-
7th July 2013, 02:31 PM
#981
Junior Member
Devoted Hubber
இந்த "நாளை நீ மன்னவன்" பாடலின் தனி சிறப்பு என்னவென்றால் , முக்கால் வாசி நடிகர் திலகத்தின் shots "MIDFRAME " முறையில் படமாக்கி இருப்பார்கள். நடிகர் திலகம் அவர்கள் midframe காட்சிகளில் ஒரு CHAMPION என்பது அனைவரும் அறிந்ததே..! .
-
7th July 2013 02:31 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2013, 03:15 PM
#982
Junior Member
Devoted Hubber
திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் எந்த திரைஅரங்கில் வேண்டுமென்றாலும் போட்டுகொள்ளலாம். ஆனால் நாடகம் ? அதுவும் சரித்திர புகழ் வாய்ந்த வீரர்கள் நாடகம் ?
இன்றளவும் கூட நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஏதாவது ஒரு இடத்தில் நாடகமாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது ! நடிகர் திலகத்தின் வசனம்தான் இன்றளவும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
சென்ற ஆண்டு (2012)திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 15 நம் சுதந்திர தின விழா முன்னிட்டு ஸ்ரீபத்மம் கல்யாண மண்டபத்தில் நம்முடைய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகமாக அரங்கேறிய காட்சி உங்கள் அனைவரின் பார்வைக்கும் !!
கேரளா மக்கள் நினைத்திருந்தால் அவர்கள் நாட்டு மன்னர் வீர கேரள சிம்ஹம் பழசி ராஜா அவர்களுடைய வரலாற்றிலிரிந்து ஒரு காட்சியை நாடகமாக போட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நம் பெருமை அறிந்தவர்கள், நம் பெருமையின் அருமை அறிந்தவர்கள். ஆகையால்தான் அவர்கள் நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மனை தேர்ந்தெடுத்தார்கள். !
ஒரே ஒரு வருத்தம் ! கேரளா மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வு கூட நம் தமிழக ஆள்காட்டிகள் பலர்க்கு இல்லையே !
தமிழ் மண்ணே....இந்த இழிவு உனக்கா..இவர்க்கா !!
Last edited by NTthreesixty Degree; 7th July 2013 at 03:19 PM.
-
7th July 2013, 09:40 PM
#983
Junior Member
Devoted Hubber
தூத்துக்குடியில் நம் நடிக மாமன்னனின் BLOCKBUSTER திரைப்படம் "எங்கள் தங்கராஜா" பட்டையை கிளப்பிகொன்டிரிக்கிரதேன்று செய்தி வந்துள்ளது. திரி நண்பர்கள் உறுதிபடுத்த வேண்டுகிறேன் !
ஸ்டைல் சண்டைகாட்சி ...ஸ்டைல் சண்டைகாட்சி ...என்று சொல்கிறார்களே....
இந்த ஸ்டைல் சண்டைகாட்சிக்கு நிகர் உண்டா?
BACK PROJECTION முறையில் பைக் காட்சி வந்தாலும்..அது முடிந்தபினர்...அந்த பிச்சுவா கத்தியை டேபிள் மேல் வீசும் அந்த பாங்கு...அந்த நாற்காலியை காலால் ஸ்டைல் ஆக ராமதாஸ் அருகில் தள்ளிவிடுவது...பின்பு அதை திருப்பி வைத்து உட்கார்வது .....இப்படி பல ஸ்டைல் செய்திருப்பார் நம் ஸ்டைல் சக்ரவர்த்தி...திரி நண்பர்களின் பார்வைக்கு....ஒளி ஒலி காட்சி உபயம் - திரு நெய்வேலியார்...!
அதே போல சென்றவாரம் நம் நடிக மாமன்னனின் உத்தமன் வெளியாகி வசூல் சாதனை புரிந்த தகவலும் வந்துள்ளது..! நண்பர்கள் செய்தியை உறுதிபடுத்த வேண்டுகிறேன் !
-
7th July 2013, 11:18 PM
#984
சற்று நேரத்திற்கு முன்புதான் அலைபேசியில் நண்பர் சுப்பு அவர்களிடம் உத்தமன் மற்றும் எங்கள் தங்க ராஜா தூத்துக்குடியில் ஓடியது/ ஓடுவது பற்றியும் குறிப்பிட்டேன். உடனே முந்திக் கொண்டு பதிந்து விட்டார். நன்றி சுப்பு.
ஆம்.தூத்துக்குடி மதுரை ரோட்டில் நகருக்கு வெளியே அமைந்துள்ள semi permanent அரங்கமான சத்யா என்ற திரையரங்கில்தான் சென்ற வாரம் உத்தமன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது இந்த வாரம் வெள்ளி முதல் எங்கள் தங்க ராஜா திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்ற ஞாயிறன்று உத்தமன் மாலைக் காட்சிக்கு சுமார் 300 பேர் வந்திருந்தார்கள் என்றால் இன்று மாலை எங்கள் தங்க ராஜா படம் காண 400 பேர் வந்திருந்தார்களாம். அண்மைக் காலத்தில் இது போன்ற கூட்டம் வரவில்லை என்று படம் காண சென்றிருந்த நண்பரிடம் தியேட்டர் ஆட்கள் குறிப்பிட்டார்களாம்.
மேலும் பழைய நாட்களில் (அதாவது 70,80 களில்) இந்த திரையரங்கில் இது போன்ற படங்கள் திரையிடப்படும் போது எப்பேர்ப்பட்ட வரவேற்பு இருந்ததோ அது இப்போதும் சற்றும் குறைவின்றி இருப்பதாக தியேட்டர் ஆட்கள் சொன்னார்களாம் அவர்கள் சொன்னதின் அர்த்தம் என்னவென்றால் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் ஒரு படம் இது போன்ற அரங்கில் திரையிடும் போது எத்தனை நாட்கள் ஓடுமோ அது போன்றே இப்போதும் அதே நாட்கள் ஓடுகின்றது என்கிறார்கள்
தமிழகத்தின் தென் திசையில் இப்படி என்றால் தமிழகத்தின் மய்யப் பகுதியான திருச்சி மாநகரத்தில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு கெயிட்டி திரையரங்கில் ஊட்டி வரை உறவு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. அதற்கு அடுத்த வாரம் மகாராணி திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாகி வெற்றி நடை போட்டதாம்.
ஆக எந்த ஊர் எந்த திரையரங்கானாலும் எந்த காலக் கட்டத்திலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானால் அவை விநியோகஸ்தருக்கு அரங்க உரிமையாளருக்கு சந்தோஷத்தையும் லாபத்தையும் ஈட்டி தரும் என்பதற்கு இவை சில சான்றுகள் மட்டுமே!
அன்புடன்
-
7th July 2013, 11:49 PM
#985
Junior Member
Newbie Hubber
முரளி,
தகவலுக்கு நன்றி. எங்கள் தங்க ராஜா என்றுமே தங்கத்தை வாரும் . நடிகர்திலகத்தின் அந்த ஸ்டைல் ,energy , Swiftness , unpredictable Execution .....அப்பப்பா ...பிரமாதம். கிட்டத்தட்ட அந்நியன் படத்தின் split personality concept கொண்டது. படத்தில் விவரிக்க படா விட்டாலும்.
-
8th July 2013, 01:00 AM
#986
கோபால்,
ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா? இன்னும் எழுதியிருக்கலாமே! ஒரு சில விஷயங்களை தொடாமலேயே போய் விட்டீர்களே!
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் பாடல் பற்றி காட்சி பற்றி சொல்லலாம். படம் 1972 -73 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அப்போதே இந்த பாடல்கள் எல்லாம் பிரபலமாகி விட்டன. காப்பி -கானடா ராக கலவையில் அமைக்கப்பட்ட பாடலான அலங்காரம் (correct தானே?) இலங்கை வானொலியையும் விவித் பாரதியையும் தத்தெடுத்துக் கொண்டது. பாடல் வரிகளில் கவியரசர் விளையாடியிருப்பார். ஆனால் சற்றே இலக்கிய தரமாக அமைந்த வரிகள்!
கொத்தோடு பூ தந்த பன்னீர் மரம்
பொன்மாலை பெண்ணிற்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடி போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்!
அது போல் இரண்டாவது சரணத்தில்
எங்கேனும் பூபந்தல் மேளங்களோடு
கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்.
என்று எழுதியிருப்பார். படம் வெளிவந்த பிறகு அன்றைய நாட்களில் தினமணி கதிர் வார இதழில் கண்ணதாசன் கேள்வி பதில் வந்துக் கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு வாசகர் இந்த வரியை குறிப்பிட்டு பொதுவாக கல்யாணங்களில் வடமொழிதானே பயன்படுத்தப்படும். நீங்கள் கல்யாண தமிழ் என்று எழுதியிருக்கிறீர்களே அதற்கு என்ன பொருள் என்று கேட்க கவியரசர் அதற்கு பதில் அளித்திருந்தார்.
அது போன்றே மறக்க முடியாத பாடல் ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான். அந்த காட்சியும் மிக நன்றாக வந்திருக்கும். தன காதலிதான் உயிர் நண்பனுக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்தவுடன் நடிகர் திலகம் அதை வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே! அது அற்புதம். வாணிஸ்ரீயும் தன் பங்கை நிறைவாக செய்திருப்பார். கவியரசர் இந்தப் பாடலிலும் புகுந்து விளையாடியிருப்பார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ராமாயண காவியத்திலிருந்து மேற்கோள் எடுத்து அழகாய் பயன்படுத்தியிருப்பார்.
மணிமுத்து மாணிக்க மாடத்திலிருந்து ஜானகி பார்த்திருந்தாள்
அவள் மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்
என்ற வரியில் ஆரம்பித்து சரணத்தின் இறுதியில்
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
என்று முடிப்பார்.
அதே போன்று
மன்னவரெல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கல-- ங்கி விட்டாள்
என்று சற்றே விம்மிய குரலில் பாட [நமது இசையரசி சுசீலாவை விட இனிமையான குரல் வேறு எதாவது இருக்கிறதா என்ன?] மேஜர் முறைக்க, சுகுமாரி தோளில் கை வைக்க உடனே சுதாரித்துக் கொண்டு வாணிஸ்ரீ பல்லவியை பாடி முடித்து விட்டு மாடிக்கு எழுந்து போகும் காட்சி! பாடல் முழுவதும் நடிகர் திலகம் கண்களாலே உணர்வுகளை, அதாவது ஒரு புறம் உயிராக காதலித்த பெண், மற்றொரு புறம் வாழ்வளித்த நண்பன் என்ற அந்த இரண்டு தவிப்புகளையும் கண்களிலேயே உணர்த்திய காட்சியும் கூட அல்லவா அது!
அந்தக் காட்சிக்கு முன்னால் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லும் சுகுமாரியிடம் நீ போய் டிரஸ் பண்ணிக் கொண்டு உட்கார் என்று கத்தும் இடத்திலும் தியேட்டரில் நடந்தை வீட்டில் தனிமையில் உட்கார்ந்து மிமிக்ரி பண்ணுமிடத்திலும் [சார், நீங்க சிக்லெட் சாப்பிடறீங்களா] வாணிஸ்ரீ கிளப்பியிருப்பார்.
தியேட்டர் சிக்லெட் காட்சி அமர்களமாக இளமை குறும்போடு அமைக்கப்பட்டிருக்கும். வீரராகவன் படம் முடிந்து படியிறங்கும் நடிகர் திலகத்திடம் சொல்லும் என் வயசு என்ன தெரியுமா என்று கேட்டு இப்படி சிக்லெட் கொடுத்து கொடுத்துதான் இப்படி ஆகி விட்டது என்று வழுக்கையை தடவி காட்டும் காட்சிக்கு தியேட்டரில் செம response இருக்கும்.
நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் காதல் தோல்வியினால் மன நிலை பாதிக்கப்பட்டு அதன் பிறகு ஏற்படும் தாயின் மரணம். அந்தக் காட்சியில் தரையில் விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து அடடே போயிட்டியா செத்து போயிட்டியா என்று கேட்கும் காட்சி எல்லாம் பிய்த்து உதறியிருப்பார்.
இந்த காட்சியைப் பற்றி சொல்லும்போது இது படமாக்கப்பட்ட நேரம் நினைவிற்கு வருகிறது. இந்தக் காட்சி 1973 ஜூன் மாதம் இறுதியில் படமாக்கப்பட்டது. அன்றைய நாட்களில் நவசக்தி நாளிதழில் ஞாயிறன்று சினிமா செய்திகள் இடம் பெறும். அந்த வாரம் வெளி வந்த நவசக்தி சினிமா பக்கத்தில் அழாமலே அழ வைத்த சிவாஜி என்ற தலைப்பில் இந்தக் காட்சியைப் பற்றி விவரித்து அது படமாக்கப்பட்ட போது அன்றைய தினம் செட்டில் இருந்தவர்கள் எப்படி கண் கலங்கினார்கள் என்பதை எழுதியிருந்தார்கள்.
அதற்கு அடுத்த சனிக்கிழமைதான் ஜூலை 14. அன்று நியூசினிமாவில் எங்கள் தங்க ராஜா ஓபனிங் ஷோ பார்ப்பதற்காக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு தியேட்டருக்கு வெளியே நிற்கும் போது என்னுடன் வந்த என் கஸின் நண்பர்கள் மற்றும் சக ரசிகர்களிடம் இதைப் பற்றி கூற அவர்கள் சரியான் தகவலை சொல்லும்படி சொல்ல என் கஸின் என்னை சொல்ல சொன்னதும் நான் படித்தவற்றை அபப்டியே சொன்னதும் அது அப்படியே பரவி தியேட்டருக்கு உள்ளே போய் ஸீட்டில் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்கும் வரை அதை ஒவ்வொருவருக்கும் பல முறை திருப்பி திருப்பி சொன்னதும் அதை கேட்டு விட்டு படத்தை பற்றிய எதிர்பார்ப்பில் பலரும் சந்தோஷப்பட்டது இப்போதும் பசுமரத்தாணியாக நினைவில் இருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் திலகத்தை பார்க்க ஜோடியாக செல்லும் AVM ராஜன் வாணிஸ்ரீ நடிகர் திலகத்தை மட்டுமல்ல பார்வையாளர்களையும் சற்றே குழப்புவார்கள்.[இந்த உத்தியை பல வருடம் கழித்து Sp.முத்துராமன் புதுக் கவிதை படத்தில் ரஜினி சரிதா ஜோடியை வைத்து செய்திருப்பார்]. இந்த மருத்துவமனை காட்சியில் ஜனகனின் மகளை பாடல் slowவாக ஒலிக்க நடிகர் திலகம் சிவப்பு மையில் கோணல் மாணலாக பேப்பரில் தீட்டும் psychiatry touch உள்ள காட்சிகளை எல்லாம் கே.விஜயன் நன்றாகவே கையாண்டிருப்பார்.
ஓட்றா ஓட்றா பாடல் மற்றும் நாளை நீ மன்னவன் பாடல் எல்லாம் ரொம்பவே பிரசித்தம். ரோஜாவின் ராஜா பாடல் மற்றுமே படம் வந்த போதுதான் பலருக்கும் தெரிந்தது. சாம்ராட் அசோகன் வேறு பாணியில் எடுத்திருப்பார்கள் அது போனஸ்.
1976 டிசம்பர் 25 சனிகிழமை அன்று மதுரை சிந்தாமணி மற்றும் மினிப்ரியா அரங்குகளில் வெளியானது. இரண்டிலும் பார்த்தேன்.மிகவும் பிடித்திருந்தது. அவன் ஒரு சரித்திரம் மற்றும் தீபம் வெளியீடுகள் மட்டும் குறுக்கிடவில்லையென்றால் படம் பெரிய அளவிற்கு போயிருக்கும். என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72 போன்றே இந்தப் படமும் late ஆகாமல் குறிப்பிட்ட காலத்தில் வந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
1977 ஜனவரி பிலிமாலயா இதழில் இந்தப் படத்தை பற்றி மிகவும் சிலாகித்து விமர்சனம் எழுதியிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது கண்ணாடியை கழட்டாமலே கண்ணீரை துடைக்கும் லாவகம் நடிகர் திலகத்தை விட்டால் யாருக்கு வரும் என்று எழுதியிருந்தார்கள். மேலும் பாடல்களை பற்றி சொல்லும்போது கண்ணதாசன் பாடல் விஸ்வந்தன் இசையில் சௌந்தரராஜன் பாடி நடிகர் திலகம் நடிக்கும் போது பழைய சிவாஜி பட இனிமை திரும்பி வந்தது போல் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அந்த நாட்களில் படங்களின் விமர்சனத்தின் முடிவில் படத்தைப் பற்றிய ஒரு குறியீடாக ஒரு பூவின் பெயரை குறிப்பிடுவது பிலிமாலயா பத்திரிக்கையின் வழக்கம். இந்தப் படத்திற்கு குல்மொஹர் என்று குறியீடு செய்திருந்தார்கள். அது எதைக் குறிக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி அதற்கு பிறகு வந்த இரண்டு மாத இதழ்களில் ஜீனியஸ் பதில்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
கோபாலின் பதிவிற்கு ஒரு சின்ன பின்னூட்டம் இட நினைத்து தொடங்கியது ஒரு பெரிய பதிவாக அமைந்து விட்டது. பழைய nostalgic நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி கோபால்!
அன்புடன்
-
8th July 2013, 06:56 AM
#987
Junior Member
Newbie Hubber
சுப்பு சார்,
உங்களுக்கு special தேங்க்ஸ். மிக தேர்ச்சியுள்ள informative பதிவுகள்.தாங்கள் முரளி சார் பற்றி குறிப்பிட்டது போல அவர் மதுரை புள்ளி விவரங்கள் மட்டும் தருபவர் அல்ல. இந்த திரிக்கு இன்று நாம் ரசிக்கும் பலரையும் இழுத்து வந்த முன்னோடி. ஆங்கிலத்திலும்,தமிழிலும் சம புலமை கொண்ட வசீகர எழுத்து அவருடையதாகும்.
ராகுல்,
உன் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள்.
-
8th July 2013, 07:03 AM
#988
Junior Member
Newbie Hubber
ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா என்றால் என்ன சொல்ல? தூண்டு பதிவே அது.(teaser ) .அது அடைய வேண்டிய இலக்கை அடைந்து வீழ்த்தியதற்கு, தலைவர் வேந்தரும்,எழுத்து வேந்தருமே சாட்சிகளாகிறீர்கள். பாடல்கள் பற்றி விளக்கத்திற்கு நன்றி. பாடல்கள் என்னை ரொம்ப கவரவில்லை என்பதை புரட்சி தாசன் என்ற கிண்டலில் இருந்து தெரிந்து கொள்ளவில்லையா?
படத்தின் Highlight (தூக்கி நிறுத்தியவை)
சாம்ராட் அசோகன்.
சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் மற்றும் Duets .(சில அழகான உடைகள் ,locations உடன்.)
சிவாஜியின் பிரிவு துயர்,சித்த பிரமை ஆரம்பம், அம்மா மறைவு, ஸ்ரீகாந்தை தேடி hostel வரும் காட்சிகள் .
படத்தை கொஞ்சம் சறுக்க வைத்தது- ஆ(ரம்ப) முதியோர் கல்வி,Outdated predictable திரைக்கதை,.cliched வசனங்கள்., மனோகர் சம்பத்த பட்ட சுவாரஸ்யம் குறைந்த இழுவை காட்சிகள்.
Last edited by Gopal.s; 8th July 2013 at 07:47 AM.
-
8th July 2013, 09:10 AM
#989
Junior Member
Newbie Hubber
((03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் 42 வருட நிறைவு. இந்த மீள்பதிவு வாசுவிற்காக.)
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
Last edited by Gopal.s; 8th July 2013 at 09:32 AM.
-
8th July 2013, 10:00 AM
#990
Senior Member
Seasoned Hubber
Nadigar Thilagam's films in TV Channel this week - 08.07.2013 to 14.07.2013
Channel Date Time Movie
Raj Digital 09.07.2013 8.00 pm Avan Oru Sarithiram
J Movies 09.07.2013 5.00 pm Gnana Oli
Zee Tamil 10.07.2013 2.00 pm Anbukkarangal
Vasanth TV 10.07.2013 2.00 pm Viduthalai
Raj Digital 10.07.2013 1.00 pm Muradan Muthu
Mega 24 10.07.2013 6.30 pm Chithra Pournami
Jaya TV 10.07.2013 8.30 pm Thanga Pathakkam
Vasanth TV 11.07.2013 2.00 pm Vaazhkkai
Raj TV 11.07.2013 10.00 pm Ennai Pol Oruvan
Jaya TV 12.07.2013 10.00 am Thirumal Perumai
Jaya TV 12.07.2013 8.30 pm Thavani Kanavugal
Jaya TV 13.07.2013 10.00 am Raman Ethanai Ramanadi
Vasanth TV 14.07.2013 2.00 pm Uthama Puthiran
Raj TV 14.07.2013 10.00 pm Raja Mariyadhai
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks