
Originally Posted by
NTthreesixty Degree
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.
ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.
ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.
திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?
360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்
மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !
நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !
தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!
நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?
நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !
8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..
1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )
இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !
இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !
முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்
ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்
முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.
200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.
1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.
1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.
இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.
1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !
1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.
1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !
மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..
80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.
பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !
நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]
1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !
நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]
ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !
மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]
Bookmarks