Page 274 of 399 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2731
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2732
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    Vikram Prabhu

    October 1st #BirthDay ! The One & Only #SivajiGanesan ! #GreatestActor ! Greatest Grandfather! #Proud & #Gifted pic.twitter.com/LwuCR3izXS


  4. #2733
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    திரு சந்திரசேகரன் சார்
    நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப தாங்கள் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது .நன்றி பல கோடி
    டியர் ஹரிஷ் சார்,
    தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #2734
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகர் சார்,

    நடிகர்திலகத்தின் 86-வது பிறந்த நாளையொட்டி தாங்களும், தங்கள் தலைமையில் இயங்கும் நடிகர்திலகம் சமூகநல பேரவையும் செய்த, செய்துவரும், செய்ய இருக்கும் நற்பணிகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். அந்த அளவுக்கு தங்கள் செயல்பாடுகள் மலைக்க வைக்கின்றன. எத்தனை ஊர்களில் என்னென்ன சமூகநல நற்பணிகள்..!!!. அனைத்திலும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவது என்ற ஒரே சீரிய நோக்கம்.

    அதன் ஒரு வடிவமாக இன்று காலை மயிலை முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சிற்றுண்டி வழங்கிய நிகழ்வும் அதைத் தொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த மதிய அன்னதானம் வழங்கிய நிகழ்வும் பேரவையின் சிறப்பான சேவைக்கோர் எடுத்துக்காட்டு. உணவுண்ட அத்தனை பேரும் வயிறும் நிறைந்து, மனதும் நிறைந்து, அந்த நிறைந்த மனதுடன் நம் அண்ணனையும், அவர்தம் செல்வங்களாம் தங்கள் அனைவரையும் வாழ்த்தியிருப்பார்களே அந்த வாழ்த்துக்களல்லவா உண்மையான பேறு.

    சேவையின் மறுவடிவமாகத் திகழும் தாங்களும், பேரவையின் அனைத்து சேவைத்திலகங்களும், தங்கள் அனைவரின் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

  6. #2735
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    கள்ளம் கபடம் இல்லாத
    வெள்ளை உள்ளம் கொண்ட படிக்காத மேதை
    கலைத்தாயின் தவப்புதல்வன்
    கலைத்தாயின் ஒரே சூரியன்
    அண்ணன் சிவாஜி கணேசன்
    அவர்களின் இன்றைய பிறந்த நாளில்
    அனைவருக்கும் இனிய
    சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்

  7. #2736
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927)
    சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.
    'சிவாஜி' கணேசன்இ திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார்இ அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
    'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள்இ இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம்இ தெளிவானஇ உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்புஇ சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம்இ நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
    எனினும்இ நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோஇ இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாகஇ அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
    இவர் நடித்த மனோகராஇ வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன்இ கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர்இ வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
    1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர்இ 1961 முதல்இ காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்துஇ அதை விட்டு விலகிஇ தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
    அவர் வாங்கிய முக்கிய விருதுகள்:-
    ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோஇ1960)இ சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1997) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதுஇ நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
    நன்றி மாலை மலர்

  8. #2737
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் சிவாஜி ஜெயந்தி வாழ்த்துக்கள்.

  9. #2738
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    வேலை காரணமாக வசந்த் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை வருத்தமாக இருக்கிறது யாரேனும் இந்த திரியில் பார்க்க செய்தால் மிகவும் சந்தோஷ படுவேன்

  10. #2739
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    தமிழே!!!!

    தாயே!!!!!

    கலை தாயின் தவப்புதல்வனே!!!!!!!

    உன்னை மறக்காத நாளே இல்லை,

    எங்களுக்கு எல்லா தினமும் உன் பிறந்த நாளே!!!!

    உன்னை என்றும் வணங்கி தொழுது பரவசப்படும்,

    ஆனந்த்

  11. #2740
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013

    நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது என்று சொன்னால் அது நிச்சயமாக இந்த ஆண்டின் under statement ஆகவே இருக்கும். காலையில் நடைபெற்ற நிகழிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. ஆனாலும் மிக பெரும் அளவில் மக்கள் திரண்டு வந்திருந்தனர் என்று தகவல் கிடைத்தது. குறிப்பாக இம்முறை தாய்மார்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்ததாக சொன்னார்கள்.

    மாலையில் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது விழாவா இல்லை ஒரு மினி மாநாடா என்று வியக்கும் வண்ணம் மக்கள் கூட்டம் அலைமோதியது. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இசை விழா நடைபெறும்போது top most musician கச்சேரி செய்யும் போது கூட இத்துணை கார்களை நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு வாகனங்களின் அணிவகுப்பு. உள்ளே நிறுத்த இடம் இல்லாமல் வாகனங்கள் அனுமதிக்க மறுத்த காட்சியையும் பார்க்க நேர்ந்தது. விழா முடிந்து அனைவரும் வாகனங்களை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்கே 30 நிமிடங்களுக்கும் மேலே ஆனது. உள்ளே அரங்கதிலோ கீழ் தளம் மற்றும் பால்கனி எல்லாம் நிரம்பி வழிந்தது. கீழ் தளத்தில் அரங்கத்தின் ஒரு ஓரமாக [மேடையிலிருந்து கடைசி வரிசை வரை] நின்ற கூட்டம் அது தனி. அரங்கதினுள்ளில் கணிசமான பெண்டிர் வந்திருந்தது மற்றுமொரு சிறப்பு.

    புது டில்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லி செல்ல வேண்டிய சூழலால் தலைமை தாங்க வேண்டிய ஜெயந்தி நடராஜன் அவர்கள் வரவில்லை. அந்த ஒன்றை தவிர விழா எந்த குறைவும் இல்லாமல் நடந்தது. சிவாஜி விருது பெற்றவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படங்களின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

    முக்தாவிற்கு தவப்புதல்வன் - Love is fine darling பாடல் காட்சி, சினிமா பைத்தியம் வாஞ்சிநாதன் காட்சி மற்றும் அருணோதயம் படத்தில் நீலுவை கொலை செய்வது போல் கத்தியால் குத்தி விட்டு நடக்கும் அந்த வித்தியாச நடை காட்சி ஆகியவை திரையிடப்பட்டன. CVR படங்களில் சுமதி என் சுந்தரி - இரவு தூக்கம் வராமல் jj விடம் நடிகர் திலகம் கதை கேட்கும் காட்சி, சங்கிலி படத்தில் பிரபுவுடன் மோதும் சண்டை காட்சியின் தொடக்க வசனங்கள், மனோரமாவிற்கு தில்லானா [உங்க நாயனத்திலே மட்டும்தான் அப்படி சத்தம் வருதா] மற்றும் வெள்ளை ரோஜா [SP சிவாஜி விசாரிக்கும் காட்சி] LR ஈஸ்வரிக்கு பாச மலர் [வாராய் என் தோழி], நீலவானம் [ஒ பப்பி ஒ ஷீலா பாடல்], சிவந்த மண் [பட்டத்து ராணி] ஆகியவையும், கலைஞானம் அவர்களுக்கு மிருதங்க சக்கரவர்த்தி [சங்கத்திலிருந்து விலக்குகிறோம் என்று சங்க நிர்வாகிகள் சொல்லும் போது நடிகர் திலகம் பேசும் வசனங்கள்], ராஜ ரிஷி படத்தில் பாடல் காட்சி ஆகியவையும் வில்லு பாட்டு சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு அவர் பாக்கியவதி திரைப்படத்தில் எழுதி நடிகர் திலகம் நடித்த பாடல் ஆகியவை ஒளிப்பரப்பட்டன. ரசிகர்கள் ஏக ஆரவாரம் அலப்பறையுடன் ரசித்தனர். தவப்புதல்வன் பாச மலர் தில்லானா மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி கிளிப்பிங்க்ஸ் பெரும் வரவேற்ப்பை பெற்றன.

    பெரம்பூர் அரிமா சங்கம் [Lions Club Of Perambur] தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும் நடிகர் திலகம் அதன் Founder member என்ற முறையிலும் அவர்கள் ஆற்றி வரும் சமூக நல திட்டங்களுக்கு சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஐம்பதினாயிரம் வழங்கப்பட்டது.

    விழாவின் high light சிறப்பு பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் உரைதான். ஆற்றொழுக்கு போன்ற நாவன்மை உடைய ஒருவர் தனக்கு பிடித்த ஒரு கரு பொருளை பற்றி பேசினால் தேன் வந்து பாயும் காதினிலே. அதுதான் இன்று நடந்தது. நெல்லை கண்ணன் போன்ற ஒரு பேச்சாளர் அதுவும் நடிகர் திலகத்தின் ரசிகராக இருப்பவர் நடிகர் திலகத்தைப் பற்றி பேசினால் இன்பத்திற்கு கேட்கவா வேண்டும்? ஒவ்வொரு வரிக்கும் அரங்கம் ஆர்பரித்தது. என்ன சொல்ல வருகிறார் என்பதை கற்பூரம் போல புரிந்து கொள்ளும் ரசனை மிக்க ரசிகர் கூட்டம் எதிரில் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது பேசுகின்றவருக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர் என்ன பேசினார் என்பதை இங்கே எழுத முயல போவதில்லை. காரணம் அது இணைய தளத்தில் உடனே தரவேற்றப்படும். அதை கேட்டு ரசிக்க வேண்டும். மேலும் அதை எழுத்தில் வடிப்பது அத்தனை எளிதன்று.

    அவர் சொன்னதில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். தன் பால்ய கால நண்பன் பரமசிவம் என்றொரு சிவாஜி வெறியனைப் பற்றி பல சம்பவங்களை குறிப்பிட்டார். அந்த நிகழ்வுகள் அனைத்தும் செம ஜாலியாக இருந்தது. இரண்டாவது நடிகர் திலகத்தின் ரசிகர் கூட்டத்தைப் பற்றி சொன்னது. அவரின் நெருங்கிய நண்பர்களிடம் தமிழகத்திலேயே நடிகர் திலகத்தின் ரசிகர் கூட்டம்தான் மிகப் பெரியது. அதிலும் தரத்தில் உயர்ந்த ரசிகர் கூட்டம் என்று அடிக்கடி சொல்லுவாராம்.நடிகர் திலகம் இறந்த நேரத்தில் நெல்லை கண்ணன் ஒரு விபத்தில் சிக்கி சேலத்தில் ஒரு மருத்துவமனையில் ICU வார்டில் நினைவில்லாமல் இருந்தாராம். நடிகர் திலகம் இறந்து 6 நாட்களுக்கு பிறகே அவருக்கு விஷயம் தெரிய வந்ததாம். அவர் அதிர்ச்சி அடையாமல் இருக்க இந்த விஷயத்தை தயங்கி தயங்கி சொன்ன நண்பர் அவர் mood-ஐ மாற்ற "நீ சொன்னது போல மிகப் பெரிய கூட்டம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தது. அதுவும் தானாக வந்த கூட்டம். இறுதி ஊர்வலம் சென்ற வழியெல்லாம் ஒவ்வொரு கட்டிடத்தின் மாடியிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் இருந்தனர்" என்று சொன்னாராம். நெல்லை கண்ணன் சொல்கிறார் அந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் கூட என் தமிழ் மக்கள் ஒரு மகத்தான கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்ய மறக்கவில்லை என்பது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

    அது போல் உரையை நிறைவு செய்யும் நேரத்தில் அவர் முத்தாய்ப்பாக சொன்னது. ஆண்டுகள் 12 உருண்டோடி விட்டன அந்த கலைஞன் மறைந்து. ஆயினும் இத்தனையும் பேர் அந்த மனிதனின் மேல் இவ்வளவு அன்பை பொழிகிறீர்கள் உயிர் துடிப்போடு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த அந்த மனிதன் என்றும் சரித்திரத்தில் அழியா புகழோடு வாழ்வான் என்று முடித்தார்,

    எல்லா வருடமும் போல் ராம்குமார் வரவேற்புரையும் பிரபு நன்றியுரையும் நிகழ்த்தினர். மக்கள் வெள்ளத்தில் அமர்ந்து பார்த்த அருமையான விழா.

    அன்புடன்

    கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •