Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னை மிகவும் கவர்ந்த காதல் பாட்டு.

    படம்: 'அன்பே ஆருயிரே

    பாடல்: 'ராஜ வீதி பவனி என்பது'



    அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் சொர்க்கத்தில் போட்டு விடும் பாடல். அருமையான டியூன். பாடகர் திலகமும், இன்னிசைக் குயிலும் இனிமையாய்க் கலக்கும் பாடல். செம ஜாலி மூட் பாடல்.

    தலைவரும் அழகுப் பதுமை மஞ்சுளாவும் பங்கு பெறும் கனவுப் பாடல்.

    இளமை பூத்துக் குலுங்குவதற்கு கேக்கணுமா! பல சீனியர் நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடிகர் திலகம் சோபித்தாலும் 'தானே' போல இடையில் புகுந்து, இளமை கொலு பொம்மையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து, புத்தம் புது இளமை விருந்து படைத்தார் மறைந்த மறக்க முடியாத மஞ்சுளா.

    உற்சாகத் துள்ளல் இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பத்தில் கப்பலின் மாலுமிகள் போல ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்து, அதற்கேற்ற கச்சிதமான தொப்பியுமணிந்து, இருவரும் சற்றே ஸ்லோ-மோஷனில் உயர எம்பிக் குதித்து, ரம்மியமான இயற்கை சூழலின் பின்னணியில் வண்ண காகித ரிப்பன்கள் சுற்றிலும் பறக்க, பாடலை ஆரம்பிக்கும் போதே நம் மனமும் அவர்களோடு சேர்ந்து பறக்க ஆரம்பித்து விடும். உற்சாக கரைபுரளல்களில் நீந்த நாம் ரெடியாகி விடலாம்.

    தலைவர் கையில் பழத்தை வைத்தபடி சுவைத்துக் கொண்டே மஞ்சுளாவுடன் கை கோர்த்தபடி தத்தி தத்தி நடந்து வரும் அழகு! பழத்தை கடித்தவுடன் குரல் மாறி கிளி போல கீச்சுக் குரல் 'ராஜ வீதி பவனி' என்று ஒலிக்க, சற்றே அதிரும் தலைவர் மஞ்சுளாவுக்கும் பழத்தை ஒரு கடி கடிக்கக் கொடுக்க, மஞ்சுளாவுக்கும் கிளி போல் குரல் மாற, பின் தொண்டையை கனைத்து சரி செய்து கணீரென்ற நம் பாடகர்களின் குரல் மீண்டும் மதுரமாய் ஒலிப்பது அழகான சுவையான கற்பனை. அழகான மலர் வளையத்துக்கு (சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது) உள்ளே மஞ்சுளா தேவதை போல அவ்வளவு அழகு!



    பல்லவி முடிந்ததும் அடுத்த சரணத்திற்கு முன் வரும் அந்த இடையிசை... அடடா! எப்படி சொல்வது! டேப் இசை என்று சொல்வார்களே! அந்த இசைக்கு சிறிதும் தாளம் தப்பாமல் நடிகர் திலகமும் மஞ்சுளாவும் கைகளை முன்னால் மடக்கியும், விரித்தும் கால்களால் ஸ்டெப் வைத்தபடியே டேப் டான்ஸ் ஆடி வரும் அட்டகாசமான மூவ்மெண்ட்ஸ்.( பொங்கல் பானையில் பொங்கி வரும் நுரை போல அவ்வளவு பூரிப்பு இருவரிடத்திலும்) காதலர்களின் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நிஜக் காதல்களே தோற்றுப் போகக்கூடும். டான்ஸ் மாஸ்டருக்கு வேலை வைக்காமல் இவர்களே ஆடி விட்டார்களோ என்பது போல அவ்வளவு என்ஜாய் பண்ணி ஆடுவார்கள். (நடிகர் திலகம் செம உற்சாக மூடில் இருந்திருப்பார் போல)

    'கோஹினூரில் காணாத வைரம்' (அழகான ஸ்டெப்ஸ்) முடிந்ததும் வரும் 'டுடுடு டுட்டு டுடுடு டுட்டு' ஜாலி வரிக்கு நடிகர் திலகம் வாயசைப்பதை கண்டிப்பாக கவனமாகப் பாருங்கள். 'டுட்டு' முடிக்கும் போது 'ஆவ்' என்று அவ்வளவு அழகாக உதடுகள் வேலை செய்யும்.

    அடுத்தது காட்சி மாறும் அழகான கற்பனை.

    தன் தந்தை (மேஜர்) தனது (நடிகர் திலகத்திற்கு) இன்ப மண வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதாக படத்தின் கதை. அதை இந்தப் பாடலில் கற்பனை வளத்தோடு உணர்த்துவார்கள். (சபாஷ் ஏ.சி.டி) மேஜர் ஒற்றைக் கண்ணுடன் கொள்ளைக்காரன் போல வந்து வாளை(லை) நீட்ட, அழகான அரபு சலீம் போல தலைவர் மரங்களின் அடியில் அமர்ந்தபடியே சுற்றிலும் அருவிகள் ஆர்ப்பரிக்க பாடல் இசைக்க, சிருங்கார அனார்கலியாய் திராட்சை ரச ஜார் ஒன்றை கையில் ஏந்தியபடி மஞ்சுளா மெல்ல இடை அசைந்து நடந்து வந்து தலைவர் பக்கம் அமர, ('உத்தமன்' "படகு படகு" பாடலில் வரும் அனார் சலீம் ஞாபகம் வருமே!) பின் இருவரும் காவாலி ஸ்டைலில் கைகளைக் கொட்டியபடியே எந்த நேரம் இதழ்கள் நான்கும் ஒட்டிக் கொள்ளுமோ என்று அனைவரும் அஞ்சுமளவிற்கு நெருங்க, (சென்சார் போர்டு அதிகாரிகள் நிமிர்ந்து அமர்ந்து விளக்கெண்ணையையும், கத்தரியையும் கைகளில் எடுக்க) மேஜர் இப்போது சிகப்பு வண்ண ஜமீந்தார் உடையில் கைகளில் வாளெடுத்து மிரட்ட ஏக களேபரம்தான்.

    அடுத்த சரணத்திற்கான காட்சி.

    பாடலின் தன்மை முற்றிலுமாக மாறிப் போக, குதிரை குளம்புகளின் ஓசை எதிரொலிக்க, புழுதியைக் கிளப்பியவாறு கர்ணனின் கௌபாய் ஸ்டைலில் நடிகர் திலகம் குதிரையில் மலைகளின் இடுக்குகளின் வழியே ('எந்தப் பக்கம் சென்றாலும் மென் மேலும் மேன்மேலும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட்லக் மை குட்லக்') கம்பீரமாக் அமர்ந்தபடி பாடி வர, அழகான தோலுடையில் வண்ண மான் ஒன்று ஓடும் அருவி நீரை குனிந்தபடி பருக, சிறு கற்பாறைகளின் நடுவே சின்னப் பையன் போல நடிகர் திலகம் துள்ளிக் குதித்து ஓடி வந்து இருவரும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக் கொள்ள, கோபாலுக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் நடிகர் திலகம் விளையாட, (சுசீலாம்மாவின் அழகான ஹம்மிங் பின்னணியில்) கடைசியில் அடி இறுகப் பிடியாக மாறி தண்ணீரில் விழுந்து ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொள்ள நாமெல்லோரும் டோட்டல் அவுட்.

    ஆனால் மேஜர் மட்டும் பொறுக்க மாட்டாமல் ஆதிவாசி டிரெஸ்சில் புயலென ஈட்டியை நீட்டியபடி காதலர்களை பிரிக்க பற்களை நற நறவெனக் கடித்தவாறு வருவார். (யப்பா! மேஜரா அது! சூப்பர் சுந்தரராஜா! தலையில் ஆதிவாசிகளின் கிரீடம் வேறு!)

    என்ன ஒரு இளமை ததும்பும் கற்பனை வளம் மிக்க பாடல்! ஆடலுக்கேற்ற பாடல். பாடலுக்கேற்ற கூடல். கூடலுக்கேற்ற ஊடல். மிக மிக வித்தியாசமான தலைவரின் உற்சாகமான டூயட். அழகான இளமை பொங்கும் தலைவர், எம்.எஸ்.வியின் மாறுபட்ட இசை. மஞ்சுளாவின் மறக்கவொண்ணா இளமை! பாடகர்களின் பங்களிப்பு. (கௌபாயாகவும் நடிகர் திலகத்தைக் காட்டியாயிற்று)

    என்னுடைய டாப் 10-இல் இடம் பெற்ற பாடல் மற்றும் காட்சி. அதனால்தான் ஸ்பெஷல் பதிவாக இட்டுள்ளேன்.

    பார்த்து பரமானந்தம் பெறுவீராக.

    Last edited by vasudevan31355; 24th October 2013 at 11:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •