-
5th October 2013, 11:23 AM
#2911
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் நடையழகு (என்னைக் கவர்ந்தவை)
*
2. உருவான செந்தமிழில் மூன்றானவன்!
*
• அவள் கொஞ்சம் அழகி..
*
என்ன..பொன்னிறமாய் எண்ணெயில் பொரித்தெடுக்கப் பட்டு வென்னீரில் போட்டு பின் ரசத்தில் போடப்பட்ட மாதிரி இல்லாமல், பொரித்தவுடன் நேரடியாய் ரசத்தில் போட்டு நன்கு ஊறிய ரச வடை போல கொஞ்சம் பூசினாற்போன்ற உடல் வாகு..
பின் என்ன..படிப்பு இருக்கிறது..அழகு இருக்கிறது..ஓ யெஸ்..காதலும் இருக்கிறது..ஆனால் அந்தக் காதல் தோல்வி அடைகிறது..இல்லை அடைந்துவிட்டதாக நினைத்து மகாதுயர் மனதில் கொண்டு ஒரு கிணற்றைப் பார்க்கிறாள்..குதித்து விடலாமா என யோசிக்கிறாள்..கிணறும் நடுங்குகிறது! ம்ம்..கொஞ்சம் ஏறப் பார்க்கையில் தடுக்கிறது ஒரு கரம்..திரும்பினால்….
• *
ஆஹா..என்ன தேஜஸ் மிக்க உருவம்.. கண்களில் ஆழ்ந்த கனவு..உடை மிகப் பணக்காரத் தனமாய் இருக்கிறது..ஆள் இளமையாகவும் இருக்கிறார்..
*
கொஞ்சம் யோசித்து வார்த்தைகளை விடுகிறது அந்த உருவம்..நமது உயிரை நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது..வா..என்னுடன்..திரும்பி வெகு வெகுமிடுக்காய் அந்த உருவம் நடக்கும் நடை..வாவ்
*
ஒரு அரண்மனை பங்களாவுக்குள் கூட்டிச் செல்கிறார்..அங்கிருக்கும் புகைப்படத்தில் ஒரு அழகிய பெண் சித்திரம். இது என் மனைவி எனச் சொல்கையிலே அப்பா என ஓடி வருகிறது சிறு பூப்பந்து..ஒரு சிறுமி.. இது என் மகள் என அறிமுகப் படுத்துகிறார்..காலை வரை இரு..உன் வீட்டில் சேர்க்கிறேன் என வெகு நயமாய்ச் சொல்லி தங்க வைக்கிறார்.. ஆனால் இடையில் நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறாள்..ஓஹ்.. என நளினமாக வருத்தப் படுகிறது அந்த அபூர்வ உருவம்..
*
தெரிந்திருக்குமே.. நவராத்திரியில் ந.தி யின் அற்புத ராஜ் வேடம்.. அந்தப் பாத்திரத்தில் நடந்த நடையை வேறு எந்தப் படத்திலும் அவர் திரும்பச் செய்யவில்லை என்பேன் (என் சிற்றறிவை எட்டிய வரை)..
*
அதே படத்தில் கருணை மனம் மிக்க பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர், அவரது மிருதுவான பேச்சு, சாவித்திரியுடன் நடக்கும் நடை, அவர் கதை சொல்ல கருணையுடன் பார்க்கும் முகபாவம் எல்லாம் அழகு தான்..ஆனால் இன்னொரு படத்திலும் திரும்ப வந்திருக்கிறதே..ஆனால் அந்தப் படத்தில் நடை மாற்றியிருப்பார்!
*
அதே நவராத்திரி- வீரக் காவல் துறை அதிகாரி..புலிபோல் கர்ஜித்தல், கம்பீர நடை ம்ம் இதுவும் மறுபடி வந்திருக்கிறது..! (பின்ன அத்தியாயங்கள் எழுதுவதற்கு எனக்கு நடை வேண்டாமா..!)
*
இந்தப் படம் பார்த்து விட்டு வந்து புரியாமல் “அது என்ன ஒன்பது சிவாஜிக்கா” என சகோதரியிடம் கேட்க அவர் ஒரு புரியாத முழி முழித்து “நாளைக்குச் சொல்றேன்..இப்ப தூங்கு” என்றதும் மறு நாள் “உலகத்துல ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாங்களாம்..அதைத் தான் சிவாஜி செஞ்சுருக்கார்” எனச் சொல்லி விளக்கியதும் இன்னும் நினைவில்..
*
அது சரி..ஒரு சக்கரவர்த்தியை எதிர்த்த குறு நில மன்னனின் நடை..ம்ம் அது அடுத்த அத்தியாயம் (இந்த பில்டப் தானே வேணாங்கறது) 
(தொடரும்)
-
5th October 2013 11:23 AM
# ADS
Circuit advertisement
-
5th October 2013, 11:37 AM
#2912
Senior Member
Veteran Hubber
டியர் கோபால் சார்,
மீள்பதிவானாலும் சுவையான பதிவு. நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள் அப்படித்தான். எந்த வயதில் பார்த்தாலும் புதுமையாகவே இருக்கும். 'காதல் பாடல்கள்' தொடரின் துவக்கத்திலேயே ஒரு கஜுராஹோ டைப் பாடலை அதிரடியாகப் பதிவிட்டு மிரட்டி விட்டீர்கள். நமது பயமெல்லாம் எல்லா பாடல்களையும் கஜுராஹோ ஆக்கி விடாதீர்கள்.
ஆய்வின் துவக்கத்தில் பாடலை படைத்தோர் பட்டியலில், பாடலை ஸ்ருங்கார ரசம் சொட்டச்சொட்ட, குழைந்த குரலில் அனுபவித்துப்பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விடுபட்டுப்போய் விட்டார். நீங்கள் முதலில் பதித்தபோது திரியில் இந்தப்பாடலுக்கான வீடியோ தரப்பட்டுள்ளதா?.
எத்தனை அழகு பாடல் ஆய்வைப்படிக்கும்போது, இப்பதிவினால் ஏற்பட்ட தர்க்கத்தில் திரியிலிருந்து கழன்று கொண்ட ஈழத்து பெண்பதிவர் நினைவுக்கு வருகிறார்.
'பாடல் முழுவதும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்' அல்ல. ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், ஒரே கேமரா மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. (இதன்பிறகு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது 'மெட்டி ஒலி' சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி) . இந்தப்பாடல் படமாக்கப்படப் போகும் விதம் பற்றி முதல் நாளே சி.வி.ஆர். வாணிஸ்ரீஇடம் சொல்ல, வாணிக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் காட்சி பற்றியே சிந்தித்து மறுநாள் காலையில் வாணிக்கு கடும் ஜுரம். ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு ஜுரம் தணிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு ஷூட்டிங்க் துவங்கி ஜஸ்ட் அரைமணிநேரத்துக்குள் படப்பிடிப்பே முடிந்து பேக்-அப் ஆனது. அதுவும் லைட் செட் பண்ணத்தான் இவ்வளவு நேரம். பாடல்காட்சி படப்பிடிப்பு வெறும் ஐந்து நிமிடங்களில் முடிந்தது.
-
5th October 2013, 12:28 PM
#2913
டியர் பிம்சி சார்
முரளி சார் ரஜினியை இழித்தோ நடிகர் திலகத்தை புகழ்ந்தோ சொல்லவில்லை இரண்டு மிக பெரிய புகழ் பெற்ற நடிகர்கள் நடித்தாலும் அவர்களின் ரசிகர்கள் இல்லாமல் பொது மக்களின் ஆதரவோடு வெற்றி நடை போடுகிறது என்று தான் சொல்கிறார் .
பொதுவாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு பொது மக்களின் ஆதரவு என்பது எப்போதும் உண்டு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
-
5th October 2013, 12:41 PM
#2914
டியர் ஆல்
கடந்த வாரம் தலைவரின் அமரகாவியம் படம் பார்த்தேன் இளமை கொஞ்சும் மாதவி ஸ்ரீப்ரிய அழகான விச்சுவின் இசை
மிக பெரிய வெற்றி படமான முக்கந்தர் க சிக்கந்தர் தழுவல் இருந்தும் எங்கோ இடிக்கிறது டார்லிங் c .v r இல்லாமல் அமிர்தம் இயக்கம் காரணமா தெரியவில்லை நம் தலைவரிடமும் ஒரு சோர்வு முகத்தில் படம் முழுதும்
விச்சுவின் மகன் கோபி முதலில் ஜெய்ஷங்கர் நடிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் ஆனால் விச்சு தலையீட்டால் நம்மவர் ஹீரோ என்று எப்போதோ படித்த நினவு . செல்வமே ஒரே முகம் பார்கிறேன் சூப்பர் பாடல்
-
5th October 2013, 01:10 PM
#2915
Senior Member
Veteran Hubber
துள்ளல் நடையில் நடிகர்திலகம்...
ஸ்டைல்நடை, சிருங்காரநடை, அழகுநடை இவற்றில் மட்டுமல்ல துள்ளல் நடையிலும் தானே மன்னன் என்று நிரூபித்த பாடல். வெளிநாட்டிலிருந்து திரும்பியபின், அடுத்த துப்பறியும் பொறுப்பேற்க இன்னும் சில நாட்கள் இடைவெளியிருக்க, அதைப்பயன்படுத்தி, பல ஆண்டுகள் தான் பார்த்திராத தாயைக்கான கிராமத்துக்கு வரும்போது கையில் ப்ரீப்-கேஸ், தலையில் தொப்பி, கழுத்தில் கட்டித்தொங்கவிடப்பட்ட ஸ்வெட்டர் சகிதம்,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை.
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - இங்கு
பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்மீனும் விளையாடுது
மூன்று தமிழ் தோன்றுமிடம் எங்கள் நாடு........ ஹோய்
குளிக்கும் பெண்களை ஒளிந்து பார்க்கும் கள்ளமனம் இல்லை, அதனால் அவர்கள் குளிக்கும் படித்துறையிலேயே தலைகுனிந்து அதே துள்ளல் நடையுடன் அனுபல்லவி, குளிக்கும் பெண்கள் மனதிலும் கள்ளமிலாததால், அதை அவர்கள் ரசிக்கும் அழகு...
பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக்காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திரு மஞ்சள்முக சிலையல்லவா
துள்ளல் நடையின் இடையே சிறு பாலத்தின் மீது கொஞ்சம் மெதுவான நடை, சைக்கிளின் கேரியரில் பயணம் செய்யும்போது சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போதே இறங்கும் நேர்த்தி, செடிகளுக்கு நடுவே குனிந்து வரப்பின்மீது நடக்கும் அழகு, மாட்டுவண்டியில் தாவி ஏறும் லாவகம்.
இப்படி ஒருபடம் எப்போது வருமென ஏங்கிய ரசிகர்களின் ஆவலைத்தீர்க்க தோண்டப்பட்ட தங்கச்சுரங்கத்தில், இப்பாடலில்தான் என்னவொரு துள்ளல் நடை.
இவர் நடிகர்திலகம் மட்டுமல்ல, 'நடையில்திலகமும்' கூட.....
-
5th October 2013, 01:40 PM
#2916
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)
.,
டியர் கோபால் சார்,
தங்களின் சிவகாமியின் செல்வன் மீள்பதிவு மீண்டும் படித்தாலும் சிறப்பாக இருந்தது.
இப்பதான் தெரியுது, நீங்க பிஞ்சுலேயே பழுத்தது.
-
5th October 2013, 02:20 PM
#2917
Senior Member
Seasoned Hubber
கார்த்திக் சார்,
பாடல் முழுதும் ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பாடலைப் போலவே, இன்னொரு பாடல், பிரபு நடித்த ஆயுள் கைதி திரைப்படத்திற்காக படமாக்கப் பட்டது. பிரபு ரேவதி நடித்த ஒரு டூயட் பாடல். அதன் வரிகள் நினைவில் இல்லை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th October 2013, 02:21 PM
#2918
Senior Member
Seasoned Hubber
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...
மீண்டும் தங்க சுரங்கம் திரைக்கு விரைவில் மறு வெளியீடு... மனம் கிடந்து துடிக்கிறது... எப்போது... எப்போது ... என்று ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th October 2013, 02:47 PM
#2919
Senior Member
Senior Hubber
//,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை. // என்னைக் கவர்ந்த நடைகளில் இதுவும் ஒன்று..
ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட சி.செ. வியக்க வைக்கிறது.தகவலுக்கு நன்றி கார்த்திக் சார்...ம்ம் த.சு வும் சி.செயும் மறுபடி பார்க்க வேண்டும்...
-
5th October 2013, 06:09 PM
#2920
Senior Member
Diamond Hubber
நெய்வேலி டவுன்ஷிப்பில் தீவிர சிவாஜி பக்தரான திரு. மரியந்துவான் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அடித்துள்ள போஸ்டர்.
Bookmarks