- 
	
			
				
					12th September 2013, 10:49 AM
				
			
			
				
					#1931
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
				
					Super Singer : Syed sings Aha Mella Nada
				
 
 
 
 
- 
		
			
						
						
							12th September 2013 10:49 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 10:49 AM
				
			
			
				
					#1932
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
				
					Chittu Kuruvi Mutham Koduthu TABLA
				
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 10:50 AM
				
			
			
				
					#1933
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
				
					Aha Mella Nada Mella Nada
				
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 10:51 AM
				
			
			
				
					#1934
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
				
					chitu kuruvi mutham koduthu keyboard old tamil song
				
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 02:15 PM
				
			
			
				
					#1935
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 Removed at the request of the author 
 
 
 what happened Murali sir?
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 03:11 PM
				
			
			
				
					#1936
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 Removed at the request of the author 
 
 
 டியர் முரளி சார்,
 
 தங்களின் பதிவை ஏன் நீக்கினீர்கள் என்று தெரியவில்லை. இதில் ஒன்றும் ஆட்சேபகரமான வார்த்தைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  மிக நல்ல பதிவு ஒன்று நீக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 04:31 PM
				
			
			
				
					#1937
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Subramaniam Ramajayam  
 Murali sir.
 simply superb worth remembrances on his birth date.
 WHAT An elegent and rich      STYLES AND MANNERISAMS HE DISPLAYED AND CAPTURED MILLIONS OF PEOPLE.
 DIgitalised GOPAL  will certainly make a history very soon.
 ALWAYS NO 1 SPOT IN MY MINDS.
 conculsion= GOPAL CERTAINLY A VERY GOOD MAN only circumstances made him to do all this acts, THUVUM, ORE ORU ADI as gopal says made him like this.
 
 
 
 Murali sir,
 very very UNFORTUNATE THAT YOU HAVE BEEN DIRECTED TO DELETE A WONDERFUL NOTES. No reasons to guess.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 04:45 PM
				
			
			
				
					#1938
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							Excellent introction for Puthiya Paravai by Mr.Murali Srinivas,
 
 Fantastic analysis about that movie by Mr. S.Gopal,
 
 Tremendous insertion of Stills and Videos by Mr. Goldstar,
 
 Now the Million Dollar question araises,
 
 Who were the 'MEN WITH AXE' in their hands in front of theatres Sri Krishna (north Madras), Sayani (central Madras) and in front of theatres at Madhurai, Trichy, Salem, Covai, Nellai and other major cities, NOT allowing the public to watch Pthiya Paravai?.
 
 They allowed public to watch Karnan, Vettaikaaran, Kaikoduththa Dheivam, Kadhalikka Neramillai, Panakkara Kudumbam, Pachai Vilakku, Dheiva Thaai, Navarathiri and other movies in that year 1964, but not allowed public to watch Puthiya Paravai, by threatening "If you enter, we will cut your legs".
 
 In Chennai Paragon PP ran for 135 days, means where were those 'AXE-MEN' to be presented in front of Paragon theatre?.
 
 I am breaking my heads. Any reply please?.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 07:20 PM
				
			
			
				
					#1939
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
 
 நடிகர் திலகத்தின் நாயகிகள் (15) வைஜயந்திமாலா
 
 (தொடர்-15)
 
  
 
 'வைஜயந்திமாலா ஸ்பெஷல்
 
  
 
  
 
 நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த ஜோடிகளில் இவரும் ஒருவர் என்பது எனது கருத்து. எனக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பிடித்த ஜோடி. என்ன ஒரு பெரிய மனக்குறை! நடிகர் திலகத்துடன் அதிகப் படங்களில் இவர் நாயகியாக ஜோடி சேர வில்லை. மூன்று படங்களே ஜோடி சேர்ந்தாலும் அற்புதமாகப் பரிமளித்த ஜோடி.
 
 1949-இல் ஏவிஎம்மின் 'வாழ்க்கை' திரைப்படத்தின் மூலம் இவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. கொள்ளை அழகும், சிறந்த நடனத் திறனும், நல்ல நடிப்பும் கொண்ட இவர் தனது முதல் படத்திலேயே புகழின் உச்சாணிக் கொம்பைத் தொட்டார். வில்லன் நடிகர் ரஞ்சன் நடித்த, புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தாரின் 'மங்கம்மா சபதம்' திரைப்படத்தின் கதாநாயகி வசந்தராதேவியின் மகள்தான் வைஜயந்திமாலா. இரும்புத்திரை திரைக்காவியத்தில் தாயும், மகளுமாகவே இருவரும் நடித்திருப்பார்கள்.
 
 1960-இல் வெளிவந்த தலைவரின் மறக்க முடியாத காவியமான 'இரும்புத்திரை' தலைவரையும், இவரையும் முதன் முதலாக ஜோடி சேர்த்தது. தலைவருக்கும் சீனியர் இவர். கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள் திரையுலக வாழ்க்கைக்குப் பின் முதன் முதலாக தலைவருடன் ஜோடி சேர்கிறார். படமும் காவியப் படம். ஜோடியும் காவிய ஜோடிதான். நன்கு மெருகேறி சற்றே பூசிய அருமையான உடல்வாகும், வனப்பும்  கொண்டிருந்த நம் சிங்கத்திற்கு ஏற்ற சிறந்த ஜோடியாக, சிருங்கார மானாக வைஜந்திமாலா ஜொலித்தார். இரும்புத்திரையில் இந்த ஜோடியின் காதல் காட்சிகள் அழியாப் புகழ் பெற்ற காதல் காட்சிகள். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் நன்கு புரியும்.
 
 'இரும்புத்திரை'யில்.
 
  
 
 குறிப்பாக தலைவரும்,மாலாவும் அந்த காட்டுப் பகுதியில் சந்தித்து உரையாடுமிடம். இருவரும் வழங்கும் அந்த அம்சமான டயலாக் டெலிவிரி. அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது. ஆடு மேய்க்கும் சிறுவனிடம் புல்லாங்குழல் வாங்கி வாசிக்கத் தெரியாதது போல வைஜயந்தியிடம் கலாய்த்து நடித்து பின் தன் திறமையை தலைவர் நிரூபிக்கும் காட்சியில் வைஜயந்திமாலா நன்கு ஈடு கொடுத்திருப்பார். கீழே வரும் உரையாடலைக் கவனியுங்கள்.
 
 வைஜயந்தி: உண்மையிலேயே நீங்க யாரு?
 
 நடிகர் திலகம்: இதென்ன கேள்வி? நான் சாதாரண ஒரு மனுஷன்.
 
 வைஜயந்தி: ம்ஹூம்....(நீ சாதாரண மனிதன் இல்லை என்ற அர்த்தத்தில்)
 
 நடிகர் திலகம்: அப்படின்னா நீ என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறே?
 
 வைஜயந்தி: ஒரு தெய்வப்பிறவின்னு நினைக்கிறேன்.
 
 இது ஒன்று போதுமே...
 
 அடுத்தது வைஜயந்தி மில்லில் சரோஜோதேவியிடம் பேசிக் கொண்டிருக்கும் திலகத்திடம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்க செல்ல, சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் வைஜயந்தியைக் கடிந்து கொண்டு பின் வருத்தப்பட்டு செல்லும் வைஜயந்தியை சாலையில் சைக்கிளில் சென்று சமாதானப்படுத்தும் போது வைஜயந்தி செல்லமாக நம்மவரிடம் கோபித்து பின் சமாதானமாவார். ("இந்த விளையாட்டெல்லாம் அவகிட்ட(சரோஜாதேவியிடம்) வச்சுக்கோங்க"....) இந்தக் காட்சியிலேயும் வைஜயந்தி மிக நன்றாக ஸ்கோர் பண்ணியிருப்பார். மறுபடியும் அழுத்தமாகச் சொல்லுகிறேன். இருவரின் டயலாக் டெலிவிரியும் அவ்வளவு டெரிபிலாக இருக்கும். ஜோடிப் பொருத்தமும் கண் பட்டுப் போகும் அளவிற்கு இருக்கும்.
 
 "நெஞ்சில் குடியிருக்கும்" பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. டூயட்களின் வரிசையில் தலையாயது அது. அனைவரது நெஞ்சிலும் நிலைத்து குடியேறிவிட்ட கிளாஸிக்.
 
 அடுத்து அதே போல தோட்டத்து காட்டில் இருவரும் சந்திக்கும் மூன்றாவது இடம். இன்னொரு  பெண்ணுடன் தனக்குப் பழக்கம் உருவானது போன்ற ஒரு கதையைத் திரித்து வைஜந்தியை நம்மவர் சீண்டிப்பார்க்க, அதற்கு வைஜயந்திமாலா கொடுக்கும் பொறாமை கலந்த expressions ஐ எப்படிப் பாராட்ட? இந்த இடத்தில் நம் தலைவர் பின்னி எடுப்பது வேறு கதை. (ஐநூறு பக்கங்களுக்கும் அதைப் பற்றி எழுதித் தீர்த்தாலும் அந்த நடிப்பை நம்மால் வர்ணிக்க முடியாது சாமி)
 
 ஆஹா... காதலின் மேன்மையையும், காதலில்  ஏற்படும் ஊடலையும், கூடலையும், சிறு சிறு இன்பச் சீண்டல்களையும், காதலின் அன்னியோன்னியத்தையும், நாகரீகத்தையும், மகத்துவத்தையும்  இந்த ஜோடி இந்தப் படத்தில் காட்டிய அளவிற்கு வேறு எந்த ஜோடியாவது வேறு எந்தப் படத்திலாவது காட்டியிருக்குமா?
 
 காவியங்களை மிஞ்சும் அற்புத காதல் ரசனை கொண்ட காட்சிகளை இந்த ஜோடி பிரதிபலித்ததே.
 
 என்ன ஒரு பொருத்தமான ஜோடி!
 
 திரைக்குப் பிறகு அதே 1960-இல் 'ராஜபக்தி' யில் உதவி தளபதி விக்ராந்தனின் இரண்டாவது ஜோடியாக மீண்டும் வைஜயந்தி மிருணாளினியாக. (முதல் ஜோடி பண்டரிபாய்) அதிக சந்தர்ப்பம் இல்லை. காதல் ரசம் சொட்டும் காட்சிகளும் மிகக் குறைவே. இளவரசனை காப்பாற்றவே இருவருக்கும் நேரம் போதாதபோது காதலித்து நம்மை மகிழ்விக்க இந்த ஜோடி மறந்து போனது. அதனால் நமக்கும் ஏமாற்றமே. இந்த அற்புதமான ஜோடி சற்று அதிகமாகவே வீணடிக்கப்பட்டது இந்தப் படத்தில். இருந்தாலும் தலைவரும், வைஜயந்தியும் அற்புத அழகில் நம்மை சொக்க வைத்தது உண்மை.
 
 "சித்தூர் ராணி பத்மினி"
 
  
 
 அடுத்து 1963-இல் "சித்தூர் ராணி பத்மினி" டைட்டில் நாயகியாக வைஜயந்தி. இதிலும் அற்புத காதல் ரசம் சொட்டும் காட்சிகள் உண்டு. ஆனாலும் இரும்புத்திரை அளவிற்கு இருக்காது. இரஜபுத்ர இளவரசன் மகாராணா பீம்சிங் (தலைவர்) சித்தூர் சிப்பாயாக நடித்து உதய்பூர் இளவரசி சித்தூர் ராணி மனதை வீரத்தாலும், அழகாலும் கொள்ளையடித்து பின் உண்மை உணர்த்தி கரம் பிடிக்கும் காட்சிகளில் மனம் லயிக்கலாம். (அதுவும் "சிப்பாய்" என்று வாஞ்சையுடன் தலைவரை வைஜயந்தி விளிக்கும் அழகே அழகு! சிப்பாயை உள்ளூர மனதளவில் காதலித்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிப்பது இன்னும் அழகு!) இரஜபுத்திரர்களுக்கே  உரிய வீரமும், தன்மானமும், காதலும் ஓரளவு நன்றாகச் சொல்லப்பட்டிருந்தும், தலைவரும், வைஜயந்தியும் மகாராணாவாகவும். பத்மினிதேவியாய்  உயிரைக் கொடுத்திருந்தும் மனம் ஏனோ இப்படத்தில் அவ்வளவாக ஒட்டவில்லை. தலைவருக்குப் பொருந்தாத சீர்காழியின் குரலில் ஹிட்டடிக்காத பாடல்களால் வேறு இந்த ஜோடி இப்படத்தில் நன்கு சோபிக்க முடியாமல் போனது. இருந்தாலும் 'பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்' பாடலில் வைஜயந்தி நடனமாடும் பரதம் அற்புதம்.
 
 கோபால் சாரும் நானும் ஒரு கட்சி. அதாவது தில்லானா மோகனாம்பாளில் பத்மினிக்குப் பதிலாக வைஜயந்தி நடித்திருக்கலாம் என்பதில் இருவரும் ஒத்துப் போவோம். மிக மிக அற்புதமாக இருந்திருக்கும். (பத்மினி சோடை போகவில்லை என்றாலும் அந்த இளமை மிஸ்ஸிங்) ஒரு இளமையான துறுதுறு மோகனாம்பாள் வைஜயந்தி வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். சண்முக சுந்தரத்தின் உடல்வாகுக்கு ஏற்றவாறு.
 
 மூன்று படங்களோடு இந்த அற்புத ஜோடி மூட்டை கட்டி விட்டதால் பெருநஷ்டம் நமக்குத்தான். என்ன துரதிருஷ்டமோ தெரியவில்லை. இந்த ஜோடியின் மகிமையை யாரும் புரிந்து நிறைய படங்களில் சேர்க்கவில்லை. பெரிய இயக்குனர்கள் கூட. பின்னாட்களில் வைஜயந்தி இந்தியிலேயே நிலைத்து நின்று விட்டது வேறு ஒரு காரணம். (இந்தியில் மதுமதி, சங்கம், ஜூவல் தீப், கங்கா ஜமுனா, Naya Daur, லீடர் போன்ற அசுர வெற்றிப் படங்களில் நடித்து வைஜயந்தி அகில இந்தியப் புகழ் பெற்றார் என்றால் அது மிகையில்லை.)
 
  
 
 தமிழில் பெண், தேன் நிலவு, வஞ்சிக் கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு போன்ற படங்கள் இன்றளவும் இவர் புகழ் பாடும். குச்சிப்புடி, பரதம் போன்ற நாட்டியங்களை முறைப்படிக் கற்று தேர்ந்த நடிகை. இவரை எனக்குப் பிடிக்காது என்று எவருமே சொல்ல முடியாத அளவிற்கு அனைவர்க்கும் மிகவும் பிடித்த  நடிகை. அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கியவர்.  அம்சமான, அலட்டலில்லாத அழகுப் பெட்டக நடிகை.
 
 எது எப்படியோ அந்த 'இரும்புத்திரை' ஒரு படம் போதும் சார் இந்த ஜோடி நம் நெஞ்சில் வாழ்நாளெல்லாம் குடியிருக்க .
 
 நான் மேலே குறிப்பிட்டிருக்கும் வாழ்நாளில் மறக்க இயலாத 'இரும்புத்திரை' புல்லாங்குழல் காவியக் காட்சி. முதன் முதலாக இணையத்தில் அனைவருக்காகவும் தரவேற்றி.
 
 
 
 அன்புடன்
 நெய்வேலி வாசுதேவன்
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 17th October 2013 at 08:36 AM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
			
				
					12th September 2013, 11:55 PM
				
			
			
				
					#1940
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
							
						
				
					
						
							அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். புதிய பறவை பொன் விழா கொண்டாட்ட தொடக்கத்தின் முதல் நாளான இன்று அதைப் பற்றிய ஒரு பதிவை நேற்று நள்ளிரவு பதிந்திருந்தேன்.  
 
 முதன் முதலாக நமது நடிகர் திலகம் எடுத்த சொந்தப் படம். அதுவும் சிவாஜி பிலிம்ஸ் பானரில் வெளிவந்த படம். Ahead of its time என்பார்களே அந்த ஜானரில் வந்த படம். அப்படிப்பட்ட ஒரு காவியம் பொன் விழா நாளில் அடியெடுத்து வைக்கிறது எனும்போது அதை பற்றிய ஒரு பதிவு அதிலும் நடிகர் திலகம், சிவாஜி பிலிம்ஸ், புதிய பறவை என்ற வார்த்தைகள் வராமல் பதிய வேண்டும் என்று ஒரு சிந்தனை. அதன் வெளிப்பாடே அந்த பதிவு.அது முழுக்க முழுக்க புதிய பறவை கோபாலைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாய் துரதிர்ஷ்டவசமாக நான் கையாண்ட வார்த்தைகள் ஒரு சில நண்பர்களின் மனதை பெரிதும் புண்படுத்தி விட்டதாக இன்று காலைதான் எனக்கு தெரிய வந்தது. எவரையும் கனவிலும் கூட காயப்படுத்தி விடக் கூடாது எனபதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கும் நான் இப்படி ஒரு வடுவை நண்பர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டேனே என்ற குற்ற உணர்வின் காரணமாகவே [என்னால் நமது ஹப்பை அலுவலகத்திலிருந்து access செய்ய முடியாத காரணத்தினால்] மாடரேட்டர் NOV அவர்களை தொடர்பு கொண்டு அந்த பதிவை நீக்கி விட செய்தேன்.
 
 மீண்டும் கூறுகிறேன். நான் எந்த உள்ளர்த்தமும் வைத்து அந்த பதிவை இடவில்லை. இருப்பினும் அது யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். என் நிலை வெளிப்படுத்தவே இந்த பதிவு.
 
 நண்பர் வாசு அவர்களே, உங்களின் அருமையான நாயகியர் விஷுவல் தொடருக்கு (அதுவும் அழகான வைஜயந்தி பற்றி எழுதும்போது) நடுவில் ஒரு குறுக்கீடாக இந்த பதிவு வந்ததற்கு Sorry.
 
 அன்புடன்
 
 
 
 
 
 
 
Bookmarks