உண்டாக்கியது.
சினிமா என்பது வெறும் கேளிக்கை அல்ல,
அது ஒரு கலை என்பதை நிரூபித்தது.
காமிராவிற்கு முன்னால் நான் ஒரு தெய்வம்..
பின்னாலோ நான் ஒரு எளிய, நேர்மையான மனிதன் என
சொல்லாமல் சொன்னது.
கயமையும் போக்கிரித்தனமும் நிறைந்த ஒரு தொழிலில்
"வாழு வாழ விடு" எனும் கொள்கையை
பின்பற்றி பல சக கலைஞர்களை வாழ வைத்தது.
தன மறைவிற்குப்பின்னர்,
பல நட்சத்திரங்களுக்கு நடுவே ஒரு துருவ நட்சத்திரமாக மாறி
அனைவர்க்கும் வழிகாட்டுவது.
நூற்றுக்கு நூறு உண்மை.
சாதாரண ரசிகனிடம் உள்ளுக்குள் இருந்த உயர்ந்த ரசிப்புத் தன்மையை வெளிக்கொண்டு வந்தவர் நடிகர் திலகம். அதனை நாமும் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யக் கூடிய சிறந்த தொண்டாகும். ஒவ்வொரு சிவாஜி ரசிகரையும் நம் நண்பராக, சகோதரனாக கருதி அவர்களிடம் நேசக்கரம் நீட்டி, அவர்களுடைய நிறைகளைப் பாராட்டி, குறைகளை சுட்டிக் காட்டி அனைவரும் ஒரு சேர பணியாற்றும் போது அந்த மகா கலைஞனுக்கு இதை விட சிறந்த சேவையை யாராலும் செய்ய முடியாது என மற்ற ரசிகர்கள் பார்த்துப் பொறாமை கொள்ளும் அளவிற்கு பலனளிக்கும். அந்த அடிப்படையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பேதம் பாராது அனைவரும் சிவாஜி ரசிகர்கள் என்ற அணுகுமுறையை அனைவரும் கடைப்பிடித்தலே சிறந்த தொண்டு என்பதை பணிவுடன் கூற விரும்புகிறேன்.
இந்த நேரத்தில் அவருடைய பாடலின் வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
....
தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே கனிவு வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை ...
...
டியர் கண்பத் சார்,
அவ்வப்போது வந்து போகாமல் தொடர்ந்து தங்கள் பதிவுகளை இங்கு அளிக்க வேண்டும். சிவாஜி ரசிகராக தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த பல சுவையான அனுபவங்களை இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் இவற்றையும் கூறுங்கள். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் வாழ்க்கையில் அவர் சம்பந்தப் பட்ட ஆவணத்தை நிச்சயம் பாதுகாத்து வருவார் என்பது நிச்சயம். ஏதாவது ஒன்றாவது அவருடை நினைவாக பேணுவார் என்பது அனுபவ ரீதியாக நான் அறிந்துள்ளேன். அப்படி தங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்குமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.
சௌரிராஜன் அவர்கள் தமிழில் பதிய முயன்று வருகிறார். நாளடைவில் அவரும் சகஜமாக தமிழில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நாம் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். நமக்குள் distance maintain பண்ணாமல் அன்புடன் பழகுவோமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th April 2013 02:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks