Page 79 of 399 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #781
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மன்னரே,
    மதுரைக்கு தனி திரி தொடங்கும் உத்தேசம் போல?
    வழக்கம் போல ஜோர். ஆனாலும் ஹிந்திக்காக ஒரு முழு பாகம் waste பண்ணி விட்டீர்கள்.
    ஆ கலே லக் ஜா என்றால் வா. வந்து கழுத்தை கட்டி கொள் என்று அர்த்தம்.
    இதற்கு உத்தமன் என்ற மொழி மாற்றம் அநியாயம் (என்னவோ தேச பக்தி படம் போல)
    நல்ல வேளை ஒரிஜினல் முதல் தலைப்பு கொடுத்து வைத்த மகராசன். (ராமராஜன் தலைப்பு போல இல்லை?) அதற்கு உத்தமன் better .
    Last edited by Gopal.s; 26th June 2013 at 08:38 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #782
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    நான் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்தது மூன்று முறை... என் பெற்றோர்கள் மறைந்த போதும் நம் இதய தெய்வம் மறந்த போதும் மட்டும் தான். வேறு எதற்கும் நான் வருத்தப் பட்டதில்லை. ... நடிகர் திலகம் மட்டுமே தன் ரசிகர்களை பாசத்தோடு பிள்ளைகளே என அன்புடன் அழைத்து கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தினார். அவர் கட்டிக் காத்த அன்னை இல்லத்தின் மாண்பை இன்று வரை கட்டிக் காத்து அவருடைய புகழுக்கு மேலும் சிறப்புச் சேர்த்து வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு விலை மதிக்க முடியாத சொத்தாக தன் பிள்ளைகளை விட்டுச் சென்ற பேறை அவருக்குத் தந்துள்ள அவருடைய பிள்ளைகளை விட, வேறு யாரும் அதிகம் செய்து விட முடியாது. இது அனைவருக்கும் தெரியும். எனவே அவர் குடும்பத்தையோ குறை கூறுவோரை நான் ரசிகராகவே மதிப்பதில்லை. எனவே அவர்களுடைய கருத்துக்களுக்கு நான் வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை.

    அதே போல நடிகர் திலகமும் அவருடைய சகோதரரும் பார்த்துப் பார்த்து நிர்வகித்து இன்று வரை முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள, ஜீவனுள்ள, நடிகர் திலகம் நீக்கமற நிறைந்திருக்கும், அவருடைய அலுவலகத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என சொல்பவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் நடிகர் திலகத்தின் மேல் உள்ள பாசம் என்பது தெரிய வில்லை. அவர் குடும்பத்தைத் தூற்றுவதைத் தவிர வேறு ஏதும் அறியேன் பராபரமே என அலைவோரின் உள்நோக்கம் மட்டுமே புலப் படுகிறது, அல்லது அப்படி மேம்போக்காகப் பேசுவோரின் பேச்சினை நம்பி சுயமாக சிந்திக்காமல் அதை ஆமோதிக்கும் அப்பாவிகளின் கருத்து மட்டுமே புலப் படுகிறது. இரண்டாவதாக இருந்தால் சொல்லித் திருத்தலாம். முதலாவதாக இருந்தால் அவர்கள் நிச்சயம் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் பட்டியலில் நான் வைக்க மாட்டேன்.
    Last edited by RAGHAVENDRA; 26th June 2013 at 08:38 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #783
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உத்தமன் திரைப்படம் வெளியான போதும் சிவகாமியின் செல்வன் போல ஒரு மேம்போக்காக கருத்தை முதல் நாளே பரப்ப ஒரு சாரார் ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் மேட்னி முடிந்து மாலைக் காட்சியில் ஒருவர் இந்த அடிப்படையில் ஹிந்திப் படம் போல உத்தமன் இல்லை என கமெண்ட் அடிக்க எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை ஒரு ரசிகர் பட்டாளம் அவரை சுற்றி வளைத்து கண்டனக் குரல் எழுப்ப ஒரு வழியாக அவர்களை சமாளித்து, அந்த கமெண்ட் அடித்த நபரை அங்கிருந்து வெளியேற்றினோம். உத்தமன் முதல் நாள் முதல் காட்சி சாந்தி என்றால் எனக்கு நினைவிற்கு வருவது இந்த நிகழ்ச்சி தான்.

    உத்தமன் படத்தை சாந்தி திரையரங்கில் திரையிட்ட போது புதிய வித்தியாசம் தெரிந்தது. முதன் முதலாக புதிய ரசிகர்கள் உருவாகி சாந்திக்கு வரத் தொடங்கினார்கள். 10 வாரம் என்றாலும் 50 நாட்களைக் கடந்த பின்னும் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெற்றன. க்யூ வரிசை மிக நீண்ட தாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியூட்டிய விஷயம். அதுவும் 50 நாட்களைக் கடந்த பின்னும். அதே போல அலங்காரங்களும் அமர்க்களமாயிருந்தன. தோரணங்களும் கொடிகளுமாய் அட்டகாசமாய் தோற்ற மளித்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால் அது தேவன் வந்தாண்டி பாடல் காட்சி தான். தியேட்டர் முழுவதும் அந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சொல்லி மாளாது. அதே போல் நாளை நாளை பாடல் காட்சிக்காகவே திரும்பத் திரும்ப ரசிகர்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். அதுவும் வெள்ளை உடையில் இரு கைகளையும் மேலே தூக்கியவாறு ஒரு ஜம்ப் செய்வார் .. ஒவ்வொரு காட்சியிலும் உடையலங்காரம் அமர்க்களமாயிருக்கும்.

    இந்தப் படத்தைப் பற்றி ஆணழகன் தொடரில் எழுதும் போது வாசு சாருக்கு செம தீனி காத்திருக்கிறது.

    புதிய ரசிகர் மன்றங்களுடன் உத்தமன் பவனி சாந்தியில் மறக்க முடியாதது.
    Last edited by RAGHAVENDRA; 26th June 2013 at 09:40 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #784
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,
    உத்தமன் திரைப்படத்தினை நினைவூட்டி நம் அனைவரின் நெஞ்சங்களிலும் மலரும் நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள். அது மட்டுமல்ல தங்களுடைய ஈர்ப்பு சக்தி பம்மலார் சாரை எப்படி வரவழைத்து விட்டது பாருங்கள். பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #785
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    ரசிகர்கள் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுத்து கொண்டு, இங்கு பங்கு பெரும் பலரை நாம் discourage செய்வது திரிக்கு நல்லதல்ல. நடிகர்திலகத்தை விமரிப்பதையே தவறு என்று எண்ணாதவர்கள் நம்மிடையே உண்டு. அப்படி இருக்கும் போது ,நாம் மற்றதை சொல்லி அவர்களை ஓரம் கட்ட முடியாது.
    கருத்து சுதந்திரம் என்ற வகையில், ஒப்பு கொள்கிறோமா என்பது வேறு விஷயம், அங்கீகரித்தே தீர வேண்டும்.
    இது எனது மிக தாழ்மையான அபிப்ராயம். தவறாக எண்ண வேண்டாம்.

  7. #786
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,
    நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள்ள பாசம் எனக்குத் தெரியாததல்ல. அதே சமயம் தாங்கள் அன்னை இல்லத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தின் புதல்வர்கள் பற்றியும் கூறியுள்ள கருத்துக்கள் எனக்கு வியப்பைத் தந்தன. தாங்கள் அப்படி சொல்பவரல்ல என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று வரை நடிகர் திலகத்தின் கூட்டுக் குடும்ப தாத்பர்யத்தைக் கட்டிக் காத்து அவர் மறைந்த பின்னும் அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றி வருவதே எவ்வளவு பெரிய சிறப்பான விஷயம் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. உலகம் போற்றும் நடிகரின் புகழையும் பெருமையையும் கட்டிக் காப்பது என்பதே அவர்களின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சவால். அதிலிருந்து சற்றும் வழுவாமல் இன்று வரை நடிகர் திலகத்தின் குடும்பம், அவர் பிள்ளைகள் என்றால் ஒரு தனி மரியாதையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது பாராட்டிற்குரிய விஷயம். ஒரு ரசிகராய் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உணர்ச்சி வசப் படலாம், செயல் படலாம். ஆனால் அவர் குடும்பத்தினர் அந்த மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல் பட முடியாது. நடிகர் திலகத்தின் பெயருக்கும் புகழுக்கும் எந்த வித பங்கமும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் அவருடைய புதல்வர்கள். நடிகர் திலகம் தொடங்கி வைத்த அறக்கட்டளையை சிறப்புற நிர்வகித்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளை சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி வருகிறார்கள் அவருடைய புதல்வர்கள். இன்று வரையிலும் பிறந்த நாளாகட்டும், நினைவு நாளாகட்டும், அன்னை இல்லத்தில் ரசிகர்கள் தங்கள் வீடு போல் எந்த வித நிர்ப்பந்தமும் இன்றி நடிகர் திலகத்தின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி அவர் வாழ்ந்த வீட்டை கோவிலாக எண்ணி அவரை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வு வேறு யாருக்காவது உள்ளதா என்பதைத் தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.

    உரிமையோடு தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் இது தான். மற்றவர்களைப் போல தாங்களும் நடிகர் திலகத்தின் புதல்வர்களைக் கருதுவது எனக்கு வியப்பளிக்கிறது. மாற்று முகாம் ரசிகர்கள் கூட இன்று வரை அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் புதல்வர்களையும் பெரு மதிப்புடன் கருதுகிறார்கள். அவர்கள் கூட இந்த மாதிரி விமர்சிப்பதில்லை. தாங்கள் அந்தக் கால ரசிகர் என்ற முறையில் தங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மேம்போக்காக நடிகர் திலகத்தின் பிள்ளைகளை விமர்சிப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதீர்கள். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். இதற்கும் மேல் தாங்களும் அப்படித் தான் கருதுவீர்கள், எழுதுவீர்கள் என்றால் இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #787
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    முதலில் தாங்கள் கருத்து சுதந்திரம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு எழுதுங்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரைப் பற்றி விமர்சிப்பது எப்படி கருத்து சுதந்திரம் ஆகும். தாங்கள் இதனை அடிக்கடி செய்கிறீர்கள். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது தங்களுடைய கருத்து சுதந்திரத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் அதனை பொதுவில் செய்யும் போது அதற்கு பதில் கூறாமல் இருக்க முடியாது. ரசிகர் ரசிகர் அல்ல என்று நான் தனிப்பட்ட முறையில் தானே தீர்மானிக்கிறேன். அது என் கருத்து. நடிகர் திலகத்தை விமர்சிப்பவர்கள், அவரைக் கிண்டல் செய்வர்கள், அவர் குடும்பத்தை விமர்சிப்பவர்களும் ரசிகர்கள் தான் என்று தாங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் அது உங்கள் இஷ்டம். நான் ஒன்றும் சொல்லவில்லையே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #788
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இணையத்தில் முதல் முறையாக

    உத்தமன் திரைப்படம் இலங்கையில் வெள்ளி விழாக் கண்டதற்கான விளம்பர நிழற்படம்

    உபயம்- ஆவணத்திலகம் பம்மலார் மற்றும் இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #789
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒப்பு கொள்கிறேன் ராகவேந்தர் சார்.
    உங்கள் வெள்ளி விழா மீள் பதிவுக்கு நன்றிகள்.

  11. #790
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    உத்தமன் - 38வது உதயதினத்தைப் பறைசாற்றி எல்லோருக்கும் ஒரு பொறுப்பை அளித்து அனைவருடைய பங்களிப்பையும் பெறவைத்துவிட்டீர்கள். நன்றி.

    தங்களின் சென்னை, திரையரங்க அளப்பரைகள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
    Last edited by KCSHEKAR; 26th June 2013 at 12:11 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •