-
9th July 2013, 07:23 AM
#1011
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
கணேஷ் சார்,
உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் கல்கி, தேவன் போன்றவர்களின் எழுத்துக்களோடு என் எழுத்தை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.அவர்கள் எங்கே? நான் எங்கே?
அன்புடன்
எனக்கு காதலிக்க நேரமில்லை படத்தில் சச்சு அப்பா ஞாபகம் வருகிறார்.
நாகேஷ்--- அப்புறம் என்னைய்யா எங்கப்பா மாதிரி நாலு என்ன பத்து எஸ்டேட், கார் வாங்கி எங்கப்பா எதிரிலேயே கால் மேலே கால் போட்டு ......
சச்சு அப்பா- அஹாம் அஹாம் ....அது மரியாதையில்லை.....அது மரியாதையில்லை....
Last edited by Gopal.s; 9th July 2013 at 07:58 AM.
-
9th July 2013 07:23 AM
# ADS
Circuit advertisement
-
9th July 2013, 07:28 AM
#1012
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
மதுரை மாநகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் மிக தொன்மையான ஊர். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்தைய ஊர். மற்ற ஊர்களில் வெறும் மனிதர்கள் வாழ்ந்த போது தெய்வங்களே மனித உருவில் நடமாடிய ஊர் நான்மாடக் கூடல். அந்த ஊருக்கு தெய்வ புத்திரன் சூரிய புத்திரன் மீண்டும் விஜயம். வரும் வெள்ளி ஜூலை 12 முதல் மதுரை அண்ணாமலை திரையரங்கில் [முன்னாள் கல்பனா தியேட்டர்] நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியம் கர்ணன் வெளியாகிறது.
அன்புடன்
நம் திரி இப்போது archeology ,History போன்றவற்றிற்கு dedicate செய்ய பட்டு விட்டது. (என்ன சுப்பு நான் சொல்றது கரெக்ட் தானே?).நீங்களும் மதுரை சரித்திரத்தை கோடி மட்டும் காட்டாமல் விலாவரியாகவே விவரித்திருக்கலாமே? விஷயத்தை சொல்வாய்ங்களா அதை விட்டு.....
-
9th July 2013, 07:33 AM
#1013
Junior Member
Newbie Hubber
abkhlabhi sir ,
Nadigarthilagam added variety and freshness to his performances by interpreting (not imitating) not only other actors, living characters, kanji periyavar,TVS Krishna, India cements narayana samy,and many more.That is forte and special talence to observe others and use it approriately. No doubt it added sheen and fresh look,versatality to his characters of different genre.
Thank you for your post.
Last edited by Gopal.s; 9th July 2013 at 07:57 AM.
-
9th July 2013, 07:53 AM
#1014
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NTthreesixty Degree
மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த
[B][U]ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -
சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக
பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.
ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.
இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.
மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.
பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள உவமை குறிப்புகள் :
ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து, சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!
அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!
பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..
போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது
சுப்பு சார்,
இதே ரீதியில் போனால் ஒரு பொறியாளர் என்ற முறையில் இரும்புத்திரை படத்தை எடுத்து spinning mill operations ,Machinery என்று நானும் விலாவரியாக அலசுவேனாக்கும்.
அதெல்லாம் சரி தலைவரே, இந்த படத்துக்கும்(எடுக்க பட்ட விதத்தில்!!!!!????) தாங்கள் சொன்ன செய்திகளுக்கும் துளியாவது சம்மந்தம் உண்டா?மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
Last edited by Gopal.s; 9th July 2013 at 07:56 AM.
-
9th July 2013, 08:04 AM
#1015
Junior Member
Newbie Hubber
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...
-
9th July 2013, 08:12 AM
#1016
Junior Member
Newbie Hubber
(04/07/1958 இல் வெளியாகி 55 ஆண்டுகள் கடந்து விட்ட என்னை மிக கவர்ந்த நடிகர் திலகத்தின் காவியம்)
அன்னையின் ஆணை.
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
-
9th July 2013, 08:43 AM
#1017
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Gopal,S.
ஆஹா,
நான் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு வினோதமான டீச்சர் இருந்திருந்தால், எதையாவது சம்மந்தமில்லாமல் கிறுக்கியிருந்தால் ,அது கூட அதிகம், வெறுமே ஒரு நம்பர் மட்டும் போட்டு வெத்து பேப்பர் கொடுத்திருந்தால் கூட...ஒரு 90 ஆவது
தேறியிருக்குமே?இப்படி ஏங்க வைத்து விட்டாயே இறைவா...
பொறியாளர் திரு கோபால் அவர்களே
உங்களின் ஆதங்கம் புரிகிறது . மனதுக்கு பிடித்த உங்கள் அபிமான நடிகரின்
படங்களை அருமையாக விமர்சித்து , ஒப்பிட்டு பதிவிடுவது
உங்களின் ரசனை. அது பாராட்டுக்குரியது .
அதேபோல் எனது அபிமான நடிகர் நடித்து வெளியான [ 1967-1972 வரை வந்த கருப்பு வெள்ளை படங்களில் சுமாராக ஓடிய படங்கள் பற்றி என்னுடைய ரசனையும் ,மாறுதலுக்கு
ரசிகனாக மதிப்பெண் தந்து பதிவிட்டேன் .
விரைவில் உங்கள் ஆய்வுகளை நன்கு திருத்தி மதிப்பெண்
தருகிறேன் .
அன்புடன்
esvee
-
9th July 2013, 08:53 AM
#1018
Junior Member
Newbie Hubber
அப்போ நாமும் State Board மாதிரியே valuation பண்ணி விடலாம்.
ராஜ ராஜ சோழன்- 98/100 .
-
9th July 2013, 09:53 AM
#1019
Senior Member
Senior Hubber
கோபால் சார்,
கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் நான் எழுதர பாணியில வர்ற மாதிரி தெரியுது. நீங்க எழுதுறது எல்லாருக்கும் ரொம்ப நல்லா பிடிச்சு இருக்கு. இருந்தாலும் உங்க "Sivaji Ganesan - School of Acting" திரிக்கு நானும் பரம ரசிகன். இங்க இப்பிடியும் எழுதி நீங்க கல(லாய்)க்குறீங்க. வாழ்த்துகள்
-
9th July 2013, 11:00 AM
#1020
Senior Member
Seasoned Hubber
Bookmarks