-
18th August 2013, 07:47 PM
#1461
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
சாந்தியில் திரிசூலம் வெற்றிநடை போட்டபோது நடந்த 'எமனுக்கு எமன்' ஷூட்டிங்க் ஸ்டில்கள் மிக அருமை மட்டுமல்ல, அந்த இனிய காலங்களை கண்முன் கொண்டுவருகின்றன.
நண்பகலில் ஷுட்டிங் நடந்துள்ளது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல மாலைநேரம் சாந்திக்கு சென்றபோது, பகலில் அங்கு ஷூட்டிங் நடந்த விவரத்தை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நீரூற்றைச் சுற்றிஇருந்த சிமெண்ட் திண்ணையில்தான் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் இருந்த 'பால்ஸ் ரெஸ்டாரெண்ட்' போர்டும் அதன் முன்னிருந்த வெற்றிடமும்கூட கவராகியிருக்கிறது.
திரிசூலம் நடிகர்திலகம் கட்-அவுட் அணிந்திருப்பது எங்கள் மன்றம் அணிவித்த மாலைதான். (கட்-அவுட் என்றால் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட ஒரிஜினல் கட்-அவுட்டே தவிர இப்போதுபோல டிஜிடல் பேனரை இழுத்துக் கட்டிவிட்டு அதை கட்-அவுட் என்று சொல்வது கிடையாது)
என்ன இருந்தாலும் பழைய சாந்தி, பழைய சாந்திதான்...
-
18th August 2013 07:47 PM
# ADS
Circuit advertisement
-
19th August 2013, 05:25 AM
#1462
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகத்தின் ஆத்மார்த்த ரசிகராக பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிக்காட்டி கொண்டிருக்கும் சிவாஜி ராவ் என்கிற ரஜினி காந்த ,திரையுலகத்தில் காலடி எடுத்த வைத்த நாளில் ,அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
-
19th August 2013, 11:08 AM
#1463
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
19th August 2013, 11:19 AM
#1464
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள சந்திரசேகர் சார்,
சுதந்திர தினத்தன்று நடிகர்திலகம் சமூக நலப்பேரவை சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுக்கள்.
நடிகர்திலகம் பெயரால் சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் பேரவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
(திருவாரூர் - காரைக்குடி அகலரயில்பாதை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?. திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் தங்களைப்போல ஒருவரைப் பார்த்தேன்)...
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய அன்பு பாராட்டுக்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த போராட்ட நிகழ்வில் நான் கலந்துகொள்ளவில்லை. என்னைப் போல ஒருவரைப் பார்த்ததாகத் தாங்கள் கூறியதே என்னைத் தாங்கள் நினைவில் வைத்திருப்பதற்கு சாட்சி. நன்றிகள் பல.
-
19th August 2013, 11:27 AM
#1465
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
வசந்தமாளிகை - மணம் வீசுகிறது.
மற்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
-
19th August 2013, 11:29 AM
#1466
Senior Member
Seasoned Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
எமனுக்கு எமன் ஷூட்டிங் அபூர்வப் படங்கள் அருமை. பதிவிற்கு நன்றி
-
19th August 2013, 11:37 AM
#1467
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல்ராம்,
தங்களின் பாசமலர் - கோவை திரையரங்க லைவ் ரிப்போர்ட் அருமை.
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடியே மக்களின் ரசனையில் (நமது ரசிகர்களை தவிர்த்து) நமது நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் (டிஜிட்டல் மற்றும் அகன்ற திரையில் காண்பது என்றால்) பிரம்மாண்டத்தை விரும்புவதைக் காண முடிகிறது.
உதாரணத்திற்கு, கர்ணனை எடுத்துக்கொண்டால், அதில் இடம்பெற்ற போர்க்களக் காட்சி - மறுவெளியீட்டில் எல்லோராலும் பேசப்பட்டது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் என்று சில இளைஞர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன்.
அதனையொத்த பிரம்மாண்டம் என்றால், வீரபாண்டிய கட்டபொம்மனை சொல்லலாம்.
Last edited by KCSHEKAR; 20th August 2013 at 12:45 PM.
-
19th August 2013, 11:48 AM
#1468
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
வலையில், நம் தலைவரை பற்றி எந்த புது விஷயமானாலும் நம் பார்வைக்கு கொண்டு வரும் திரியின் வழிகாட்டி joe சாருக்கு நன்றிகள்.
-
19th August 2013, 12:21 PM
#1469
Junior Member
Seasoned Hubber
Thundering response to Pasamalar at Shanthi on yesteday evening show.
It clearly shows that NT always rocks at BO.
Mr Raghavendra Sir,
Thanks for the wonderful photos taken at shanthi and also for the
YY stills.
-
19th August 2013, 01:33 PM
#1470
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Bookmarks