Page 352 of 397 FirstFirst ... 252302342350351352353354362 ... LastLast
Results 3,511 to 3,520 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #3511
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன்,
    55 ஆண்டுகளுக்குப் பின்னும் புதுப்படம் பார்க்கும் உணர்வை தோற்றுவித்தது. நான் அதிகம் பார்த்த படம் நாடோடி மன்னன் தான். மக்கள் திலகத்தின் தயாரிப்பில் நாடோடிமன்னன்,அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்ற மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மூன்று முத்துக்கள் என்றால் நாடோடி மன்னன் அவற்றுள்ளும் மிகச் சிறந்தது என்பது எனது கருத்து. அதற்கு முன் எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லாவிட்டாலும் மூன்றும் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு தோறும் எனது முழுஆண்டு விடுமுறையில் தவறாமல் பார்த்தேன் என்றாலும் ஆறாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்கு வனவாசி என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தேன். (எனது சித்தப்பா அவர்களது இல்லத்தில்) அப்போது தியேட்டரில் ஆப்பரேட்டராக இருந்த எனது சித்தப்பாவுடன் நாள் தோறும் 3 காட்சிகளும் ஒரு நாள் கூட தவறாமல் பார்த்தது (படம் அந்தக் கிராமத்தில் 3 வாரங்கள் ஓடியது) இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. அதன் பின்னும் முழு ஆண்டு விடுமுறை கொண்டாட்டம் என்றால் அது நாடோடி மன்னன் படத்துடன் தான். (ஆண்டு தவறாமல் எங்கள் ஊரில் கோடை விடுமுறை காலத்தில் நம்நாடு, அடிமைப்பொண், நாடோடி மன்னன் படங்கள் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும்). அதன் பின்னரும் எனது கல்லூரிக் காலத்தில் கோவை கே.ஜி.ஆர்ட்ஸ் திரையரங்கில் மனித தெய்வம் அமெரிக்க மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட போது மிக மிக அருமையான பிரிண்டிலும் அற்புதமான ஒலியமைப்பிலும் பார்த்து மகிழ்ந்தேன். இன்னும் அடிக்கடி டிவிடி வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் நாடோடி மன்னன் படத்தினை குறைந்தது ஆயிரம் முறை பார்த்திருப்பேன். ஆனாலும் இன்னமும் ஒவ்வொரு காட்சியும் புதிதாய் பார்க்கும் உணர்வையும் பரவசத்தையும் தோற்றுவிக்கிறது என்றால் அது மிகையல்ல. எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குவது நாடோடி மன்னன் தான். அதிலும் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் போது நமது ரசனையை ஆமோதிப்பது போல் அவர்கள் கரவொலியுடன் கேட்பது அலாதியான இன்பத்தை தருகிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3512
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3513
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3514
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3515
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3516
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''குடியிருந்த *கோயில் '' படத்தில் இடம் பெற்ற பாடல்களில் பாடகர் திலகம் - இசைஅரசி சுசீலா - இசை அரக்கி ஈஸ்வரி ஆகியோரின் உன்னத நவரச குரல்களில் உருவான , அருமையான கீதங்கள் . மெல்லிசை மன்னரின் இசையில் ,வாலி புலமை பித்தன் , ஒரே பாடல் எழதிய பெண் பாடலாசிரியர் ரோஷன் பேகம் , ஆலங்குடி சோமு இவர்களுடைய பாடல் வரிகளில் மக்கள் திலகம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பில் ரசிகர்களை மயக்கிய பாடல்கள் காலத்தால் அழியாத இனிய கீதங்கள்
    .
    1.உன் விழியும் என் வாளும்- இந்த பாடலில் மக்கள் திலகம் - ராஜஸ்ரீ இருவரின் நடனமும் நடிப்பும்
    பாடலின் வரிகளும் நெஞ்சைகொள்ளை கொள்ளும் .

    2. என்னை தெரியுமா - இந்த பாடலில் மக்கள் திலகம் தான் ஒரு நல்ல ரசிகன் என்பதையும்
    நான் புதுமையானவன் - உலகை புரிந்து கொண்டவன் என்ற வரிகளில் மூலம்தன்னுடய முக்காலத்தை பற்றி பாடுவது - இவருக்கு மட்டும் பொருந்திய வரிகள் . அதே போல் பல புதுமைகளை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்து வெற்றி கண்டவர்

    3. நீயேதான் எனக்கு மணவாட்டி - மக்கள் திலகம் - ஜெயா காதல் பாடல் மிகவும் யதார்த்தமாக அமைந்த பாடல் . எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத இனிமையானபாடல்

    4. துள்ளுவதோ *இளமை - மக்கள் திலகம் - ராஜஸ்ரீ இருவரின் அட்டகாசமான மேடை பாடல் .
    மனதை மயக்கும் காட்சிகள் - பாடல் வரிகள் - மக்கள் திலகத்தின் சூப்பர் உடை அலங்காரம் -
    இன்று பார்த்தாலும்புத்தம் புது பாடல் போல் ஜொலிக்கிறது

    5. ஆடலுடன் பாடலை கேட்டு - பாங்க்ரா நடனம் . அசல் பஞ்சாபி போல் தோற்றமளித்த நம் உலக பேரழகன் மக்கள் திலகத்தின் நடனமும் , துள்ளலும் , இளமையும் , சுறுசுறுப்பும் இனி எந்த ஜென்மத்திலும்காண முடியாத காவிய பாடல்
    .
    6. குங்கும பொட்டின் மங்கலம் - பெண் பாடலாசிரியரின் காதல் தேன் அமுது பாடல் .மக்கள் திலகத்தின் காதல் பாடலில் அபிநயமும் நடிப்பும் அற்புதம்

    7.புலவர் புலமை பித்தனின் முதல் தத்துவ பாடல் .

    பாடலின் வரிகளும் , பாடகரின் குரலும் , பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பும் என்னவென்று சொல்ல ?

    ஒரே படத்தில்7 விதமான பாடல்மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த நம் மக்கள் திலகம்*
    அவர்களின் '' குடியிருந்த கோயில் '' என்றென்றும் ரசிகர்கள் உள்ளத்தில் *குடியிருக்கும் பாடல்கள் *என்பது நிதர்சனமான உண்மை .


    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல்திரைப்பட ரசிகர்களுக்கும் . மக்களுக்கும் , மற்ற மொழி மக்களுக்கும் அன்றும் - இன்றும் - என்றும்பிடித்தமான நடிகர் நம் *மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது நமக்கு பெருமையான செய்தியாகும் .
    Last edited by esvee; 23rd August 2013 at 06:19 AM.

  8. #3517
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



  9. #3518
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ண படங்கள்

    ரகசிய போலீஸ் 115

    குடியிருந்த கோயில்

    ஒளிவிளக்கு

    ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாத சாதனையாகும் . மூன்று படங்களிலும் மக்கள் திலகத்தின் நடிப்பு , பாடல்கள் , சண்டை காட்சிகள் , புதுமைகள் , நடனங்கள் , கருத்துக்கள்
    விறுவிறுப்பான காட்சிகள் மிகவும் பிரபலமானவை .

    ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற 4 காதல் பாடல்கள் , குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற எல்லா 7 பாடல்கள் , ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களும் அருமை

    மூன்று படங்களிலும் மெல்லிசை மன்னரின் இசை - ரீரெகார்டிங் , டைட்டில் இசை புதுமை .

    ரகசிய போலீஸ் 115ல் துப்பறியும் அதிகாரியாகவும் , குடியிருந்த கோயிலில் இசைபாடகராகவும் , கொள்ளயாராகவும் , ஒளிவிளக்கில் திருடனாகவும் வித்தியாசமான பாத்திரத்தில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பில் நடித்து வெளுத்து கட்டினார் நம் மக்கள் திலகம் .

    51 வயதில் , குரலில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் இளமை அழகுடன் , சுறுசுறுப்புடன் நடித்து ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்ட வண்ண நாயகன் .

    மக்கள் திலகத்தின் மூன்று வண்ண படங்களின் சில சாதனை துளிகள் .....

    கண்ணதாசனின் கை வண்ணத்தில் உருவான தமிழ் இலக்கிய பாடல் '' பால் தமிழ் பால் '' கவிதை நயம் - இலக்கிய ரசம் , படமாகப்ட்ட விதம் எல்லாமே இனிமை .

    என்ன பொருத்தம் பாடலில் மக்கள் திலகம் துள்ளி குதித்து , ஆடி பாடும் காட்சி பிரமாதம் .

    கண்ணில் தெரிகின்ற வானம் - காதலர்களின் சந்திப்பின் நினவு கூறும் பாடல் .

    கண்ணே .. கனியே ,,முத்தே ... காதலர்களின் கனிரச பாடல் .

    ஒளிவிளக்கில் இடம் பெற்ற பாடல்கள்

    தைரியமாக சொல் நீ மனிதன் தானா ---- குடியின் கொடுமைகளை விவரிக்கும் தத்துவ பாடல்

    ருக்குமணியே ... பாடல் . வித்தியாசனமான முறையில் படமாக்கப்பட்ட பாடல்

    இறைவா .. உன் மாளிகையில் - இந்த பாடல் மூலம் இசை அரசி சுசீலாவின் புகழும் , நடிகை சௌகார் ஜானகியின் புகழும் எங்கோ அழைத்து சென்று மங்கா புகழ் பெற்றது .

    1968 மக்கள் திலகத்தின் 3 வண்ண படங்கள் முக்கனியாக திரை உலக வரலாற்றில் வசூல் காவியங்களாக என்றென்றும் ரசிகர்களின் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கும் படங்கள் .

  10. #3519
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    Dear Jai Shankar Sir,


    Thank you very much for having posted the stills of our beloved God's ' NADODI MANNAN"

    Also thank you for the compliments you have given to me.



    Ever Yours

    S. Selvakumar

    Endrum M.G.R.
    Engal Iraivan

  11. #3520
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Makkal thilagathin padhilgal

    courtesy - net

    நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?

    ‘மனோகரா’ நாடகம். மனோகரன் வேஷம்.

    பெண்வேஷம் போட்டு நாடகங்களில் நடித்தது உண்டா?

    உண்டு.

    உங்கள் அன்னையார் இப்போது உயிரோடு இருந்தால்?

    என் நிலைமைக்காக மிகவும் அனுதாபப் பட்டிருப்பார்.

    உங்கள் சொந்த வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனை?

    ஒரு பெண் என்னைக் காதலித்ததுதான். தயவு செய்து இதற்குமேல் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்.



    உங்களை உயர்த்தியது எது?

    பருவம்.

    உங்கள் தொழிலில் பெரிய சவாலாக இருந்தது எது?

    என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.

    உண்மை அழிந்த பின்பு நிலைத்திருப்பது என்ன?

    உண்மைதான். ஏனென்றால் அது அழிவது கிடையாது.

    மதுவை விடக்கொடியது எது?
    அதை அருந்தும் மனம்.

    நன்றியில்லாத ஒருவனை நன்றியுள்ளவனாக ஆக்குவது எப்படி?

    நாம் நன்றி உள்ளவராக நடந்துகொள்வதன் மூலம்.

    உங்களால் பாதிக்கப்பட்டவர் யாராவது உண்டா?

    நானே இருக்கிறேனே, போதாதா?

    உங்களுக்குக் கவிதை பிடிக்குமா?

    கவிதையும் பிடிக்கும்.

    தங்களுக்குக் குழந்தை பிறந்தால்?

    முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

    உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுத்தபோது அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?

    உண்மை.

    சாதிவெறியைத் தூண்டிவிடும் தமிழ்த் தலைவர்களுக்கு உங்கள் பதில் யாது?-

    அவர்கள் தமிழை வணங்காதவர்கள்.

    சில சமயம் நீங்கள் கவிஞர்களுக்கே பல்லவி எடுத்துத் தருவீர்களாமே?

    பல்லவி எடுத்துக் கொடுப்பது கிடையாது. கருத்துச் சொல்வது உண்டு-.

    ரசிகன், தொண்டன், உடன்பிறப்பு இம்மூன்றில், எப்படி அழைப்பது உங்களுக்குப் பிடிக்கும்?

    நான் எழுதும் கடிதத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறேனே அப்படி.

    கோழை எதைச் சாதிக்கிறான்?

    வீரனை வெளிக்காட்டுகிறான் அல்லவா?

    ஒரு தமிழ்ப்பெண் எப்படி நடந்துகொண்டால் அவளது வாழ்வு பிறர் பார்த்து மதிக்கும்படி இருக்கும்?

    ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பெண்ணும் திண்மைஉண் டாகப் பெறின்’ என்ற குறள் நெறியைப் பின்பற்றி நடப்பதே மதிப்புத் தருவதாகும்.

    திருமணமான பெண் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

    திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

    உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?

    பிறரால் அனுதாபப்பட வேண்டிய ஒருவன்.

    இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்திருப்பது ஏன்?

    அவன் மீதுள்ள அவ நம்பிக்கையால்.

    ஜிம்மி கார்ட்டரின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    உலக அரசியலுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என நினைக்கிறேன்.

    உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன். உங்களுடைய சம்மதம் தேவை?

    என் வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தைக் காப்பாற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.

    அறிவுள்ளவன் யார்?

    தன்னை அறிந்தவன்.

    நண்பர்களைக் கவர்வது எப்படி?

    தூய்மையான நட்பைக்கொண்டு.

    முயற்சி இல்லாமல் கிடைப்பது எது-?

    மரணம்!

    துன்பத்திலேயே அதிகத் துன்பம் எது?

    நன்றி கொன்றவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் துன்பம்.

    நீங்கள் அரசியலில் நுழையக் காரணமானவர் யார்?

    சுபாஷ் சந்திரபோஸ்.

    ஏழை ஒருவன் நடிகையை மணக்க முடியுமா?

    நடிகையரிலும் ஏழை நடிகை இருக்கிறார் அல்லவா?

    மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தது உண்டா?

    உண்டு. நாடக கம்பெனியில் இருந்தபோது-.

    தங்களால் வாழ்வு பெற்றவர்கள் தங்களையே தூற்றுகிறார்களே?

    அது அவர்களது இயற்கை. காலம் மாறும். காத்திருப்போம்.

    தாங்கள் சிறந்த நண்பர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?

    அறிவை.

    நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்னவாக இருக்கும்??

    பிறவாதிருக்கவேண்டும் என நினைப்பேன் என இப்போது சொல்கிறேன். அப்போது என்ன நினைப்பேனோ?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •