-
28th April 2013, 02:59 PM
#11
Junior Member
Devoted Hubber
என்னதான் இருக்கிறதென்று முதன்முறையாக எதிர் கூடாரத்துக்குள் எட்டிப்பார்த்தபோது.... அட! சில தெரிந்த முகங்கள்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறை ருசித்தபோது அது சொந்த கூடாரத்தின் பதத்தை நினைவு படுத்தியது. அசாதாரண அளவில் பளிச்சிடும் எழுத்துருவும் தேவையற்ற, ஆடம்பரமான, முதிர்ச்சியற்ற வரிகளுமாய்..... நடிகர் என்ற பெயருக்குள்ளேயே அடக்க முடியாதவரையெல்லாம் இப்படி போற்றுகிறார்களே. சரி ரசனை உணர்வுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பது நடைமுறை தானே. ஆனால் உலக மகா நடிகரான சிவாஜி கணேசனுக்கு இந்தமாதிரியான செயற்கையான ஆடம்பரங்கள் தேவைதானா என நினைக்கத்தோன்றியது. தகுதியானவர்களிடம் போட்டி போட்டால் தான் பெருமை. அழகு, கம்பீரம், அட்டகாசம் எல்லாவற்றையும் தனது நடிப்புக்குள்ளே அடக்கிக்கொண்ட நடிகர் திலகத்தின் பெருமையை சாதாரண எழுத்துக்களில் சத்தமின்றி எழுதினாலே போதுமே, traffic lights போல blinding florescent colours தேவையா?
p.s: எடுத்ததற்கெல்லாம் 'பாருங்க டீச்சர் இவ அடிக்கிறா' என்று 'பிராது' கொடுப்பதை விட்டுவிட்டு இது சகலருக்கும் பொதுவான திரி என்பதை நினைவில் கொள்வோம். இது எனது சொந்த கருத்து, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதது போல போய்க்கொண்டே இருக்கலாம்.
Last edited by Vankv; 28th April 2013 at 03:14 PM.
Reason: நாட்டாண்மை தீர்ப்பை மாத்து!
-
28th April 2013 02:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks