Page 146 of 399 FirstFirst ... 4696136144145146147148156196246 ... LastLast
Results 1,451 to 1,460 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1451
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விரைவில் வெளியாக உள்ள நான் வாழ வைப்பேன் திரைப்படத்தின் விளம்பரம்... இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1452
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்த மாளிகை-1972

    எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

    மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
    அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

    ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
    ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

    கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
    விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

    தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
    விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

    குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
    முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

    தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
    பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

    வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
    கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

    மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
    அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

    மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
    இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

    திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
    விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

    அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 18th August 2013 at 10:11 AM.

  4. #1453
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாசமலர் சென்னைத் திரையரங்குகளில் காட்சி நேரங்கள்


    சாந்தி 12.00 noon, 3.00 pm, 6.45 pm, 10.15 pm
    ஸ்டூடியோ 5 - சத்யம் வளாகம் 12.20 pm
    ஐநாக்ஸ் - சிட்டி சென்டர் வளாகம்

    6.36 pm
    பி.வி.ஆர - ஸ்கை வாக் வளாகம்் 10.15 am, 3.15 pm
    Fame National 3.45 pm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1454
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாசமலர்

    நேற்று மத்யம் ஆபீஸ் முடிந்த உடன் 12 மணி காட்சிக்கு என் நண்பர்கள் படை சூழ பரூக் பீல்ட்ஸ் ல் படம் பார்க்க sendrom . கர்ணன் அளவுக்கு ஹவுஸ் புல் இல்லை இருந்தாலும் நல்ல கூட்டம்.
    சரியாக 12 மணிக்கு விளக்கு அணைக்கப்பட்டு 12.10 க்கு படம் துவங்கியது . சென்சர் certificate காட்ட பட்ட உடன் ஒரே ஆரவாரம் . திரையில் சிவாஜி சார் பெயர் வந்த உடன் கேட்கவே வேண்டாம் . என்னமோ புது படம் போலே ஒரே சந்தோசம் தான் . இதன்னைக்கும் அந்த ஹால் ல் நாங்க 10 பிரிஎண்ட்ஸ் மட்டும் தான் யூத் பாகி எல்லாம் middle age people .
    பாக்டரி காட்சிகளை மிகவும் ரசிடார்கள் மக்கள் . ஜெமினி சார் அறிமுகம் ஆகும் காட்சிக்கும் நல்ல ரேச்போன்சே . சிவாஜி பணக்காரன் ஆகும் transformation காட்சியில் தான் தியேட்டர் ல் அலப்பறை தங்க முடியவில்லை
    தொடர்ந்து அவருக்கும் ஜெமினி க்கும் நாக்கும் வாக்குவாதம் , நம்மவர் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சியும் நல்ல recieve செய்ய பட்டது .
    இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த பொது சிவாஜி சார் தன சொத்தை தன் தங்கைக்கு கொடுக்கும் பொது சிறிய சலசலப்பு கேட்டது , திரும்பி பார்த்தல் எனக்கு பின்னாடி இருந்த தாய்குலங்கள் சபித்து கொண்டு இருப்பதாய் கேட்க முடிந்தது .
    கடைசி காட்சியில் மயான அமைதியும் , மெல்லிய கண்ணீர் உடன் விடை பெற்றோம்

    பாசமலர் பிரிண்ட் , ஒலி அற்புதம் .


    இடைவேளை யில் நாங்கள் நண்பர்கள் வந்த மக்கள் விடம் பேச்சு கொடுத்தோம் . அதில் தாங்கள் எந்த சிவாஜி சார் படத்தை காண விரும்புகிறார்கள் என்பதை கேட்டோம்

    டாப் 10 (தியேட்டர் ல் )

    அவர்களின் விருப்ப பட்டியல்
    வரிசை படி
    தில்லான மோகனம்பாள், சிவந்த மண் , APN படங்கள் ( திருமால் பெருமை யை தவிர )
    ராஜா ராஜா சோழன் (பலாப் என்று எல்லோராலும் சொல்ல பட்ட படம் ) புதிய பறவை
    தெய்வ மகன் , வீரபாண்டிய கட்டபொம்மன் ,ராஜா , நவராத்திரி , உத்தமபுத்திரன் , திரிசூலம்

    இதே போலே என் நண்பர்கள் நேற்று மாலை காட்சியில் வேறு ஒரு அரங்கில் சென்று கேட்டு உள்ளார்கள் , கிட்ட தட்ட இதே போன்ற பதில்கள் தான்


    எங்களுக்கு ஆச்சர்யம் என்ன என்றால் முக்க வாசி நபர்களுக்கு மிக பிரம்மாண்டம் படங்கள் பிடிப்பது

    சிவாஜி சார் படங்களை வைத்து இருப்போர்கள் இந்த படங்களை மூன்று மாதங்கள் க்கு ஒரு முறை வெளி இடலாமே


    அதே போலே multiplex மற்றும் A /c தியேட்டர் யில் சிவாஜி சார் படங்களை பார்க்க மக்கள் அதரவு தெருவிக்கிரர்கள்

    கோவை யில்

    பாசமலர் கல்கி கொண்டு இருக்கும் அரங்குகள்

    பரூக் பீல்ட்ஸ் :12 டெய்லி
    சாரதா : 4 காட்சிகள்
    கனகதாரா: மாலை 6 மணி காட்சி
    அர்ச்சனா : தினசரி 2 காட்சிகள்

  6. #1455
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    மாளிகை மன்னன் மயக்கும் கண்ணன் - சுய
    மானமே பெரிதென்று காதலை விடுத்த
    நாயகியின் நெஞ்சிலும் மீதம்
    இருக்கும் காதலை
    வெளிக் கொண்டு வந்து
    கரம் பிடித்த நாயகன்
    இருவரின் காதலை
    இனிமையாக சொன்ன
    காவியத் திரைப்படம்
    கோபாலின் கவிதையில்
    கோபுரம் போல் உயர்ந்ததே..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1456
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராகுல்
    பாச மலர் திரையரங்க அனுபவம் தங்களுக்கு புதிய தகவல்களைச் சொல்லியிருக்கிறது என்பதைத் தங்கள் பதிவிலிருந்து அறிய முடிகிறது. இனி வரும் காலங்களில் வெளியாக உள்ள படங்கள் மேலும் மேலும் புதியதாய் மலரும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1457
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படங்கள்.

    சென்னை சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் 200 வது திரைக்காவியமான திரிசூலம் வெளியான போது வைக்கப் பட்டிருந்த கட்அவுட் மற்றும் பேனர்களைப் பார்க்கும் ஆவல் பலருக்கும் குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு இருக்கும். எமனுக்கு எமன் திரைப்படம் அந்த ஆவலைத் தீர்க்கிறது. அப்படத்திலிருந்து சென்னை சாந்தி திரையரங்கில் திரிசூலம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த போது எடுக்கப் பட்ட காட்சிகளின் நிழற்படங்கள் படத்திலிருந்து.

    முகப்பில் இருந்த நீரூற்றினையும் அதிலிருந்து ஊற்று மேல் நோக்கிப் பாய்வதையும் காண்க



    பேனர்கள்







    பிரம்மாண்டமான கட்அவுட்டையும் அதற்கு மாலை அணிவித்திருப்பதையும் காண்க

    Last edited by RAGHAVENDRA; 18th August 2013 at 03:23 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1458
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கார்த்திக் சாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் எதிர்பார்ப்பான தர்மம் எங்கே எழுதி விட்டு, வசந்த மாளிகை என்ற காவியத்திற்கு கவிதையில் விமரிசித்து ,வாசு மற்றும் என்னுடைய அபிமான ஞான ஒளி,ராஜாவுடன் முடிக்க போகிறேன்.
    அன்புள்ள கோபால் சார்,

    எனது வேண்டுகோளையேற்று 'தர்மம் எங்கே' திரைப்படத்தைப்பற்றி எழுதுவதாக அறிவித்தமைக்கு நன்றி. தங்கள் கோணத்தில் அப்படத்தைப் பற்றிய அலசலை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    வசந்தமாளிகை கவிதை நடை அலசல் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்..

  10. #1459
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள சந்திரசேகர் சார்,

    சுதந்திர தினத்தன்று நடிகர்திலகம் சமூக நலப்பேரவை சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுக்கள்.

    நடிகர்திலகம் பெயரால் சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் பேரவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    (திருவாரூர் - காரைக்குடி அகலரயில்பாதை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?. திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் தங்களைப்போல ஒருவரைப் பார்த்தேன்)...

  11. #1460
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வசந்த மாளிகை-1972

    எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.
    ...........
    ...........
    அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

    (தொடரும்)
    உன் உரைநடையில் உறைந்த நாங்கள் உயிர்த்து எழும் முன்னரே
    கவிநடையை தொடங்கி களிப்புற செய்கின்றாய்.

    நடிப்பின் கோ, பால் யாம் கொண்ட பக்தியை,
    நண்பன் கோபால், நீ நனி செய்கிறாய்.

    காதலுக்கு அடையாளம் வட இந்தியாவிற்கு தாஜ்.
    தென் இந்தியாவிற்கோ அது வசந்த மாளிகை.

    தலைவரை தரிசிக்க நான்,அன்னை இல்லம் போனதில்லை.
    ஆனால் மய்யத்தில் அவரை மனம் நிறைய தரிசிக்கிறேன்.

    அவரின் பாசமலர்கள்..நம் நண்பர்கள்.

    அவரின் வசந்த மாளிகை..நம் மய்யம்

    இந்த மய்யம் எனக்களித்த பரிசுகள் ஏராளம்.
    அவற்றில் தலையானது,வெளிநாட்டிலிருந்தே கிடைத்தது.

    ஆம்! வியட்நாமிலிருந்து,நீ அளித்த,

    முதற்கடவுளை மூன்றாம் கோணத்தில் காண்பித்த உன் கட்டுரைகள்.
    நாயகனின் நான்காம் கோணத்தை காண்பிக்கும் உன் கவி நடை

    தொடர்ந்து எழுது நண்பா,மகாகவி காளிதாசை
    தொழுது எழுது நண்பா.!
    Last edited by Ganpat; 18th August 2013 at 07:30 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •