-
6th July 2013, 08:10 PM
#971
Junior Member
Seasoned Hubber
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுவதில் மகிழ்ச்சி
விட்டு போன பா series இருந்து மறுபடியும் தொடங்கிறேன்
பொதுவாக நம்மவர் நடித்த படங்கள் திரை உலகுக்கு ஒரு inspiration அக இருந்து வந்தது , சொல்ல போனால் இருந்து கொண்டே இருக்கிறது
அப்படி பட்ட ஒரு படம் தான் இந்த படிக்காத மேதை
இந்த படத்தின் பாதிப்பில் இருந்து வந்த படங்களை சொன்னால் கிட்ட தட்ட ஒரு அரை டாசன் படங்கள் தேறும் அதில்
முக்கியமான படங்கள் என்றல் பெயர் சொல்லும் பிள்ளை , முத்து எங்கள் சொத்து , பொன்மனசெல்வன் etc
இந்த படத்தின் கதை ஒரு நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுக்கு ஒரு எடுத்துகாட்டு , இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க நம்மவரை விட்டால் வேறு யார் , அதுவும் நம்மவர் நிஜ வாழ்கையிலும் ஒரு மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் அல்லவா
இந்த படத்தில் நம்மவர் ரோல் கோமாளிக்கும் , வெகுளிக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய வித்தியாசத்தை அழகாக நம்ம கண் முன்னே கொண்டு வந்து இருப்பார்
படம் titles போடும் பொழுதே இயக்குனர் படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கூட்டு குடும்பத்திற்கு உள்ளே கொண்டு சென்று விடுவார்
முதல் காட்சியில் மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் ரங்கா ராவ்க்கு அறுபதம் கல்யாணம் என்ற மங்களகரமான சம்பவத்தில் இருந்து தொடங்கிறது
தொடர்ந்து அவர் தன் குடும்பத்தின் அங்கத்தினர் எல்லோரையும் அறிமுகபடுதுகிறார் , அதில் ரங்கன் (சிவாஜி) ஒரு பூசனிக்காயை வைத்து கொண்டு அறிமுகம் ஆகும் காட்சி இமேஜ் என்ற பிம்பத்தை உடைத்து விடுகிறது , அந்த ஒரு காட்சியில் மட்டும் இல்லை படம் முழுவதும் தான்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் முடி கூட நடித்து விடுகிறது . அவர் கர்லா கட்டை யை வைத்து கொண்டு மிகவும் அகண்ட மார்பை காட்டும் அழகு , எமனுக்கு எமன் படத்துக்கு ஒத்திகையாக இருக்குமோ , சிவாஜி கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளும் பொழுது , அவருக்கு அத்தை மேலே இருக்கும் நம்பிக்கை யை காட்டுகிறது .
கல்யாணம் ஆன பிறகும் கூட தன் மனைவி சௌகார்விடம், தன் மாமா , அத்தை பற்றி பேசுவதும் , அவர்களின் மீது தன் மனைவி யை விட கனிவாக இருக்கிறார் ,
ரங்கா ராவ் வின் நிலைமை மோசம் ஆன உடன் , மகன்களால் உதசின படுத்த படும் பொழுது , ரங்கன் மட்டும் அப்படியே இருக்கிறார்
எல்லோரும் NT வேலைக்கு சென்ற உடன் அவர் வாங்கி வரும் cigarette வங்கி வாரும் காட்சியை பற்றி சொல்வார்கள் , ஆனால் எனக்கு ரங்கா ராவ் NT யிடம் தனியாக பேச வேண்டும் , வெளியே போ என்று சொல்லும் பொழுது NT அதை ஒரு வித அர்த்தத்தில் எடுத்து கொள்ளும் இடம் என்னக்கு மிகவும் பிடித்த காட்சி . தன் தங்கையை வேண்டாம் என்று மறுத்த பையன் யை தெரியாமல் காப்பாத்துவதும், தெரிந்த உடன் விருட் என்று செல்வதும் , அதை வைத்தே பிரச்சனைகளை தீர்ப்பதும் அருமையான திரைகதை, இந்த படத்தில் NT உடை , சாதரண வேஷ்டி ,சட்டை தான் ,அதுவும் அந்த சட்டையும் மிகவும் லூஸ் ஆக இருக்கும் . இந்த படத்தை பற்றி சொல்லி கொண்டே போகலாம்
அதே போலே இந்த படத்தின் inspiration ல் எடுக்க பட்ட படங்களில் கதாநாயகன் வெளியே சென்ற உடன் பணக்காரன் ஆகி விடுவர் , ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி cinematic liberties எதுவும் இல்லை , மாறாக நம்ம எல்லோர் வாழ்கையிலும் நடக்கும் விஷயம் போலே , மிகவும் இயல்பாக (நல்லவர்க்கு எல்லாம் நல்லதே நடக்கும் ) ரங்கன்
மொத்தத்தில் ரங்கன் இன்றும் நம் இடையே வாழ்ந்து கொண்டே இருக்கிறார்
-
6th July 2013 08:10 PM
# ADS
Circuit advertisement
-
6th July 2013, 08:11 PM
#972
Junior Member
Seasoned Hubber
Dear Sowri Sir,
Ur posts are very good
Dear NT sixty degree sir,
Your videos are fitting reply visually to all sections of people
-
6th July 2013, 09:16 PM
#973
Junior Member
Newbie Hubber
ரோஜாவின் ராஜா -1976
வரட்சியான வருடத்தின் இறுதியில் வீசிய வசந்தம். சித்ரா பௌர்ணமி தந்த ஏமாற்றத்தில் மீள்வதற்கு ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து. நான் பொறியியல் முதலாண்டு மாணவனாய் First Semester exam முடிந்து விடுமுறை விட்ட பிறகும், இரு நாட்கள் சென்னையில் தங்கி முதல் நாள் மாலை காட்சி plaza கொட்டகையில் (சாந்திக்கும் ,தேவிக்கும் நடுவில் திருஷ்டி போல)படு ஆவலாய் போனேன் . என் favourite Pair (பொம்மையில் வேறு மார்பில் முகம் புதைக்கும் காட்சி) அப்படியே கனவில் மிதப்பது போல போனேன். என் அத்திம்பேர் தயவில், theatre மேனேஜர் எனக்கும் என் பத்து நண்பர்களுக்கும் முதல் வகுப்பு டிக்கெட் ஒதுக்கி இருந்தார். அதனால் சரியாக 6.30 மணிக்கு சென்று டிக்கெட் லபக்கி போனோம்.
மூன்று நண்பர்கள் சிறிதே மதில் மேல் பூனை .ஆரம்ப காலேஜ் காட்சிகளில் (என்ன செய்வது. எல்லா படத்திலும் என்ன பாத்திரமானாலும் கோட் போட்டு வந்தால் ???)படுத்தி விட்டனர். என்னாலும் சமாதானம் சொல்ல முடியாமல் படத்தை பார்க்க விடுங்கடா என்று எரிந்து விழுந்தேன். இறுதி வருட பொறியியல் மாணவர்கள் T Square தூக்க அவசியமே இல்லை.
சாம்ராட் அசோகன் நாடகம், சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட இரண்டு Duets (ரோஜாவின் ராஜா,அலங்காரம் கலையாத), சினிமா கொட்டகை காட்சி(ஏன் சார் நீங்க சாக்லேட் சாப்பிடுவீங்க இல்லை), அதை சிவாஜி,வாணிஸ்ரீ தனக்குதானே அசைபோட்டு பேசி சிரிப்பது, சந்திக்க முயன்று பிறரால் இடைஞ்சல் வரும் காட்சி, சிவாஜி-வாணிஸ்ரீ பேசி சிரிக்கும் romance காட்சி என்று காதல் காட்சிகள் இந்த magic pair chemistry யால் அவ்வளவு நன்றாக வரும்.நண்பர்களும் மிக ரசித்தனர்.
தன்னை தேற்றி கொள்ள முயன்று முடியாமல் உடையும் காட்சிகள், சித்தபிரமை ஆரம்ப காட்சிகள்,சம்பந்தமில்லாமல் hostel சென்று ஸ்ரீகாந்த் துக்கு திருநீறு பூசுவது என்று சிவாஜி அசத்துவார்.ஆனால் மனோகர் வில்லத்தனம் ரெண்டும் கெட்டானாய் , speedbreaker போல படத்தை தடுமாற வைத்து சுவாரஸ்யம் குறைக்கும்.
வீரப்பன் (நகைச்சுவை track புகழ்)கதை, சுந்தரம் வசனம், விஜயன் இயக்கம் எல்லாமே இன்னும் மெருகேற்ற பட்டிருக்குமானால் படத்தின் range எங்கோ போயிருக்கும் .புரட்சிதாசன்-விஸ்வநாதன் இணைவில் இரு பாடல்கள் நன்றாய் வந்தது.
நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து, ஓரளவு அகாலமாக வந்தாலும் ,அடுத்த மாதமே வந்து சிவாஜியின் மிக பெரும் பின்னாள் வெற்றி அத்தியாயங்களுக்கு முன்னுரை எழுதிய தீபம் படத்திற்கு கட்டியம் கூறுவது போல 1976 இல் உத்தமனுக்கு அடுத்து வெற்றியடைந்த படம்.
-
6th July 2013, 10:43 PM
#974
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல்
படிக்காத மேதை நடிகர் திலகத்தின் படங்கள் அந்தப் பெயருக்கு அவரை மிகவும் பொருத்தமாக ஆக்கி விடும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக அந்தப் பெயரை வைத்து அவரை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்ற அந்த படத்தைப் பற்றிய தங்கள் கருத்துரை அபாரம். தாங்கள் கூறிய காட்சி பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமான காட்சியாகும். தொடருங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th July 2013, 10:50 PM
#975
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்
தாங்கள் கூறிய அதே முதல் நாள் மாலைக் காட்சி முதல் வகுப்பில் தான் நானும் பார்த்தேன்.
தாங்கள் கூறிய முதல் வகுப்பு மாணவன், கடைசி வகுப்பு மாணவன் என்பதையெல்லாம் யார் சார் பார்த்தார்கள்.. அந்தத் திரையில் நாளை நீ மன்னவன் என்று நம்மையெல்லாம் புலமைப் பித்தன் வரிகள் மூலமாக நடிகர் திலகம் உரைத்ததையல்லவா மெய்ம் மறந்து பார்த்தும் கேட்டும் அமர்ந்திருந்தோம். பிளாசா தியேட்டரில் மாலைக் காட்சி பார்ப்பது தனி சுகம். ஆனால் முதல் வகுப்பில் அல்ல. கீழே மத்திய வகுப்பில். நான்கு பக்கங்களிலிருந்தும் காற்று நம்மை இதமாக வருடியபடியே செல்ல ரோஜாவின் ராஜா பாடலை அந்த அரங்கில் கேட்டுக் கொண்டே நடிகர் திலகத்தின் ஸ்டைலை ரசித்துக் கொண்டே படம் பார்த்த அனுபவம் எங்கே சார் ஏசி தியேட்டரில் கிடைக்கும். அதுவும் அந்த சாம்ராட் அசோகன் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகும். அடையார் ஆலமரத்தின் பின்னணியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் அமர்ந்து வசனம் பேசும் காட்சி.... பசுமையாக நினைவில் இருக்கும். அலுவல் இருந்ததால் அந்தக் காட்சியின் படப்பிடிப்பிற்குச் செல்ல முடியவில்லை. ஆனால் அந்த ஷூட்டிங் பார்த்து விட்டு வந்த நண்பர்கள் வர்ணித்ததெல்லாம் ... அந்த காஸ்ட்யூமைத் தான்... அந்தப் பூப்போட்ட சட்டை ... அட்டகாசம்...
மீண்டும் வாசு சாரின் தயவு தேவைப் படுகிறது... சார் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடருக்கு ஏகப் பட்ட படங்கள் க்யூவில் நிற்கின்றன.. சீக்கிரம் சார்...
அது வரை ஞான தீபம் நாம் ஏற்றுவோம் நல்ல பாதை நாம் காட்டுவோம் என தலைவர் கூறுவதைக் கேட்போமா...
பி.கு. பிளாசா தியேட்டர் சாந்தி, தேவி திரையரங்குகளைத் தாண்டி.... இரண்டிற்கும் நடுவில் அல்ல...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th July 2013, 01:37 PM
#976
Junior Member
Devoted Hubber
பிரபல போர்பஸ் பத்திரிகை, ஜூன் மாதம் " நூறு வருட இந்திய சினிமாவின் 25 தலைசிறந்த நடிப்பு என்று ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது, அதில் நமது நடிகர் திலகம் அவர்களின் பராசக்தி நடிப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அவர்கள் இன்னும் சரியான முறையில் தேர்ந்தேடுப்பராயின் 25இல் பாதிக்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்புதான் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. !
Sivaji Ganesan
in Parasakthi (Supreme Energy/Goddess), 1952
In his cinematic debut, Sivaji Ganesan (1928-2001) plays a man from Burma who visits his hometown in India to attend his sister’s wedding, only to become a victim of frauds and crooks, losing everything except his sense of justice. This plays out in a court scene towards the climax. The scene is a heady mix of sober photography, hard hitting dialogues (written by M Karunanidhi, Tamil Nadu’s former chief minister), and a passionate performance by Sivaji. His acting evolved over the years, but the core elements that defined him—he could speak a thousand words with a mere gesture, and could mesmerise audiences, like Morgan Freeman, by reading out a telephone directory—were all there.
Read more: http://forbesindia.com/article/100-y...#ixzz2YM9B2tfP
http://forbesindia.com/article/100-y...cinema/35125/0
BEST OF MORGAN FREEMAN
Last edited by NTthreesixty Degree; 7th July 2013 at 04:34 PM.
-
7th July 2013, 01:44 PM
#977
Junior Member
Seasoned Hubber
சவாலே சமாளி
நேற்று காலையில் கொஞ்சம் மேலோ டிராமா படம் பார்த்த உடன் ஒரு கலர் சிவாஜி படம் பார்க்க வேண்டும் என்பது ஒரு ஆசை . எங்க அம்மா வேறு சவாலே சமாளி படத்தின் ரசிகை .
சரியாக 1.00 மணிக்கு படம் ஆரம்பித்தது . பிரிண்ட் டாப் கிளாஸ் உபயம் ராஜ் வீடியோ விஷன் . இந்த படம் நல்ல ஒரு கிராமிய படம் படம் ஆரம்பித்த உடன் வரும் டைட்டில் சாங் அதை படும் MSV சார் ன் குரலும் நம்மளை அந்த கதை நடக்கும் புலியான்சேரிக்கு அழைத்து சென்று விடும்.
கதை என்று பார்த்தல் ஏற்கனவே நாம் பார்த்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் சாயல் உள்ள கதை தான் Rich Vs Poor
இந்த படத்தின் costumes யை பார்த்த பிறகு வாசு சார்க்கு செம வேலை காத்து இருக்கிறது என்பது மட்டும் உறுதி .
இந்த படத்தில் நம்மவர் கொஞ்சம் ஒல்லியாக ரொம்ப அழகாக இருக்கிறார் . அவரின் அழகை மெருகு ஏத்துவது போலே வெறும் லைட் plain shirts (ப்ளூ, பிரவுன் ) ஒரே ஒரு காட்சியில் மட்டும் stripped ஷர்ட். அனால் அவர் தேர்தலில் நிக்க என்னும் பொழுது அவர் கழுத்தை சுற்றி இருக்கும் ரெட் scarf , அவர் மனைவியை வேலை செய்ய சொல்லும் பொழுதும் இருக்கிறது (புரட்சிக்கு symbolic representation )
படம் முழுவதும் சிவாஜி ஒரு rebel போலே உலா வருகிறார். அறிமுக காட்சியில் அவர் எடுத்து வைக்கும் வாதமும் (அவர் அணிந்து இருக்கும் sea ப்ளூ புல் shirt , அதை ஸ்டைல் அக மடக்கி விட்டு இருப்பதும் பாங்கு) படம் முழுவதும் வரும் VS ராகவன் சிவாஜி சண்டை தந்தைக்கும் , மகன்க்கும் இடையில் நடக்கும் வாகுவாதம் படத்தின் உயிர்நாடி .
JJ வின் பாத்திரம் திமிர் பிடித்த பணக்காரி பாத்திரம் , இந்த படத்தில் அவர் உடைகள் அபாரம குறிப்பாக stockings மற்றும் frock .
சிவாஜி JJ confrontation scenes டாப் . குறிப்பக JJ கிணத்தில் குதிக்க இருக்கும் பொழுது சிவாஜி அவரை காபாத்தி அவர் தன் மனதில் இருப்பதாய் கொட்டும் இடம் நடிப்பின் உச்சம் அதுவும் அவர் சிரிக்கும் சிறுப்பு ஒரு majestic laughter (பார்த்தாயா நான் உன்னை காபாத்தி விட்டேன் என்பதை போல ) கையை தூக்கி பேசுவதும் சிவாஜி சார் trademark . கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசாமல் இருந்து JJ , VS ராகவன் , முத்துராமன் போன்ற நடிகர்களை ஸ்கோர் செய்ய விடுகிறார் சிவாஜியின் magnanimityக்கு, தன் மேல் உள்ள நம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு .
இந்த படத்தின் 2ண்ட் ஹீரோ நாகேஷ் , காமெடி வில்லன் ,சின்ன பண்ணை நம்பியார் கூட அவர் பேசும் முடியும் முடியாது வசனம் superb , டக் பகவதியை தூண்டி விட்டு சிவாஜியை ஜெய்க்க வைக்கும் இடம் , சிவாஜி வீட்டின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் நாரதர் வேலை .
பாடல்கள் இன்று அளவும் தேன். கடைசியில் சிவாஜி JJ தங்கள் குரலில் பாடுவது இனிமையிலும் இனிமை
மொத்தத்தில் 150th படம் என்று ஒரு வித பிரமாண்டம் , ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நாயகனை வெறும் வேஷ்டி , சட்டையில் நடமாட செய்து மல்லியம் ராஜகோபால் கலக்கி இருக்கார்
-
7th July 2013, 02:09 PM
#978
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ரோஜாவின் ராஜா -1976
மூன்று நண்பர்கள் சிறிதே மதில் மேல் பூனை .ஆரம்ப காலேஜ் காட்சிகளில் (என்ன செய்வது. எல்லா படத்திலும் என்ன பாத்திரமானாலும் கோட் போட்டு வந்தால் ???)படுத்தி விட்டனர். என்னாலும் சமாதானம் சொல்ல முடியாமல் படத்தை பார்க்க விடுங்கடா என்று எரிந்து விழுந்தேன். இறுதி வருட பொறியியல் மாணவர்கள் T Square தூக்க அவசியமே இல்லை.
நம் நடிகர் திலகத்தின் தலையெழுத்தே அதுதானே..!
மற்ற நடிகர்கள் ஒரே மாதிரி எல்லா படத்திலும் நடித்தால் அதற்க்கு ஒன்றும் சொல்ல வாய் வராது எவருக்கும்..அதை போல் ஒரு நாயகன் நூறு பேரை அடித்துவீழ்தினால் எதுவும் சொல்ல வாய் வராது. ஆனால் நடிகர் திலகம் ஒரு கொட்டவிவிட்டால் கூட பறந்து வந்து குற்றம் சொல்ல மட்டும் வந்துவிடுவார்கள் இந்த மடைமை உலகிலே. !
இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள், jogging tracks , ஜீன்ஸ் , 3/4 th பாண்ட்ஸ் கூட போட்டுகொண்டு வருகிறார்கள். இப்போது நாகரீகம் என்ற பெயரில் ஒத்துகொள்வீர்கள் அனால் அன்றைய காலகட்டத்தில் நடிகர் திலகம் கோட் போட்டு வந்தால் தவறா? என்ன ஞாயமா இது ?
-
7th July 2013, 02:18 PM
#979
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ramesh Satyanarayanan
Dear Sowri Sir,
No words found to appriciate your writeup. You are one among the sidpurusar on writing on our acting god like super writers Gopal,Vasudevan,Raghavendran Sir.
Keep it up.
திரு ரமேஷ் அவர்களுக்கு,
பாராட்டிற்கு மிக்க நன்றி.
இப்போது நம்முடைய ராகுல்ராம் அவர்களும் தம்முடைய பங்களிப்பை தொடர்ந்திருக்கிறார் பாருங்கள். அதை படித்தால் திரைப்படத்தை பார்த்த ஒரு திருப்தி ஏற்படும்..!
-
7th July 2013, 02:20 PM
#980
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ragulram11
Dear Sowri Sir,
Ur posts are very good
Dear NT sixty degree sir,
Your videos are fitting reply visually to all sections of people
Dear Ragulram sir,
Thanks for your appreciation and motivation.
I am also returning the same to your FLASHBACK SERIES....It reminds me of the film once again !
Regards
Sowri&NT360d
Bookmarks