-
2nd May 2013, 08:54 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் சார்
இயற்கையான நடிப்பு என்றால் என்ன?
ராகவேந்தர் சார்,
நண்பர் கோபால் இதற்கான விடையளித்து விட்டார்.
எனினும் உங்கள் மீது இருக்கும் நட்பின் அடிப்படையில்
நானும் இதை சற்று ஆராய முயல்கிறேன்.
ஆங்கிலத்தில் oxy moron என்று ஒரு வகை உண்டு.
இருவார்த்தைகள் சேர்ந்து வரும் ஆனால் அவற்றின் பொருள்
ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கும்.
உதாரணத்திற்கு all alone, குண்டூசி போன்றவை.
இவற்றில் ஒன்றுதான் "இயற்கையான நடிப்பு."
நம் வாழ்க்கையில் கூட இது அதிகம் நடக்கும்.
தியேட்டர் ஸ்டாலில் இடைவேளை போது,சாப்பிட்டு விட்டு வரும்
நாம் ஒரு நண்பரை "தற்செயலாக பார்ப்பது"
ஹோட்டலில் பில் வரும் போது "தற்செயலாக" கை கழுவ செல்வது
போன்ற தற்செயல்கள் இப்பிரிவில் வரலாம்.
இவ்வளவு ஏன்,நீங்களே #3112 இல்.
முரளி சார், சாரதா, கார்த்திக், tac, சக்திப்பிரபா, நவ், ஜோ, பிரபுராம், பம்மலார், வாசு, பார்த்த சாரதி, சதீஷ், பெயர் விட்டுப் போன பல சீனியர் ஹப்பர்கள் தொடங்கி இன்றைய சௌரிராஜன் வரை ஒவ்வொருவருக்குள்ளும் நடிகர் திலகத்தின் தாக்கம் தானாகவே அவர்களுக்குள் இருக்கும் புலமையை வெளிக்கொண்டு வருகிறது.
என்று சொல்லியிருப்பது கூட ஒரு வகையில் இதற்கு உதாரணம்தான். 
நம் தலைவர் மூலம் விளக்குவதென்றால்,
1952-1962 அவர் இயற்கையாக நடித்தார்
1963-2000 அவர் நடிப்பை இயற்கையாக்கினார்.
2001-நடிப்பே இயற்கை எய்தியது.
Last edited by Ganpat; 2nd May 2013 at 08:58 PM.
-
2nd May 2013 08:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks