டியர் வாசுதேவன் சார்,

எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்யும் தங்கள் கைவண்ணத்தில் நவராத்திரி தொகுப்பு மிக அருமை. ஒன்பது ராத்திரி ஸ்டில்களையும் ஒரே சைஸில் வரிசைக்கிரமமாக பதித்து அழகூட்டியிருக்கிறீர்கள்.

எல்லா நிழற்படத்திலும் சாவித்திரி இருக்கிறார், சரி. ஆனால் ஒவ்வொரு நிழற்படத்திலும் அவரோடு இருக்கும் ஒன்பது வெவ்வேறு நடிகர்கள் யார் யார்?. ரொம்ப உற்றுப்பார்க்கும்போது நடிகர்திலகத்தின் சாயல் தெரிகிறது....