-
25th May 2013, 10:03 AM
#11
Senior Member
Diamond Hubber
1) நன்றி சொல்லவேண்டும் - கொள்ளை கொள்ளும் மெலடி. முதல் இடையிசை பிரமாதம். பரபரவென்று ராகத்தோடு ஓடாமல், நின்று நிதானமாக ரசித்து பாடும் கார்த்திக்கின் லாவகம் ப்ரியதர்ஷனியொடு சரணத்தில் இணைந்து பாடலை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. பழனி பாரதியின் வரிகள் சிறப்பா வந்திருக்கு. சாஸ்திரிய தோல்கருவிகளில் அமைக்கப்பட்ட தாளக்கட்டு கேட்கும்போதே அதற்கு ஏற்றார்போல தலையை அசைக்க வைக்கிறது. "தூங்கிடாத கண்ணோரம் தேன்தெளிக்கும் சொப்பனங்கள்" - "வாங்கிடாத உள்மூச்சு உன்னை வாங்கச் சொல்கிறதே! - பாடலின் அமைப்பில் உயிர்ப்பான இடங்கள்.
2) காலையிலே மாலை வந்தது - வீணை, நாதஸ்வரத்திற்காக கேட்கிறேன். மற்றபடி ராக அமைப்புக்கள் இன்னும் பிடிபடவில்லை. சரணத்தில் "கேக்கலையோ கேக்கலையோ" பாடலின் சாயல் அப்படியே ஒளிவு மறைவில்லாமல. பாடலின் வடிவம் சீராக செல்லாமல் பல குன்றுகளில் ஏறி பயணிக்கிறது. அதுவே பாடலுக்கு பலவீனம் என நினைக்கிறென். வரிகளும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
3) கல்லாலே செஞ்சு வச்ச - ஓரிருமுறை கேட்டவுடனே ராக அமைப்பு மனதில் சம்மணமிட்டு உட்காருவதிலேயே அடித்து சொல்லிவிடலாம் ஒரு இடம் விடமால் இப்பாடல் நீண்ட காலத்திற்கு ஒலிக்கப் போகிறதென. பாடல் வரிகள் இதிலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்ற ஒரே குறை. இசையும், குரலும் ஆக்கத்தை உன்னதமாக்கிறது. இரண்டாம் இடையிசையில் கொஞ்ச நேரமே வந்துபோகும் புல்லாங்குழல் மனதை மயிலிறகால் வருடிச் செல்கிறது. ஹரிச்சரண் பாடியவைகளில் மகுடமாக திகழப் போவது இது. "சாமியில்ல நீ, தெய்வமில்ல நீ" என்ற உவமை ரிப்பீட்டுக்களை தவிர்த்திருக்கலாம். "செய்கூலி சேதாரம் இல்லாத"
- ஆரம்ப இசையின் ஆரம்பம் கார்த்திக் ராஜாவை ஞாபகப் படுத்துகிறது. தொடர்ந்து ஹரிச்சரண் நிறைய பாடல்களை ராஜா இசையில் பாடணும். ( பிரியதர்ஷனி பாடுவதில் உச்சரிப்புக்கள் அங்க இங்கே இடிக்குது. ஹரிச்சரண் இந்த விஷயத்தில் பிரியதர்ஷணியை வேகமாக முந்திச் செல்கிறார். இரண்டாம் சரணம் "நிலவு இன்ற்ரிரி போனாலும் பூக்கள் இன்ற்றி போனாலும்" )
4) ஒங்கப்பன் பேர : ஆட்டம் போட வைக்கும் துள்ளலான தாளக்கட்டு. இதுபோல ஒரு ராஜா பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சி. சந்தோசம் பல மடங்கு. "பேருவைக்க புள்ள வேணுமெனக்கு , அந்த புள்ளகொடு செல்லக்கிளியே" என முடிப்பதில் ராஜா குன்றிலிட்ட விளக்கு போல ஒளிர்விடுகிறார். ராஜாவின் குரலை தொடர்ந்து நிழல் போல வரும் கோரஸை தவிர்த்திருக்கலாம். பையன் பொறந்தாலும், பொண்ணு பொறந்தாலும் தன்னோட அப்பா - அம்மாக்களின் பெயர்களையே வைக்கும் அளவுக்கு ஒரு ஆணாதிக்க உணர்வினை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்.
** மென்மையான உணர்வுகளை நிறைய பாடல்கள் வெளிப்படுத்துவதால் புல்லாங்குழல் இசையை நிறைய இடங்களில் பயன்படுத்தியிருக்கலாம். லூப் இசைவடிவங்கள் இலைமறைக் காயாக வந்துபோகாமல் பெரும்பாலான இடங்களில் வியாபித்திருக்கிறது. இதையும் குறைத்திருக்கலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th May 2013 10:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks