-
2nd May 2013, 08:03 PM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் சார்
உலகில் பல நாடுகளின் திரைப்படங்களை, பல மொழித் திரைப்படங்களை, பல்வேறு நடிகர்களை, பல் வேறு கால கட்டத்தைச் சார்ந்த நடிகர்களை அறிந்தவர்கள் தாங்கள். அதை வைத்து எனக்கு ஏற்படும் ஐயத்தைத் தங்களால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இக் கேள்வியைத் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு செய்து பதில் கூறவும். (No Fun or Sarcasm intended. Real Doubt).
இயற்கையான நடிப்பு என்றால் என்ன?
திறமையும், கற்பனை வளமும் இல்லா நடிகர்கள், எந்த பாத்திரம் எடுத்தாலும் தனது ஒரே நடிப்பையே எல்லா பாத்திரங்களுக்கும் வழங்கி கொண்டு ஒரே மாதிரி ஜல்லியடித்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இவர்களின் உண்மை இயல்பு கொண்ட ஒரே ஒரு வகை பாத்திரம்தான் பொருந்தும். இந்தியாவின் பல சராசரி நடிகர்கள் இந்த வகை பட்டவர்களே.
ஒரு நடிகனாக நுழைய குறைந்த பட்ச தேவையே இந்த இயல்பான நடிப்புதான். அது நேற்று வந்த புது நடிகனுக்கும் இருக்கும். அவன் இயல்பு போல நடிக்க அவனாலும் முடியும். சிரிப்பான், அழுவான், பேசுவான்,சீறுவான்- ஆனால் எல்லாம் ஒரே மாதிரி அவன் இயல்பு போலவே. அவனை வைத்து சில நல்ல படங்களும் எடுக்க முடியும். ஆனால் இது செய்து விட்டதாலேயே அவனை ஆஹோ ஓஹோ என்பதெல்லாம் ..........
மற்றும் சில இயக்குனர்கள், பிச்சை காரன் பத்திரத்துக்கு உண்மை பிச்சைகாரனை தேடி பிடித்து(லூயி புனுவேல் ) இயல்பு தன்மை கொண்டு வருவார்கள்.
நடிப்பு என்பதே ஒரு exhibitionism .இயல்பான நடிப்பு என்பது பெரிய புருடா.இந்த வகை நடிப்பு கற்பனை வளமில்லா சராசரிக்கும் கீழான வகையை சேர்ந்தது.
Last edited by Gopal.s; 4th May 2013 at 09:46 AM.
-
2nd May 2013 08:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks