Page 353 of 399 FirstFirst ... 253303343351352353354355363 ... LastLast
Results 3,521 to 3,530 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3521
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by saraswathi lakshmi View Post
    இததானே எதிர்பாக்கறா...
    எப்போடா கீழ விழுவானு எதிர்பாக்கறா !
    நடக்காதுடி ! He is prepared to face anybody's challenge..!
    ஹி இஸ் திலகம் ....நடிகர் திலகம் !
    s.l மேடம்,
    நடிகர்திலகத்தின் சிலை பிரச்சினை எழுந்துள்ள இந்நேரத்தில் பொருத்தமான பதிவு.
    தங்களுடைய மற்ற பதிவுகள் (காட்சி இணைப்புடன்) அருமை. பாராட்டுக்கள், நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3522
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சின்ன கண்ணரே, கார்த்திக் quote செய்து விட்டு ,வாசுவின் பதிவை வழி மொழிவது....விவேக் சொல்வது போல் ரைட் சிக்னல் போட்டு,லெப்ட் சைடு கைகாட்டி ,திரும்பாமே நேரா போவது போல//
    //டியர் எஸ்.கே.சார்,

    நான் எப்போது வாசு ஆனேன்?. (ஆனால் வாசு எனக்குள் நிறைந்திருக்கிறார் என்பது உண்மை)// ஹையாங்க்.. தப்பு தான் கார்த்திக் /கண்பத் சார்.. கொஞ்சம் குழம்பிட்டேன்/குழப்பிட்டேன்.. கார்த்திக் சார் ஆலம் பதிவுபோட்டிருந்தீங்கன்னா இந்தக் குழப்பம் வந்திருக்காது.. (?!) அப்புறமேல்ட்ட்க்கு.. ம்ம் திமோ வில் 39ன்னா இ.ம வில் 38..வயசு போனது போனது தானே

  4. #3523
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சாரி ,கார்த்திக் சார். 1971 இலும் ஆதி பராசக்தியே அதிகம் வசூலித்ததாம். 1966 இல் சரஸ்வதி சபதம் முன்னிலையாம். இதன் படி பார்த்தால் 1966,1968,1969,1970,1971,1972 ஆகிய அத்தனை வருடங்களிலும் கே.வீ.எம் இசையமைத்த படங்களே அந்த வருடங்களின் அதிக வசூல் படங்கள். கதாநாயகர்கள்,இயக்குனர்கள் வெவ்வேறு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3524
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சத்யபிரியா பதிவைப்பாராட்டிய சின்னக்கண்ணன் சார், கோபால் சார், வாசுதேவன் சார் ஆகியோருக்கு நன்றி.

    டியர் வாசுதேவன் சார்,

    முரளி அவர்களின் இருமலர்கள் பதிவுகளுக்கு மேலும் பொலிவு தரும் வண்ணம் நீங்கள் வாரி வழங்கியிருக்கும் நிழற்படத்தொகுப்பு மிகவும் அருமை. ஒருவருடைய பதிவு வரும்போது அதை தங்கள் பங்களிப்பால் மேலும் மெருகேற்றும் தங்கள் சேவை தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

    அந்த வகையில் சத்யபிரியா பற்றிய பதிவுக்கு தங்கள் பாராட்டுக்கும், நிழற்படங்களுக்கும், காணொளிக்கும் மிக்க நன்றி....

  6. #3525
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் முரளி சார் - உங்கள் பதிவை படிப்பது என்பது - நல்ல பசுவின் பாலை சுண்ட காய்த்து அதில் வருத்த முந்தரி பருப்பு + 3 டம்ளர் சுகர் + திராட்சை போட்டு கலந்து இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து , எல்லா பழங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து கடைசியாக சிறிது குங்கும பொடியையும் சேர்த்து எல்லோருக்கும் share பண்ணி சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தை விட 100 மடங்கு அதிகமான இன்பம் ஏற்படுகின்றது - Great sir !

    Ravi

  7. #3526
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி..அது குங்குமப் பொடி யில்லை.. குங்குமப் பூ..(கு.பொடி வயிற்றைக் கலக்கும் )

  8. #3527
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதில் வருத்த முந்தரி பருப்பு // ரொம்பவே வறுத்துட்டாங்க் போல.. (ச்சும்மா ஜோக்குக்காக)

  9. #3528
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Houdini was a master magician as well as a fabulous locksmith. He boasted that he could escape from any Jail cell in the World in less than an hour, provided he could go into the cell dressed in street clothes. Houdini became very famous. A small town in the British Isles built a new Jail, which they were extremely proud of. They issued Houdini a challenge.

    "Come give us a try", they said. Houdini loved the publicity and the money attached with it, so he accepted. The day of the challenge came. By the time Houdini arrived, excitement was at a fever pitch. Houdini rode triumphantly into the town and walked into the cell. He proudly walked into the cell and the Big Iron door was closed. Houdini took off his coat and went to work. Secreted in his belt was a flexible tough and durable ten-inch piece of steel, which he used to work on the lock.


    At the end of 15 minutes his confident expression had disappeared. At the end of 30 minutes he was looking confused. At the end of an hour he was drenched in perspiration.

    After two hours...Houdini literally collapsed against the door - which opened...! Yes, it had never been locked.........except in his mind........where he viewed it was as firmly locked as if a thousand locksmiths had put their best efforts in making the lock for it. One little push and Houdini could have easily opened the door........ ..But he didn't.


    Many times a little extra push is all we need to open our opportunity door. In the game of life we will discover, as we set our goals and unlock our mind, that the world will unlock its own treasures and rewards to us. Realistically, Most locked doors are in our minds.

    Whenever I read about NT , I always think above message - how many in the past and present are having unlocked minds - what a treasure NT is for this Tamil nadu and entire nation - what a pride he brought to us through his versatile acting. By locking our minds in recognizing this great born actor , we lose the opportunity of getting more laurels - we need to give an extra push to all such immature people to be awaken and thank almighty that such a star was born in our state -

    Ravi

  10. #3529
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    டியர் முரளி சார் - உங்கள் பதிவை படிப்பது என்பது - நல்ல பசுவின் பாலை சுண்ட காய்த்து அதில் வருத்த முந்தரி பருப்பு + 3 டம்ளர் சுகர் + திராட்சை போட்டு கலந்து இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து , எல்லா பழங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து கடைசியாக சிறிது குங்கும பொடியையும் சேர்த்து எல்லோருக்கும் share பண்ணி சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தை விட 100 மடங்கு அதிகமான இன்பம் ஏற்படுகின்றது - Great sir !

    Ravi
    நம் திரி மிக மிக உபயோகமான திரிகளில் ஒன்றாக விளங்குவதற்கு மேற்கண்ட பதிவே சான்று. இந்த ரெசிபி இன்றே என் வியட்நாம் சமையல் காரியிடம் கொடுத்து ட்ரை பண்ண சொல்ல போகிறேன்.(குங்கும பூவோடு)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3530
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?
    கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை
    பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல
    திகழ்வது ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தான்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி என்ற
    ஒரு நிலை ஏதாவது ஒரு தருணத்தில் வரும். வறுமை, இயலாமை, பழி சொல்,
    துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம்
    நம்மை தாக்கும் அந்த தருணங்களில் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையே கூட
    அசைத்து பார்க்கப்பட்டுவிடும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பாது
    என்பது போல அதுல இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சு வர்றதெல்லாம்
    அத்துணை சுலபமில்லே. அந்த சமயத்தில் என்ன ஆறுதல் எங்கு தேடினாலும்
    மனதுக்கு அமைதி கிடைப்பது இல்லை.

    அது போன்ற நேரங்களில் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் இந்த ‘மயக்கமா
    கலக்கமா’ பாடல். பாடலை கேட்ட நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள்
    தெளிவு பெரும். வாழ்வில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிற எண்ணம் வேரூன்றும்.

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோரும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோரும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ........ஓடுவதில்லை

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
    (மயக்கமா கலக்கமா )


    ஏழை மனதை மாளிகை ஆக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு
    நாளை பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    நடக்கும் வாழ்வில் ...........அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    (மயக்கமா கலக்கமா )

    as told by my friend :

    சமீபத்தில் ஒரு நாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை
    வாங்குவதற்கு தி.நகரில் அவரது இல்லத்திலேயே அமைந்துள்ள கண்ணதாசன்
    பதிப்பகம் போயிருந்தேன்.

    அப்படியே கண்ணதாசனின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களையும்
    சந்தித்தேன். அப்போது திரு.காந்தி கூறிய சில விஷயங்கள் சிலிர்க்க வைப்பவை.

    இதற்கிடையே, ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பற்றி காந்தி கண்ணதாசன் அவர்கள்
    கூறியவைகளை இங்கே தருகிறேன். படியுங்கள்… சிலிர்த்துப்போவீர்கள்!
    எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டே விடுவீர்கள்!


    ஊருக்கு திரும்ப இருந்த கவிஞர் வாலி… பாடலை கேட்டு பின்னர் மனம் மாறிய சம்பவம்!

    திரையுலகில் எப்படியாவது வெற்றி பெறவேண்டி கவிஞர் வாலி
    ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னை வந்த சமயம் அது. ஆல் இந்திய ரேடியோ,
    நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து
    சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக
    பிரேக் கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம்
    தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும்
    சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

    நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.
    இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.
    மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி,
    மறுபக்கம் வறுமை… ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு.

    “சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம ஊருக்கே போய்டவேண்டியது
    தான்” என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்
    ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கே
    வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கி’ங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒரு
    பிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க,
    ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்
    “சரி… பாடுங்க” என்று சொல்ல… ஸ்ரீனிவாஸ் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பாடத்
    துவங்குகிறார்.

    பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ
    “இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டு
    ஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு
    இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சு” என்று சொல்லி பெட்டியை எடுத்து
    உள்ளே வெச்சிடுறார்.

    அன்னைக்கு வெச்ச பெட்டியை அதுக்கு பிறகு வாலி எடுக்கவே இல்லை. சொல்லப்போனா
    பீரோ பீரோவா வாங்கித் தள்ளிட்டார். இது வாலி சாரோட லைஃப்ல நடந்த விஷயம்.

    விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில்….

    இந்த பாட்டு சம்பந்தமா அப்பாவோட (கண்ணதாசன்) லைஃப்ல நடந்த விஷயம் ஒன்னை
    சொல்றேன் கேளுங்க.

    அப்பா மெட்ராஸ்க்கு வரும்போது அவரோட வயசு 16 இருக்கும். காரைக்குடியில
    இருந்து சென்னைக்கு கையில ஒரு பைசா கூட இல்லாம வர்றாரு. வருஷம் 1942
    அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயின்ல வந்து சாயந்திரம் இறங்குறார்.
    எங்கே போறதுன்னு தெரியலே. அவருக்கு மெட்ராஸ்ல தெரிஞ்சதெல்லாம் மண்ணடில
    இருக்குற எங்க ஊர்க்கரங்களுக்கு என்றே இருக்கும் ‘நகரத்தார் விடுதி’
    தான்.

    அதுக்கு கூட எப்படி போறதுன்னு தெரியாது. பஸ்ல போக கைல நையா பைசா
    இல்லே. நடந்தே போவோம்னு மண்ணடிக்கு கிளம்புறார். பீச் வழியா போறாரு. அந்த
    நேரம் பார்த்து இருட்டிடவே, இனிமே விடுதிக்கு போகமுடியாது…
    லேட்டாயிடுச்சு… பூட்டியிருப்பாங்கன்னு அங்கேயே ஒரு ஓரமா படுக்குறார்.

    ஆனா பாரா வந்த போலீஸ்காரர் படுக்க விடலே…. “யார் நீ? இங்கே எதுக்கு
    படுத்திருக்கே?” அப்படின்னு கேட்டு இடத்தை காலி பண்ணச்சொல்லி
    மிரட்டுறார். இவர் தன் நிலைமையை சொல்ல, “அதெல்லாம் தெரியாது. இடத்தை காலி
    பண்ணு, இல்லே நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…” அப்படின்னு சொல்ல….
    இருந்தாத் தானே கொடுக்குறதுக்கு… So, படுக்க கூட இடம் இல்லாம அந்த
    இடத்திலிருந்து துரத்தப்பட்டார் கண்ணதாசன். “இந்த ஏழையிடம் நாலணா
    இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை” அப்படின்னு
    பின்னாளில் எழுதினார்.

    அதுக்கப்புறம் அப்பா சினிமாவுல ஜெயிச்சு, படம்லாம் கூட தயாரிச்சார்.
    ‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
    டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
    இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.

    அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
    கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
    கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாடறப்போ நல்லா
    பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
    நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.

    இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”

    எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!

    “சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது

    நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு
    & உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

    என்கிற வரிகள் தான் சார். அங்கே தான் கவியரசு நிக்கிறார்.” என்று நான் சொல்ல
    … பதிலுக்கு திரு.காந்தி கண்ணதாசன் ஆமோதித்தார் -

    இதே மாதிரி பல NT பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார் - சில உதாரணங்கள்

    1. விதி என்று ஏதும் இல்லை - படம் சொர்க்கம்

    2. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நிறைகுடம்

    3. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி

    Ravi


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •