-
27th July 2013, 07:31 AM
#1101
Senior Member
Seasoned Hubber
மாயக் கோட்டையின் இரும்புத் திரையை உடைத்தெறிந்து தன் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய சக்கரவர்த்தியின் மற்றொரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிய 60களை வரவேற்கும் உன்னதத் திரைக்காவியம் அடுத்து வெகு விரைவில் இங்கு இடம் பெற உள்ளது. அதனுடன் சேர்ந்து பாகப் பிரிவினை திரைப்படத்தைப் பற்றிய தகவல்களும் அனுபவப் பகிர்வுகளும் தொடரலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th July 2013 07:31 AM
# ADS
Circuit advertisement
-
27th July 2013, 10:41 AM
#1102
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் நடிப்பை ஒவ்வொரு காட்சியினையும் அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம் இரும்புத் திரை. மிக விரிவாக அலச வேண்டிய பல காட்சிகள் இரும்புத் திரை திரைக்காவியத்தின் மேன்மையை சித்தரிக்கும். அடுத்து நம் திரைப்படப் பட்டியல் தொடரில் இடம் பெற விருக்கும் திரைப்படம் இரும்புத் திரை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th July 2013, 12:36 PM
#1103
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் நடிப்பை ஒவ்வொரு காட்சியினையும் அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம் இரும்புத் திரை. மிக விரிவாக அலச வேண்டிய பல காட்சிகள் இரும்புத் திரை திரைக்காவியத்தின் மேன்மையை சித்தரிக்கும். அடுத்து நம் திரைப்படப் பட்டியல் தொடரில் இடம் பெற விருக்கும் திரைப்படம் இரும்புத் திரை.
hearty welcome to irumbuthirai. One of the movies i will not forget.
it was released on the same date of relelese in karnataka, small centres like SHIMOGA an indutrial town where we saw the movie release day. what a reception for NT in that centre, we really wondered.i was a school going student may be my affinity started growing that time. it ran more than 3 weeks there, which was unique record that time.
-
27th July 2013, 09:28 PM
#1104
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
59. இரும்புத் திரை THE IRON CURTAIN

A rare still from Irumbuthirai. Courtesy: Ithayakkani Cinema Special.

தணிக்கை – 12.01.1960
வெளியீடு – 14.01.1960
தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, பி.சரோஜா தேவி, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ரங்கா ராவ், எஸ்.வி.சுப்பய்யா, வசுந்தரா தேவி, டி பாலசுப்ரமணியன், பண்டரி பாய், வனஜா மற்றும் பலர்.
கதை – ஜெமினி கதை இலாகா
வசனம் – கொத்தமங்கலம் சுப்பு
பாடல்கள் – பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு
இசை அமைப்பு – எஸ்.வி.வெங்கடராமன்
மேக்கப் – சகாதேவ ராவ் எஸ்.தப்கிரே
ஆடை அலங்காரம் – என்.ஸ்ரீராமுலு
ஒளிப்பதிவு டைரக்டர் – பி.எல்லப்பா
படப்பிடிப்பு – என்.பாலகிருஷ்ணன்
லைட்டிங் – ஆர்.கே.ஜெயராமன்
ஸ்டில் - சோமு
ஒலிப்பதிவு டைரக்டர் – ஸி.ஈ. பிக்ஸ்
ஒலிப்பதிவு – எஸ்.ஸி.காந்தி
ஒலிப்பதிவு – ஆர்சிஏ முறை
படத்தொகுப்பு – எம்.உமாநாத்
பிரதிகள் தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ் லாபரேட்டரி
மேற்பார்வை – கே.வி.ராமன்
உதவி டைரக்டர் – கிட்டப்பா
கோர்வை கவனம் – டி.டி.குமரவேல்
துணை டைரக்டர்கள் – ஸி.ஸ்ரீநிவாசன், சந்துரு
தயாரிப்பு டைரக்ஷன் – எஸ்.எஸ்.வாஸன்
பாடல்களின் பட்டியல்
1. படிப்புக்கொரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு
2. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
3. நிக்கட்டுமா போகட்டுமா
4. ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
5. நெஞ்சில் குடியிருக்கும்
6. கையிலே வாங்கினேன்
7. டப்பா டப்பா டப்பா வாங்குறேன்
8. ஹோ... ஏரைப் பிடிச்சவனும் இங்கிலீசு படிச்சவனும்
9. நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
10. மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய்
Last edited by RAGHAVENDRA; 16th January 2016 at 10:08 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th July 2013, 09:29 PM
#1105
Senior Member
Seasoned Hubber
இரும்புத் திரை படத்தைப் பற்றி விக்கிபீடியா இணயதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு
Wikipedia link: http://en.wikipedia.org/wiki/Irumbu_Thirai
இரும்புத் திரை படப் பாடல்கள்
நெஞ்சில் குடியிருக்கும்
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
கையிலே வாங்கினேன்
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
Last edited by RAGHAVENDRA; 12th August 2013 at 09:44 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th July 2013, 09:31 PM
#1106
Senior Member
Seasoned Hubber

இரும்புத்திரை படத்தின் இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு
Hindu page link: http://www.thehindu.com/features/fri...cle1715085.ece
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th July 2013, 10:46 PM
#1107
Senior Member
Seasoned Hubber
இரும்புத் திரை - விளம்பர நிழற்படங்கள் ... உபயம் - இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd August 2013, 03:15 PM
#1108
Junior Member
Newbie Hubber
இரும்புத்திரை (iron curtain )- 1960
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.Stanislavsky School நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.
தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா). ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
Last edited by Gopal.s; 3rd August 2013 at 03:21 PM.
-
12th August 2013, 09:15 AM
#1109
Senior Member
Seasoned Hubber
இரும்புத் திரை ... மிகவும் அருமையான சரியான திறனாய்வு ... கோபால் சார் ...
எடுத்துக் கொண்ட கருவிலிருந்து விலகாமல், சரியான அளவுகோல் விகிதத்துடன் தந்த மறக்க முடியாத கோபாலின் சிறந்த திறனாய்வுகளில் ஒன்று.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2013, 09:17 AM
#1110
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
60. குறவஞ்சி Kuravanji


தணிக்கை 29.02.1960
வெளியீடு – 04.03.1960
தெலுங்கில் வீராதி வீருடு
image courtesy: Pammalar
தயாரிப்பு – மேகலா பிக்சர்ஸ்
கதை வசனம் – மு.கருணாநிதி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, மைனாவதி, பண்டரிபாய், ஓ.ஏ.கே. தேவர், குலதெய்வம் ராஜகோபால், ஆர்.பாலசுப்ரமணியம், வகாப் காஷ்மீரி, சுசீலா, ராதாபாய், வனஜா (கௌரவ நடிகை), சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்
நடனம் – பத்மினி பிரியதரிசினி, விஜயலட்சுமி, லட்சுமி ராஜம்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ், ரா.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மு.கருணாநிதி
குறவஞ்சி நடனப் பாடல்கள் – திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி
இசையமைப்பு – டி.ஆர்.பாப்பா
பின்னணி பாடியோர் – இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராம், ராகவன், லீலா, சுசீலா, ஜிக்கி, கோமளா, ரத்னமாலா, ஜமுனாராணி,
நாயன இசை – குழிக்கரை பிச்சையப்பா குழு
நடனம் – தண்டாயுதபாணி பிள்ளை
ஒளிப்பதிவு – ஜி.துரை
இசை ஒலிப்பதிவு – இ.ஐ.ஜீவா
வசன ஒலிப்பதிவு – சேகர் [நெப்டியூன்], துரை [மெஜஸ்டிக்]
அரங்க அமைப்பு – மோகன், மோகன் ஆர்ட்ஸ்
ஆடை அலங்காரம் – எஸ்.நடராஜன்
உடைக்கலை – மணியம்
ஒப்பனை – ரங்கசாமி, ராமசாமி, நாறாயணசாமி, நாகேஸ்வர ராவ்
எடிட்டிங் – ஆ. சாஸ்தா
பிராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி, ஏவி.எம்.ஸ்டூடியோ லாபெரெட்டரீஸ்
சண்டைக்காட்சிகள் – ஸ்டண்ட் சோமு அண்ட் குழுவினர்
பெயிண்டிங்ஸ் – மாணிக்கம்
செட்டிங்ஸ் – ராயன்
ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்
காட்சிப் பொருள்கள் – சினி கிராப்ட்ஸ்
ஆபரணங்கள் – களஞ்சியம் பிரதர்ஸ்
விளம்பர ஓவியம் – ஓவிய மன்னர் கே.மாதவன், ஆரூர் ஜீவன்
தயாரிப்புத் துறை – மாயூரம் சௌந்தர், எஸ்.பிச்சாண்டி
அலுவலகம்-தயாரிப்புத் துறை நிர்வாகம் – பி.எல்.மோகன் ராம்
ஸ்டூடியோ – மெஜஸ்டிக் அண்ட் நெப்டியூன்
ஆர்சிஏ சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
டைரக்ஷன் – காசிலிங்கம்
Last edited by RAGHAVENDRA; 13th August 2013 at 12:07 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks