-
23rd May 2013, 01:41 PM
#3831
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல் ராம்,
மோகன புன்னகை

கிண்டல் கேலி செய்வோரை ஒதுக்கி விட்டு தற்போது இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம். நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர் திலகம் ஸ்ரீதர் இணையில் வெளிவந்த படம். அருமையான படம் என்றாலும் என்ன காரணத்தாலோ பெற வேண்டிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் சிறந்த நடிப்பில் நடிகர் திலகம் மீண்டும் தன் கொடியை நாட்டியிருப்பார். குறிப்பாக கல்யாணமாம் கச்சேரியாம் பாடல் ரசிகர்களின் நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட பாடல். இமேஜ் என்கிற வளையத்தில் இறுதி வரை சிக்காமல் தன்னுடைய திறமையை வைத்தே என்றும் தன் முதலிடத்தை நிலை நிறுத்திய படங்களில் மோகனப் புன்னகையும் ஒன்று.
மெல்லிசை மன்னரின் இசையில் தென்னிலங்கை மங்கை பாடல் என்றென்றும் இனிமையாய் ஒலிக்கும் பாடல். அதே போல் தலைவன் தலைவி பாடலில் பின்னணியில் தவிலை ஒலிக்கச் செய்து பாடலின் சூழலை அருமையாய் சித்தரித்திருப்பார் எம்.எஸ்.வி.
ரசிகர்களால் மறக்க முடியாத படம் மோகனப் புன்னகை.
நம் அனைவருக்காகவும் தலைவன் தலைவி பாடல் காணொளியாக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd May 2013 01:41 PM
# ADS
Circuit advertisement
-
23rd May 2013, 01:56 PM
#3832
Senior Member
Seasoned Hubber
மோகனப் புன்னகை திரைப்படத்தில் மற்றோர் மறக்க முடியாத பாடல், குடிக்க விடு என்னைக் குடிக்க விடு. எந்த கதாநாயகனும் தான் குடிகாரனாக நடிப்பதற்கே ஈகோ பார்க்கும் காலத்தில் குடிக்க அனுமதி கேட்பதாக வரும் பாடல் காட்சியில் நடிக்கக் கூடிய தைரியம் எங்கள் கலைக் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த மெட்டில் பாடகர் திலகம் டி.எம்.எஸ். குரலில் வாலியின் பொருள் பொதிந்த வரிகள் ... பாடலின் இறுதியில், குடிப்பதில்லை இனிமேல் குடிப்பதில்லை, நான் அழுதால் அழுவதற்கும், நான் சிரித்தால் சிரிப்பதற்கும் ஒரு மனது கிடைத்ததம்மா, இது தான் எனக்கு அமைதி வரிகளில்ல டி.எம்.எஸ்.ஸின் குரலில் உள்ள voice modulation பிரமிப்பை ஊட்டுகிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்து அழுகை சிரிப்பு இரண்டையும் கலந்து தன் முகத்தில் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறார் நடிகர் திலகம்.
பாடல் காட்சியைப் பாருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd May 2013, 02:46 PM
#3833
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
You cannot hear the song Kalyanamam Katcheriyam in the theatre as fans celebrate
like anything due to the song as well as performance of our acting GOD. I have seen
during my college days at Chrompet Vetri and it could not met the expected result
may be due to delay in making of the film.
-
23rd May 2013, 02:48 PM
#3834
Junior Member
Seasoned Hubber
Warm Welcome Mr Kannan for this wondful thread of Acting GOD.
-
23rd May 2013, 04:30 PM
#3835
Senior Member
Diamond Hubber
'பாவை விளக்கு' புகைப்படத்தை பாரட்டிய வினோத் சாருக்கு நன்றி!
என் கிராமம் என் மக்கள் பதிவிற்கு தொலைபேசி வாயிலாகப் பாராட்டிய கோல்ட் ஸ்டாருக்கு என் மனமார்ந்த நன்றி!
-
23rd May 2013, 04:32 PM
#3836
Senior Member
Diamond Hubber
கண்ணன் சார்,
வருக! வருக! நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்தை எடுங்கள். நல்வாழ்த்துக்கள்.
-
23rd May 2013, 07:07 PM
#3837
நமது பம்மலார் அவர்கள் 'நடிகர்திலகம் திரி' பாகம் ஒன்பதில் ஜூலை 2011 முதல் தனது ஆவணப்பதிவுகளைத் தரத்துவங்கி ஏராளமான செய்தித்தாள் விளம்பர ஆவணங்களை அள்ளி அள்ளி வழங்கினார்கள். கூடவே நமது ராகவேந்தர் அவர்களும், நெய்வேலி வாசுதேவன் அவர்களும் பல்வேறு ஆவணங்களை அள்ளி வழங்கினார்கள், வழங்கி வருகிறார்கள். அவையனைத்தும் நமது ரசிகர்கள் பெரும்பாலோர் பார்த்திராத அரிய விளம்பரங்கள் என்பதோடு நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை அறியாதோருக்கு ஆணித்தரமாக பறைசாற்றும் செப்பேடுகளாக திகழ்கின்றன.
பாகம் ஒன்பதில் மட்டுமல்லாது, பம்மலார் அவர்கள் 'கிளாஸிக்' பகுதியில் துவங்கிய (தற்போது பூட்டப்பட்டுள்ள) திரியிலும் அவை தொடர்ந்தன.
கடந்த சிலநாட்களாக அவற்றை மீண்டும் பார்வையிட்டு வந்தபோது நடிகர்திலகத்தின் கீழ்க்கண்ட பல மிக முக்கிய திரைக்காவியங்களின் விளம்பரம் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது தெரிந்தது. அவற்றில் பல வெள்ளிவிழாப்படங்களும் அடக்கம்.
ஒரு விளம்பர ஆவணங்கள் கூட இடம்பெறாத திரைப்படங்களில் சில...
தீபம்
தியாகம்
தங்கப்பதக்கம்
தங்க சுரங்கம்
உத்தமன்
தங்கைக்காக
அருணோதயம்
இருதுருவம்
எங்க மாமா
விளையாட்டுப் பிள்ளை
கந்தன் கருணை
பார்த்தால் பசிதீரும்
நிச்சய தாம்பூலம்
இருவர் உள்ளம்
அன்புக்கரங்கள்
திருமால் பெருமை
நிறைகுடம்
ராஜ ராஜ சோழன்
பொன்னூஞ்சல்
தாய்
மனிதனும் தெய்வமாகலாம்
புண்ணிய பூமி
ரிஷிமூலம்
தர்மராஜா
யமனுக்கு யமன்
ரத்தபாசம்
திரிசூலம் (இதன் வெள்ளிவிழா விளம்பரம் மட்டும் உள்ளது. மற்ற சாதனை விளம்பரங்கள் பதிவிடப்படவில்லை) .
இப்படங்களின் விளம்பர ஆவணங்கள் இருக்குமானால் நமது திரியில் பதிவிடலாமே. ராகவேந்தர் சார் அவர்கள் சொல்வதுபோல இப்படிப்பட்ட அரிய விளம்பரங்கள் வைத்திருப்போர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள் என்பது உண்மையானாலும், அவர்கள் இவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதே நடிகர்திலகத்தின் சாதனைகளை உலகெங்கும் பறைசாற்றத்தானே. அந்த உயர்ந்த நோக்கத்திற்கு இத்திரியைப்போன்ற பொருத்தமான இடம் வேறெது?.
சிவந்த மண் திரைப்படம் 38 இடங்களில் 50 நாட்களையும், 10 இடங்களில் 100 நாட்களையும் கடந்த சாதனை விளம்பரத்தை நமது பம்மலார் அவர்கள் இங்கே பதித்ததால்தானே அப்படத்தைக் குறை சொல்வோருக்கு இப்போதும் காண்பிக்க முடிகிறது. சமீபத்தில்கூட வாசுதேவன் சார் மறுபதிப்பு செய்திருந்தாரே.
அதுமட்டுமல்ல இப்போது அவற்றை இங்கே பதித்தால், பிற்பாடு அந்தந்த படங்கள் 'பிலிமோகிராபி' இடம்பெறும்போது இவ்விளம்பரங்களை அங்கே மாற்றிக்கொள்ளலாம்.
எனவே விடுபட்ட படங்களின் விளம்பரப்பதிவுகளை மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
(....and last, thanks to my office collegue Mr. Dhanapalan, working here in Jeddah, an expert in Tamil typing for making this post in Tamil.
Very soon I will make Tamil posts individually).
-
23rd May 2013, 09:35 PM
#3838
Junior Member
Seasoned Hubber
Hearty Welcome கண்ணன் சார்
-
23rd May 2013, 09:35 PM
#3839
Junior Member
Seasoned Hubber
நான் ஏற்கனவே கூறியது போல் நான் ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் . ஆனால் என்னால் நடிகர் திலகத்தின் மெலோட்ராம படங்கள் குறிப்பாக பா வரிசை படங்களை பார்க்க நான் விரும்பியதில்லை. இதனால் என்னக்கும் என் அப்பாவுக்கும் அடிகடி வாக்குவாதாம் வரும் என் என்றால் அவர் நடிகர் திலகத்தின் விசிறி ,அதுவும் அவரின் golden period என்று சொல்ல படும் 1954-1980 ன் வெறித்தனமான ரசிகர் .
அவர் நடிகர் திலகத்தின் later movies யை அவ்வளவுவாக பார்க்க வில்லை . அந்த சமயத்தில் அவர் வேலைக்கு சென்றதும் ஒரு காரணம்.
ஒரு நாள் நடிகர் திலகத்தின் படங்களின் DVD கள் யை தேடும் பொழுது நான் பார்க்காத சில நடிகர் திலகத்தின் பா series படங்கள் கிடைத்தது .
ஒரு சின்ன சபலம் பா series படங்களை பார்க்க ஆசைப்பட்டேன் .
இதுக்கு இந்த திரி யில் உள்ள திரு கோபால், திரு நெய்வேலி வாசு , திரு ராகவேந்திரன், திரு ஆதிராம் , திரு சிவாஜி செந்தில் , திரு முரளி ஸ்ரீநிவாஸ் , திருமதி சாரதா , திரு joe , திரு சௌரிராஜன் மற்றும் பேர் விட்டு போன சில hubbers எழுத்துகள் ஒரு காரணம்
அதனால் இந்த பா series write ups யை என்னை இந்த படங்களை பார்க்க தூண்டிய இந்த hubbers களுக்கு சமர்பிக்கிறேன்
இந்த பா series படங்களின் மிக பெரிய பலம் casting , இப்போ மிக பிரபலமாக சொல்ல படும் multi starrer படம் என்று சொல்ல படும் படங்களை நம்ம ஆளு அப்போவே செய்து விட்டார் .
ரெண்டாவது பலம் பாடல்கள் . MSV & TRR மற்றும் கவிஞர் கண்ணதாசன் கூட்டணி பாடல்கள் இன்று அளவும் பிரபலம் .
மூன்றாவது வலுவான கதை. மிக இயல்பான , நம்ம பக்கத்து வீட்டு கதை போல இருப்பது.
நடிகர்கள் இமேஜ் என்றும் வலைக்குள் சிக்காமல் இந்த கதைக்குள் பொருந்தியது .
கடைசியாக இந்த படத்தின் இயக்குனர் A. Bhim Singh இந்த பெரிய நடிகர் பட்டாளத்தை மிக சரியாக வேலை வாங்கி இருக்கிறார் .
இந்த படத்தின் தாக்கம் அது வரையில் வெறும் ராஜா ராணி படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருக்கையில் இந்த பா series வெற்றிகள் நிறைய சமுக படங்கள் வர துவங்கியது .
இந்த படங்களினால் குறைந்தபட்சம் 10 நபர்கள் மனம் மாரி இருப்பார்கள் .
-
23rd May 2013, 09:36 PM
#3840
Junior Member
Seasoned Hubber
பாகப்பிரிவினை
ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (TS. Balaiah ) , பெரியம்மா (C. K. சரஸ்வதி), தன் அப்பா (S. V. Subbaiah ) , அம்மா (M. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . CK சரஸ்வதி யின் தம்பி MR ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் MR ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .
நம்பியாரும் , MR ராதாவும் சென்னை செல்கிறார்கள் . அங்கே MR ராதா ஒரு ஷோ நடத்தி காசு செலவு செய்கிறார் . அவர் பேச்சை நம்பி MN நம்பியார் தன் ஆபீசில் இருந்து 75000/- திருடி MR ராதா விடம் கொடுக்கிறார்.
சிவாஜி யும் சரோஜாவும் சென்னைக்கு சிவாஜியின் மெடிக்கல் treatment காக வருகிறார்கள் . வந்த இடத்தில MR ராதா சிவாஜியின் குழந்தை யை கடத்தி தன் ஷாவுக்கு பயன்படுத்தி கொள்கிறார் . இதை தடுக்கும் முயற்சில் சிவாஜிக்கு கரண்ட் ஷாக் அடித்து உடம்பு சரியாகிறது . குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறது.
ஒரு குடும்பம் அதுவும் கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதுவும் இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் இருப்பவர்கள் , அதுவும் இந்த மாதிரி குடும்பத்தை வழி நடத்துவார்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் நன்றாக வாழ்ந்து காட்டி இருப்பர் பாலையா .தன் தம்பி மகன் சிவாஜியிடம் அவர் காட்டும் கரிசனம் , sv சுப்பையா தன் மகனுக்கு சில நாட்கள் மருந்து சாப்ட்ட வைத்தியர் சொன்ன மாத்திரைகளை வங்கி வரும் சொன்ன பொழுது அதுக்கு பாலையா அலட்டிகொள்ளாமல் சொல்லும் வார்த்தை என் உடம்பு குணமாக வரைக்கும் சாப்பிடட்டுமே .
பாகப்பிரிவினை அனா உடன் அதை வாங்க மறுத்தும் , அழுதும் தன்னால் தன் இது நடந்தது என்று கண்டு மறுகவதும் , அதே பாலையா தன் மனைவி சரோஜா தேவிக்கு மாம்பழம் கிடைக்காமல் செய்ததும் , டக் என்று இரண்டு மாம்பழத்தை எடுத்து சிவாஜியிடம் குடுத்து தன் மனைவியிடம் குடுக்க சொல்லும் இடம் மிகவும் எதார்த்தம் .
MN நம்பியார் நல்லவர் ஆனால் எடுப்பர் கைபிள்ளை அதனால்
MR ராதா விடம் ஏமாற்றபட்டு தன் தவறை உணர்கிறார் .அதே நம்பியார் MR ராதா வின் பேச்சை கேட்டு தன் தந்தை உடம்பு சரி இல்லாத பொழுது கல்யாணம் செய்து கொள்வதும் , சிவாஜியை அவமானம் படுத்தும் பொழுதும் , அதே சிவாஜியை சென்னையில் சந்திக்கும் பொழுது குற்ற உணர்வால் புழுங்கும் பொழுது நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார் .
C. K. சரஸ்வதி எப்படி ஒரு பெண் இருக்க கூடாது என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு . இவ்வளவு கல் நெஞ்சம் படைத்த பெண்கள் இருபர்களா என்று ஆச்சர்யம் , கலந்த அதிர்ச்சி .
சரோஜா தேவி நம்ம நடிகர் திலகத்துடன் நடிக்கும் பொழுது அவருக்கு நல்ல நடிக்க வரும் என்பதை நிலை நாட்டி விதிக்கிறார் மிச்ச படங்களை போல் இல்லாமல் இதில் மிக நன்றாக நடித்து உள்ளார் .
நடிகர் திலகம் கல்யாணம் வேண்டாம் என்று மறுக்கும் பொழுது அதுக்கு அவர் கூறும் சில வார்த்தைகள் மிக இயல்பு .
அடுத்தது நம்ம சிங்கப்பூர் சிங்காரம்
எனக்கு பிடித்த MR ராதா .
அவர் நடிக்கும் நிறைய படங்களில் ஹீரோவை dominate செய்து ஸ்கோர் செய்து விடுவர் . இந்த படத்தில் சும்மா பிச்சு உதறி இருப்பர் .
முதலில் நடிகர் திலகம் உடன் சண்டை இடுவதும், வீட்டுக்கு வந்த உடன் பாலையா வின் முடியை பார்த்து இது என்ன குடுமி , எங்க அக்காவை சிங்கப்பூரில் கல்யாணம் செய்து குடுத்து இருக்கலாம் என்று சொல்லும் இடம் டாப் . MN நம்பியார் புட்டு சாப்பிட போகும் பொழுது வெளி நாட்டில் நீர் ஆவி யில் ராக்கெட் விடுறன் , நீங்க அதுல புட்டு சப்ப்டுகிரிங்க .தன் தங்கை சிங் சங் ஜாம் சபிடிவதும் , அது எதுல தயாரிக்க பட்டுஇருக்கு என்று கேட்கும் பொழுது கேட்காதே, அதை போட்டுகிட்ட தால மூஞ்சி யில் சுருக்கம் இல்லை .
அதே MR ராதா நம்பியார் பணம் கேட்கும் பொழுது என்ன கொள்ள செஞ்சுட்ட ஜெயில்க்கு போற சும்மா ஒரு 6 மாசம் நா வேணும் நா எ கிளாஸ் வாங்கி தரேன் . artists background யை பத்தி கேட்காதே
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
ஒரு கூட்டு குடும்பத்தில் மூத்த பயன் அக பிறகும் ஒரு பையன் எப்படி இருக்க வேண்டும் , எவ்வளவு விட்டு தர முடியுமோ அவ்வளவு விட்டு தர வேண்டும் அப்போ தன் அந்த குடும்பம் நல்ல இருக்கும் .இது தன் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பத்திரத்தின் அடித்தளம் . basically நடிகர் திலகம் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்ததால் அவருக்கு இது ஒரு cakewalk . ஓவர் அக்டிங் என்ற பேச்சுகே இடம் இல்லாமல் தன் ஒரு complete டைரக்டர்'s ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபது உள்ளார் . இது புரியாமல் சில பேர் பேசும் பொழுது கோவம் வரவில்லை மாறாக சிரிப்பு தன் வருகிறது . எங்க எப்போ எப்படி நடிக்க வேண்டுமோ அதுக்கு அனுசரித்து நடித்து கொடுக்க குடியவர் இவர்
ஒரு படத்தில் ஒரு அழகான ஹீரோவை படம் பூராவும் இப்படி உடல் ஊனமுற்றோர் அக காட்டி இருப்பர்கள, அதுவும் ஒரு வில்லன் படம் பூராவும் அந்த ஹீரோவை நொண்டி என்று சொல்வதற்கு இடம் அளிக்கிறார் என்றால் நடிகர் திலகத்துக்கு நடிப்பு அவர் காட்டும் பக்தி , கேரக்டர் மீதும், அந்த கதை மீதும் இருக்கும் அசைக்க முடியாத
நம்பிக்கை யை காட்டுகிறது .
பொதுவாக ஒரு ஹீரோ ஒரு பாடல் காட்சியிலோ, ஒரு fight சீன் ல் , அறிமுகம் ஆவார் இதில் தன் வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து , தன்னை காப்பாத்த சொல்லி கூப்பிடும் பொழுது அறிமுகம் ஆகிறார் .
ஒரு கிராமத்து படிப்பு வாசனை இல்லாத , தன் குறையை பெருசாக எடுத்த கொல்லாத , ஒரு மனிதர் , தன் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை என்ற பொழுது முருகனிடம் வேண்டி கொள்வதும், வெள்ளந்தியாக MR ராதாவை சிங்கப்பூர் an என்று சொல்லி சண்டை போடுவதும் , தன் தம்பி தன்னை புரிந்து கொள்ளாமல் சென்றவுடன் உருகுவதும் , அதே தம்பியிடம் MR ராதா வின் தங்கையை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சுவதும், அதே தம்ப்பி தன் தவறை உணர்த்து தன் அண்ணனை தன் வீட்டுக்கு அழைத்ததும் , நாசுக்க மறுக்கும் இடம் இயற்கை நடிப்புக்கு ஒரு எடுத்துகாட்டு .
தன் தம்பியின் மனைவிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதை தெரிந்து கொண்டு தானாகவே ஒரு பெண் மருத்துவரை அழைத்து வருவது ஆபத்து காலத்தில் உதவுதுக்கு ஒரு உதாரணம் .
தன்னுடைய குழந்தையை பார்க்கும் பொழுது அதன் கை, கால் யை தடவி பாத்து அது normal aka இருப்பதை உறுதி படுத்தி கொள்வது என்ன வென்று சொல்வது இவர் நடிப்பை பற்றி .
பாடல்கள் அனைத்தும் குறிப்பாக
என் பிறந்தாய் மகனே என்ற பாடல் varigalum அதை compliment செய்யும் விதத்தில் இசை இருப்பதும், அதில் நடிகர் திலகம் ஒத்த கை உடன் தன் குழந்தையை தலாட்டும் தோரணை , rocking .
மொத்தத்தில் இந்த படத்தில் அனைவரும் கலக்கி இருகிறார்கள் .
Bookmarks