-
1st June 2013, 07:57 PM
#11
Senior Member
Veteran Hubber
என்னை இடைவிடாமல் நினைவில் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களே....
இத்திரியைத் தங்கள் பொற்கரங்க்களால் துவங்கி வைத்தமைக்குப் பாராட்டுக்கள். முதல் பதிவே முத்தான பதிவு. நடிகர்திலகம் என்ற சிறந்த கலைஞரை தாண்டி, நடிகர்திலகம் என்ற அற்புத மனிதரை அனைவருக்கும் காட்டியுள்ளீர்கள்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு மிக மிக அருமை. ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படமாக ஆய்வு செய்வதோடு அது எந்த நடிப்புப் பள்ளியின்கீழ் வருகிறது என்ற ஒப்பீடும், சில சமயங்களில் சில படைப்புகள் பல பள்ளியின் ஒன்று சேர்ந்த கலவைஎன நீங்கள் விளக்கும் விதமும் அபாரம்.
இவற்றை இங்கே பதிவதோடு நிற்காமல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற முனையுங்கள். முனைபவர்களுக்கு மட்டுமே 'முனைவர்' பட்டம்.
(அட்வான்ஸாக) டாக்டர் எஸ்.கோபால் வாழ்க..!!...
-
1st June 2013 07:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks