-
28th May 2013, 08:16 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NTthreesixty Degree
அன்புள்ள ராகவேந்திரன் சார்
இன்று தங்கள் பிறந்தநாள் . வாழ்த்துக்கள் பல உண்டு ! அதிலே என்னுடையதும் ஒன்று..! இருப்பினும் ஒன்று ! இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் குருபெயர்ச்சி...தலைவர் என்னை போல் ஒருவனில் சொல்வதை போல..ஆமாம்...பேந்துடான் !
நல்ல நாள்...இனிய நாள்..தங்கள் பிறந்த நாள்..! வாழ்த்த வயதில்லை...! உங்கள் ஆசீர்வாதம் இந்நன்னாளில் பெற ஆசை..! நீங்களும் எனக்கு ஒருவிதத்தில் குருதான் !
மிக்க நன்றி சார். என் வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு.
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!
அந்த உடல் தான் நடிகன் !
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!
தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!
தங்கள் வலைப்பூவில் அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2013 08:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks