-
24th June 2013, 08:48 AM
#11
Junior Member
Regular Hubber
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் தங்களின் மனதை கவர்ந்த பாடல் எது? எதனால்?
சாந்தி சுந்தர், சின்ன சேலம்.
கண்ணதாசன் ஒரு பல்கலைக் கழகம். அவரது ஆயிரக்கணக்கான பாடல்களில் எதைச் சொல்வது? எதை விடுவது? ஆயினும் அவரது கடைசி பாடலான, "கண்ணே கலைமானே...' எனக்குப் பிடித்த பாடலாகும்.
கதை சொல்வதில் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை.
"கண்ணே கலைமானே...' பாடல் வரிகளில் "மூன்றாம் பிறை' படத்தின் மொத்த கதையையும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, "உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே...' என்கிற வரிகள்தான் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ். படத்தின் உச்சக்கட்த்தை முன்பே பாடலிலோ, வசனத்திலோ முன் உரையாக கோடிட்டு காட்டுகிற விஷயம் இது.
"சிலப்பதிகார'த்தில் ஒரு காட்சி. கோவலனும், கண்ணகியும் பூம்புகார் நீங்கி மதுரைக்கு செல்கிறார்கள். தொலை தூரத்தில் மதுரை மாநகரின் கொடி அசைந்துகொண்டிருக்கிறது. "சிலப்பதிகாரம்' எழுதிய இளங்கோவடிகள், அந்த கொடி அசைவது, அவர்களை பார்த்து ஆபத்து இருக்கிறது. வராதே... வராதே என்று சொல்வதைப் போல் இருப்பதாக எழுதுகிறார். இதைத்தான் "கண்ணே கலைமானே...' பாடலில் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு "காதல்' படத்தில் அமைந்தது. "பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது... பைத்தியம் பிடிக்குது. எல்லாம் அவளாலே..' என்று படத்தின் கிளைமாக்ûஸ எழுதி இருந்தேன்.
(Na. Muthukumar - Cinema Express)
http://www.cinemaexpress.com/cinemae...ame=Interviews
-
24th June 2013 08:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks