-
14th July 2013, 09:03 AM
#11
Senior Member
Seasoned Hubber
முரளி சார் சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்குக் கிடைக்காததன் பின்னணி மற்றும் காரணங்களை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். 1967 வரை இவ்விருது அறிமுகப் படுத்தப் படாததன் காரணம் ஒன்று. அதன் பின் அவருக்குக் கிடைக்காததன் காரணம் மிகத்தெளிவாக கூறியுள்ளார். ஒரு வகையில் அவருடைய படத் தயாரிப்பாளர்களும் ஒரு காரணம். அவருக்கு விருதுகளுக்காக யாரையும் தேடிச் சென்று அணுகும் முறையில் பிடித்தம் இல்லாதது ஒரு நியாயமான காரணம். நேரடித் தமிழ்ப் படங்களிலேயே அவருடைய நடிப்பிற்கு விருது தேடித் தரும் தகுதி படைத்தவே ஏராளமாக இருந்த போதிலும் அதனை தேர்வுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. இவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதையும் மீறி தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் என்றாலே கேரளத்தைத் தாண்டாத தேர்வுக்குழுவினரின் குறுகிய கண்ணோட்டமும் ஒரு காரணம். அவ்வப்போது சில கன்னடப் படங்களுக்கு விருது கிடைத்த போதிலும் ... காரணம் கிரீஷ் கர்நாட், அனந்த மூர்த்தி போன்றவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்... தமிழுக்கு சரியான முறையில் presentation செய்யப் படாததும் காரணமாக இருக்கலாம்.
இதே வகையில் தெலுங்குத் திரைப்பட உலகமும் உரிய அங்கீகாரம் விருதுகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னாளில் கே.விஸ்வநாத் மூலம் சில விருதுகள் கிடைத்திருந்தாலும், ஒரிஜினல் தெலுங்குப் படங்களின் மூலம் நாகேஸ்வர ராவ் அவர்களின் நடிப்பிற்கும் சில விருதுகளாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். இந்த விருதுகள் நடிகர் திலகத்திடம் சென்றிருந்தால் அவை சிறப்புப் பெற்றிருக்குமே யன்றி, இவற்றால் நடிகர் திலகத்திற்கு சிறப்பில்லை என்பதே உண்மை.
Last edited by RAGHAVENDRA; 14th July 2013 at 09:07 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th July 2013 09:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks