Page 76 of 399 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #751
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ...
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் முரளி சார்!

    தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தங்களைப் போன்ற பழுத்த அனுபவசாலிகளின் துணையோடும், வழிகாட்டுதல்களோடும், ஆசிகளோடும் நமது திரி வெற்றிநடை போட்டு வருகிறது. அதற்காக தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராகவேந்திரன் சாரின் அயராத உழைப்பு, கோபால் சாரின் நறுக்கென்ற உடனுக்குடனான வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பாணி இன்ட்ரெஸ்டிங் பதிவுகள், கார்த்திக் சாரின் என்றுமே சலிப்பே ஏற்படாத அனுபவப் பதிவுகள், ராகுல்ராமின் ஆய்வுகள், கண்பத் சாரின் நகைச்சுவை இழையோடும் பதிவுகள், சவுரி சாரின் timing வீடியோக்கள், மற்றும் தொடர்கள், மற்றுமுள்ள அனைத்து நண்பர்களின் பங்களிப்புகள் என்று திரி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. இருந்தாலும் இன்னும் ஏனையோர் அனைவரும் பங்கு கொண்டால் நமது திரியை மிஞ்ச எதுவுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. காட்டுப் பூச்சி சார், சின்னக் கண்ணன் சார் போன்றோரின் வருகையும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    'பாசமலர்' படத்தின் வெள்ளி விழாப் புகைப்படங்களுக்காக நடிகர் R.S சிவாஜி அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுவோம்.

    என் உயிரில் ஒன்றிப்போன 'ஞான ஒளி' திரைப்படத்தை நமது NT FAnS அமைப்பின் சார்பில் நிச்சயமாக திரையிடுவோம் என்று தாங்கள் கூறியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காக என் வாழ்நாள் நன்றிகளை தங்களுக்கும், ராகவேந்திரன் சாருக்கும் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். நான் 'ஞான ஒளி' நினைவிலேயே இருக்கிறேன். அதுவும் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்க்கப் போவதை நினைத்தாலே உள்ளம் பூரிக்கிறது.

    தாங்கள் கூறியது போல ஆண்டனியையும், அருணையும் அமர்க்களமாக வரவேற்க நாட்களை எண்ணிக் காத்துக் கொண்டிருக்கும்

    தங்கள் அன்பு வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 24th June 2013 at 11:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #753
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    நடிகர் திலகத்திற்கு மணி மண்டபமும், நினைவிடமும் கூடிய சீக்கிரம் அமைய வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை மிக நியாயமானது. அது ஒவ்வொரு தலைவரது ரசிகருடைய கூக்குரல். அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்தக் கருத்துக்களை தங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. 'அன்பு' ஆடைகளை அன்போடு ஆராத்தித்த தங்களுக்கு என் அன்பு நன்றிகள். தங்கள் உண்மையான உற்சாகமான பாராட்டுதல்கள் என் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றன. அனைவரது பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து, அவர்களை உற்சாகப் படுத்தி, அந்தப் பதிவுகள் சம்பந்தமான சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொள்ள எங்கள் கார்த்திக் சாரைப் போல முடியாது. சிகரெட்டுடன் தலைவர் உள்ள ஊ.வ.உறவு அவ்தாரைப் பார்த்ததுமே மனம் றெக்கை கட்டிப் பறக்குமே எங்கள் கார்த்திக் சார் பதிவிட்டிருக்கிறார் என்று. நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #754
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்,

    ஆடைகள் தொடருக்கு அன்பான பாராட்டுகள் அளித்த தங்கள் நடுநிலைக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றிகள். கண்ணியத்துக்கு மறு பெயர் வினோத்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #755
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    தங்கையை பற்றி சுருக்க, ஆனால் பிரமாதமாக எழுதி வெறுப்பேற்றி விட்டீர்கள். 'ஞானஒளி' இலிருந்து இன்னும் விடுபடவேயில்லை. ஆனால் தங்கள் எழுத்து இன்று இரவு என்னை கண்விழிக்க வைத்து விட்டது. பார்க்கப் போகிறேன். நல்ல்ல்லாயிருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #756
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சவுரி சார்,

    'ராஜா' வின் வசூல் விவரங்கள் தந்த தங்கள் பதிவு ராஜாங்கப் பதிவு. வசூல் பிரளயங்கள் நடத்திக் காட்டிய ராஜாவாயிற்றே எங்கள் தங்க இல்லை இல்லை நம் தங்க ராஜா. துல்லியமான வசூல் விவரங்களுக்கு நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #757
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்,

    'பாவை விளக்கு' ஷூட்டிங் ஸ்பாட் நிழற்படத்திற்கு மிக்க நன்றி! அருமை
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #758
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தலைவர் நடித்த 'பெம்புடு கொடுகு' தெலுங்குப் படத்தின் அபூர்வ ஸ்டில்.



    இப்படத்தைப் பற்றிய விமர்சனம் ஒரு தெலுங்குப் பத்திரிக்கையில் வந்துள்ளதைதான் கீழே பார்க்கிறீர்கள். தெலுங்கை தமிழில் மொழி பெயர்த்து யாராவது சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பார்த்தசாரதி சார் அல்லது பாலா சார்... ப்ளீஸ்.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #759
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சித்தூர் வாசுதேவன் சார்,

    தங்கள் பாராட்டிற்கு நன்றி! ரெடியாகவே இருங்கள் 'ஞான ஒளி' ஜோதியில் கலப்பதற்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #760
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    School Of Acting திரியில் எழுத வேண்டாம் என்ற எண்ணமில்லை. நான் உங்களிடம் சொன்னது போல நீங்கள் எழுதுவதை supplement செய்யவும் அந்த பதிவுகளை மேன்படுத்தி காட்டவும் என் பதிவுகள் உதவுமேயானால் அதை மனமுவந்து செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன். உங்கள் பதிவுகளுக்கு அப்படிப்பட்ட ஒரு அணிலாக இருக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன்.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •