-
30th August 2013, 10:47 PM
#3791
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
1969- தென்னிந்திய திரைப்பட உலகில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் முதல் இடத்தை பிடித்த படம் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''.
கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - வெளிப்புற படபிடிப்பு - புதுமை - நடிப்பு - நேர்த்தியான இசை
என்று எல்லோரையும் பிரமிக்க வைத்த படம் .
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக , தரமான படமாக வந்து பல விருதுகளை பெற்ற படம் .
1965 எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றியை 1969ல் எம்ஜிஆர் படமே முறியடித்து
சாதனை புரிந்த படம் .
வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வசூலை குவித்த படம் . மறு வெளியீடுகளில் பல முறை வந்து
சாதனைகள் புரிந்த படம் .
எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சி - மயிர்கூச்செறியும் காட்சிகளாகும் .
வலையில் மக்கள் திலகம் ஒற்றை காலுடன் அசோகனுடன் மோதும் சண்டை காட்சி அருமை .
ஒகேனக்கல் - ஜெய்ப்பூர் பாலைவனம் - அரண்மனை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
மக்கள் திலகத்தின் உடற்கட்டு - இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கும் . தன்னை சங்கிலியால்
பிணைத்து வைத்து சக்கரத்தை சுழற்றும்போது மக்கள் திலகத்தின் அகன்ற மார்பும் , வலிமையான கைகளில் இருந்து எழும்பும் கட்டுமஸ்தான தோற்றமும் காட்சிகளும் நம் கண்ணை விட்டு அகலாது . அத்தனை கொள்ளை அழகு கொண்ட உடல் அமைப்பு .
அடிமைப்பெண் - உலக தர பட வரிசையில் நிச்சயம் என்றென்றும் இடம் பெரும் காவியம் .
எம்ஜிஆரின் முழு திறமைகள் அறியப்பட்ட படம் .
எம்ஜிஆரின் ரசிகர்கள் - தீவிர ரசிகர்களாக மாற வைத்த மறக்க முடியாத படம் .
சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் நிச்சயம் இந்த படமும் விழாவில் இடம் பெறும் .
வினோத் சார் நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி.
-
30th August 2013 10:47 PM
# ADS
Circuit advertisement
-
30th August 2013, 10:53 PM
#3792
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
1962-யில் வெளிவந்த பாசம் மக்கள்திலகம் அவர்கள் தான் நடித்த படங்களில் குறிப்பிட தக்க குணசித்திரமாக கருதிய முக்கிய திரைப்படமாகும். இந்த பட காட்சியில் முழுவதும் ஒரு வித சோகத்துடன் mgr அவர்கள் நடித்திருப்பது தெரிந்தே. இந்த திரைபடத்தில் கிளைமாக்ஸ் ரசிகர்கள் & பொதுமக்கள் அவ்வளவாக ஏற்கவில்லை... சென்னை-paragon திரை-யில் ரசிகர் கத்தி -யை வீசி திரை கிழிந்து இடையுறு ஏற்பட்டது என மூத்த ரசிகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் ? .....
அப்படி பட்ட ரசிகர்கள் தலைவர் 1987ல் மறைந்த செய்தியை எப்படி தாங்கி கொண்டார்களோ?
-
30th August 2013, 10:54 PM
#3793
Junior Member
Veteran Hubber
நம் நாடு படத்தில் வந்த ஒரு பஞ்ச் டயலாக்.
-
30th August 2013, 10:55 PM
#3794
Junior Member
Veteran Hubber
-
30th August 2013, 10:57 PM
#3795
Junior Member
Veteran Hubber
மேற்கண்ட விடியோவில் வரும் வசனங்கள் யாவும் சைலேஷ் சார் அவர்கள் கைவண்ணத்தில் பிரித்து தந்தது.
-
30th August 2013, 11:24 PM
#3796
Junior Member
Diamond Hubber
உண்மை தான் திரு.ரூப்குமார் சார், 1969- யில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான MGR pictures தயாரித்த "அடிமைபெண்" மகோன்னத திரைப்படம். 1965-யில் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு வருடங்கள் படபிடிப்பில் கதை&நடிகர், நடிகையர் சிலர் மாற்றப்பட்டு பின் தொடர் படபிடிப்பு கண்டது. இப்படம் சம்பந்தமாக ஒரு விசேஷ தகவல்...mgr அவர்களிடம் tms சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என புதிய பாடகர் spb -யை அறிமுகம் செய்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.....
-
31st August 2013, 06:24 AM
#3797
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரூப் சார்
அடிமைப்பெண் மற்றும் நம்நாடு படங்களின் வீடியோ காட்சிகளை பதிவிட்ட உங்களுக்கும் திரு சைலேஷ் அவர்களுக்கும் நன்றி .
அடிமைப்பெண் பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு செல்வகணேஷ் அவர்களுக்கு நன்றி .
சென்னை முருகன் திரை அரங்கு உரிமையாளர் திரு பரமசிவம் அவர்களின் நினைவு நாள் விழா பற்றிய தகவல்கள் தந்த திரு ரவி சார் அவர்களுக்கு நன்றி .
-
31st August 2013, 06:41 AM
#3798
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சுஹராம்
பாசம் படத்தில் மக்கள் திலகத்தின் இறுதி காட்சி ரசிகர்களால் ஏற்று கொள்ள படவில்லை . மக்களும் அதை விரும்பவில்லை . விதி விலக்கு - மதுரை வீரன் -1956 மட்டும் .
திரைப்படத்தின் தாக்கம் ஒரு நடிகரை நடிகராக மட்டும் பார்த்த உலக வரலாற்றில் முதல் முறையாக
ஒரு நடிகரை தங்களுடைய வீட்டு பிள்ளையாக பாவித்து ''எங்க வீட்டு பிள்ளை '' என்றும்
''ஆயிரத்தில் ஒருவன்'' என்றும்'' மன்னாதி மன்னன்'' என்றும் பார் போற்றும் புகழுடன் ஏற்று கொண்ட
உலக அதிசயம் வேறு எங்கும் யாருக்கும் கிடைக்காத பரிசாகும் .
தமிழன் - இந்தியன் -திராவிடன் - ஆரியன் என்ற பேதமில்லாமல் ஒரு நல்ல மனிதன் என்ற உலகளவு புகழ் பெற்ற மாஸ் லீடர் - மக்கள் தலைவன் எம்ஜிஆர் என்ற பெருமையினை தந்த
சினிமா உலகிற்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம் .
மக்கள் வெள்ளம்
மக்கள் ஆதரவு
மக்கள் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவன்
எம்ஜிஆரின் புகழ்
வைரமுத்து கூறியது போல்
சந்திரன் - சூரியன் - எம்ஜிஆர்
உலகம் உள்ளவரை .........
-
31st August 2013, 06:41 AM
#3799
Junior Member
Devoted Hubber
அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்
அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள்.
கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!
லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.
சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.
ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.
ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!
சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.
தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.
கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.
தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…
பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’
சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.
ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?
கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.
தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.
தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.
லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.
கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?
கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!
ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.
கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.
சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.
-
31st August 2013, 09:30 AM
#3800
Junior Member
Devoted Hubber

Originally Posted by
MGR Roop
நம் நாடு படத்தில் வந்த ஒரு பஞ்ச் டயலாக்.
Excellent Dialogue...
But does our people think through what Thiru.MGR said in those days itself and then votes during election?
They are still bothered about the freebies, etc., even now.
It shows our people will never ever change..! Its all Money..Honey...for them..!
Bookmarks