Page 373 of 399 FirstFirst ... 273323363371372373374375383 ... LastLast
Results 3,721 to 3,730 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3721
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இயக்குனர்கள் வரிசை

    இயக்குனர் கே.விஜயன்.

    நண்பர்களின் வெற்றிக் கூட்டணி ('ரிஷிமூலம்' படத்தில் திலகமும், விஜயனும்)



    நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கியவர். பி.மாதவன் வரிசையில் இவரும் ஒரு வெற்றி மற்றும் வெள்ளிவிழாப் பட இயக்குனர். நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனரானவர். 'பாதை தெரியுது பார்' (1960) என்ற அபூர்வமான தமிழ்ப் படத்தில் நாயகனாக அறிமுகம். வடக்கத்திய நந்திதா போஸ் இதில் ஹீரோயின். எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் தேனமுது. ('சின்ன சின்ன மூக்குத்தியாம்', 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே') பின்னாட்களில் எல்லோரையும் இயக்கிய இயக்குனர் விஜயனை இந்தப் படத்தில் இயக்கியவர் நிமாய் கோஷ்.

    'நாணல்' படத்தில் சௌகார் மற்றும் கே.ஆர்.விஜயாவுடன் விஜயன்.



    அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த 'நாணல்' படம் இவரை நன்கு அடையாளம் காட்டியது. இயக்குனரான பின்னும் இவர் நடிகர் திலகத்துடன் சிவந்தமண், ரிஷிமூலம் போன்ற படங்களிலும் நடித்தார்.

    சரி! இவர் இயக்கிய தலைவர் படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.



    நடிகர் சுப்பையா அவர்கள் தயாரித்த 'காவல் தெய்வம்' (1969) படத்தில் சாமுண்டி கிராமணி என்ற அற்புதமான சாணர கதாபாத்திரத்தில் (கௌரவ நடிகராக) நடிகர் திலகத்தை இயக்கியவர் விஜயன். ஜெயகாந்தன் கதை. படம் நல்ல வெற்றி கண்டது. நடிகர் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்புக்கு இன்றளவும் பேசப்படும் படமாக இது அமைந்தது, விஜயனுக்கு இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.



    பின் 1976 -ல் 'ரோஜாவின் ராஜா' இயக்குனர். கொஞ்சம் சிக்கலான காலகட்டத்தில் இவர் மறுபடி நடிகர் திலகத்தை இயக்கினாலும் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றி பெற்றது. 'அன்னையின் ஆணை' அசோகனுக்குப் பிறகு சாம்ராட் அசோகனை வேறு ஒரு கோணத்தில் விஜயன் நடிகர் திலகத்தின் மூலம் காட்டினார். அசோகனாக ஸ்லோ மோஷனில் ஆர்ப்பாட்டமாக நடிகர் திலகம் ஓடி வரும் அழகே அழகு! (ஆனால் நெடுந்தகட்டில் அந்த சீன் இல்லையே!) நடிகர் திலகம், வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரியும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. பாடல்கள் பட்டை கிளப்பின.



    அடுத்து ஒரு பம்பர். நம் பாலாஜி விஜயனை இயக்க அழைத்தார். நடிகர் திலகம் நடிப்பில் அசத்த அருமையாக உருவானது 'தீபம்'.(1977) அரசியல் சூழ்நிலைகளினால் நடிகர் திலகத்தின் அன்றைய படங்கள் சற்று சுமாராகப் போன நிலையில் 'அவ்வளவுதான்... நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எக்காளமிட்ட எத்தர்களின் எண்ணத்தை எரிக்க வந்தது சுஜாதாவின் 'தீபம்' படம் பேய் ஹிட். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் எந்த திசை ஓடினார்கள் என்று தெரியவில்லை. மலையாளக் கரையின் தழுவலாக இருந்தாலும் அற்புதமாக, கனகச்சிதமாக தீபத்தை இயக்கி தன் முத்திரையைப் பதித்தார் விஜயன். தெளிவான டைரக்ஷன். நடிகர் திலகத்தின் நம்பகமான வெற்றி இயக்குனர் ஆனார் விஜயன்.



    தீபத்தில் விஜயன் உழைப்பைக் கண்ட நடிகர் திலகம் தனது சொந்த பேனரில் எடுத்த 'அண்ணன் ஒரு கோயில்' படத்தை விஜயனிடமே இயக்கக் கொடுத்தார். விஜயனும் படு சிரத்தையாக உழைத்து இன்னொரு பாசமலர் ரேஞ்சுக்கு அ.ஒரு.கோயிலை உருவாக்கி அந்த வருட (1977) தீபாவளி விருந்தாக மாபெரும் வெற்றியடைய செய்தார். சுஜாதாவை நேரிடையாக நடிகர் திலகத்திற்கு ஜோடி சேர்த்து தீபத்தில் ஏமாந்த ரசிகர்களை நாலு பக்கமும் பரவசப்படுத்தினார் விஜயன். நடிகர் திலகத்தின் தொடர் வெற்றி விஜயன் மூலம் தொடர ஆரம்பித்தது. 'அண்ணன் ஒரு கோயிலி'ன் வெற்றி கேலி பேசிய அத்தனை பேர் வாயையும் பசை போட்டு ஒட்டியது.



    இப்போது நடிகர் திலகத்தின் ரசிகர்களின் செல்ல இயக்குனர் விஜயன் என்று ஆன நிலையில் அடுத்து ஒரு வெள்ளிவிழாப் படம். 'தியாகம்' (1978) பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த 'தியாகத்'தை விஜயன் வெள்ளிவிழாப் படமாக்கி (முரளி சாரின் மதுரை சிந்தாமணியில்) நமக்கு விருந்து வைத்தார். 'தியாகம்' வசூல் மழை பொழிந்தது. (பின்னாலேயே 'என்னைப் போல் ஒருவன்' தொடர்ந்த போதும் கூட) தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது தியாகம். (நடிகர் திலகம் படத்தில் சாட்டை இடம் பெற்றால் சென்டிமென்ட்டாக படம் சூப்பர் ஹிட். உதாரணம் காவேரி, என் தம்பி, சிவந்த மண், தியாகம், திரிசூலம்) சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் என்ற அழகான கமர்ஷியல் கலவையை கலந்து சூப்பர் ஹிட் ரேஞ்சில் கொண்டுவந்து நிறுத்தினார் 'தியாகம்' படத்தை விஜயன்.



    தொட்டதெல்லாம் வெற்றியாயிற்று விஜயனுக்கு. ஆனால் என்ன கண்பட்டதோ! அடுத்து 'மதர் இந்தியா' வைத் தழுவி என்.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த 'புண்ணிய பூமி' (1978) படத்தை விஜயன் இயக்கினார். ஆனால் படம் ஏமாற்றத்தை அளித்தது. Full scope ம் வாணிஸ்ரீக்குப் போனது, இடைவேளை வரை நடிகர் திலகத்துக்கு சில காட்சிகள், மதர் இந்தியாவின் காட்சிகளை தமிழ்க் கலாச்சாரத்துக்கு மாற்றாமல் உடைகள் முதற்கொண்டு அப்படியே காப்பி அடித்தது, நம்பியாரின் சலிக்க வைத்த மிகை நடிப்பு (குலமா குணமா, லட்சுமி கல்யாணம்) அவ்வளவாக எடுபடாத பாடல்கள், சவ சவ இழுவைக் காட்சிகள், மதர் இந்தியா வந்தபோது இருந்த டிரெண்ட் 'புண்ணியபூமி' வந்த நேரத்தில் இல்லாதது என்று பல காரணங்கள் படத்தின் வெற்றியைப் பாதித்தன. (பவானி, ஒய்.விஜயா போன்ற இளம் நடிகைகள் நடிகர் திலகத்துடன் இணைந்தது சற்று ஆறுதல்) இடைவேளைக்குப் பின் வரும் கொள்ளைக்கார முரட்டு மகன் ரோலில் நடிகர் திலகம் மிகப் பெரிய ஆறுதல் 'இருதுருவத்'தை ஞாபகப் படுத்தினாலும் கூட. விஜயன் இந்தப் படத்தை இன்னதென்று செய்வது அறியாமல் தவிப்பது நன்றாகவே தெரியும். ரீமேக்அதுவும் இந்தியாக இருந்தால் சில இயக்குனர்களுக்கு பெரும் தொல்லைதான்.



    அப்புறம் 'நாத்' கள் கொடி நாட்டியவுடன் நடிகர் திலகத்தின் இருநூறாவது படம். சரஸ்வதிக்கு மிகவும் பிடித்த படம். லக்ஷ்மிக்கும் மிகவும் பிடித்தபடம். இதுவரை எந்தப்படமும் வசூலில் கிட்ட நெருங்க முடியாத படம். நடிகர் திலகத்தின் சொந்தப் படம் 'திரிசூலம்' (1979) விஜயன் கைவண்ணத்தில் வசூலில் நிலைத்த, யாவரும் மலைத்த வரலாறு படைத்தது. புண்ணிய பூமியின் தோல்வியையையும் சேர்த்து வைத்து திரிசூலத்தை திரையரங்குகளில் திருவிழாவாக்கினார்கள் நடிகர் திலகமும், விஜயனும். தமிழ்த் திரையுலகமே இதன் வசூலைக் கண்டு மிரண்டது. (ஆறு வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்... தந்தி விளம்பரம்.) அரசுக்கு வரி வருவாயாகவே திரிசூலம் மூலம் பல லட்சங்கள் கிடைத்தது. இந்தப் படத்தின் சாதனைகளை சொல்லி மாளாது. இப்போதும் கோவையில் சாதனை படைத்து வருகிறது. பலருக்கு இது வேதனைதான். என்ன செய்வது? சூரியனை சுண்டு விரலால் மறைத்து விட முடியுமா?
    Last edited by vasudevan31355; 5th November 2013 at 07:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3722
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இயக்குனர்கள் வரிசை தொடர்கிறது....



    பின் 'மான்' தாவியதும் பாலாஜி 'நல்லதொரு குடும்பத்'தை (1979) விஜயனை இயக்க வைத்து தந்தார். நடிகர் திலகம், வாணிஸ்ரீ ஜோடி அற்புதம் இதிலும் தொடர்ந்தது. தேங்காய் துருவல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. குடும்ப சட்னி கெட்டிருக்காது. இருந்தாலும் படம் அட்டகாச வெற்றி பெற்றது. எங்கள் கடலூரிலேயே நாற்பது நாட்கள் தாண்டி ஓடிய மகத்தான வெற்றிக் குடும்பம். விஜயனின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

    'தூரத்து இடிமுழக்கம்' விஜயகாந்த், பூர்ணிமா



    'நல்லதொரு குடும்பத்'திற்குப் பிறகு கொஞ்சம் நல்ல காலம் இல்லாமல் போய் விட்டது விஜயனுக்கு. விதி யாரை விட்டது? பல வெற்றிகள் தந்த மிதப்பில் நடிகர் திலகம் அடுத்து இயக்க வாய்ப்பு தந்த சிவாஜி புரடக்ஷன்ஸ் 'ரத்த பாசம்' படத்தை விஜயன் சரிவர இயக்காமல் இழுத்தடித்து டிமிக்கி கொடுத்தார். காரணம் சொந்தப்பட ஆசை. அப்போது அறிமுகமாகி இருந்த விஜயகாந்த், 'சட்டம் ஒரு இருட்டறை' பூர்ணிமா, பீலிசிவம் இவர்களை வைத்து வங்கக் கடலின் ஓரத்தில் அதாவது எங்கள் ஊர் கடலூரில் 'தூரத்து இடி முழக்கம்' என்ற சொந்தப் படத்தில் முழுநேர கவனத்தையும் செலுத்தினார் விஜயன். இதனால் 'ரத்த பாசம்' படப்பிடிப்பு பாதிப்படைந்தது. பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் இயக்குனர் இல்லாமலேயே மீதிப் படத்தை முடித்தார். திரையலக வரலாற்றிலேயே இயக்குனர் பெயர் போடாமல் வந்த ஒரே படம் நமது 'ரத்த பாசம்' என்றுதான் நினைக்கிறேன். இயக்குனர் பெயருக்கு பதில் நடிகர் திலகம் என்று வெறுமனே ஸ்டில் கார்ட் மட்டும் போடுவார்கள். (இதை ஏற்கனவே திரியில் பதிந்திருக்கிறேன்) இதிலும் சாதனையா? ரத்தபாசம் (1980) சுமாரான ரிசல்ட் இருந்தும் கலெக்ஷனில் பின்னியது திரிசூலத்தின் பாதிப்பு மக்களிடம் நீங்காததினால்.

    'தூரத்து இடிமுழக்கம்' (1980) தூரத்திலேயே கேட்டுவிட்டதால் இடி போன்ற அடி வாங்கினார் விஜயன் சொந்தப்படம் எடுத்து. 'செம்மீன்' புகழ் சலீல் சௌத்திரியின் அருமையான இசை இருந்தும் (உள்ளமெல்லாம் தள்ளாடுதே) படம் அடி வாங்கியது. விஜயனும் தள்ளாடினார். (கடலில் எடுத்த படமாயிற்றே!) சென்டிமெண்டாக எந்தப் படம் கடலூரில் எடுத்தாலும் அந்தப்படம் தோல்விதான் என்ற அவப் பெயரை விஜயனின் சொந்தப்படமான 'தூரத்து இடிமுழக்கம்' மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது எங்கள் ஊர். ஆடிக்காற்றில் பாதுகாப்பு, தர்மம் எங்கே அம்மிகளே பறந்த போது தூரத்து இடிமுழக்கம் என்ற இலவம்பஞ்சு எம்மாத்திரம் எங்கள் ஊருக்கு?

    இதற்குள் நடிகர் திலகம், பாலாஜி கூட்டணி பில்லா கிருஷ்ணமூர்த்தியை பிடித்துக் கொண்டது. (தீர்ப்பு மற்றும் நீதிபதி) வெற்றி வாகையும் சூடியது.



    மனம் திருந்திய மைந்தனாக மீண்டும் விஜயன் நடிகர் திலகத்தை தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அதே பாலாஜி, நடிகர் திலகம் கூட்டணி அதே விஜயனுக்கு மறுபடி தங்களுடன் 'பந்தம்' (1985) ஏற்படுத்திக் கொடுத்தது. கிடைத்த சான்ஸை அற்புதமாகப் பயன்படுத்தி 'பந்தம்' படத்தை பக்காவாக ஹிட் பண்ணிக் கொடுத்தார் விஜயன். ஜெனரல் ஆப்ரஹாம் ஜெயித்துக் காட்டினார்.(அஜீத்தின் மனைவி நம்மாளுக்குப் பேத்தி) பழைய பகைமை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் திலகம் தங்கமான மனதுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். (அதனால்தான் கடவுளுக்கு இணையானவர் ஆகிறார்) விஜயனும் நடிகர் திலகம் தன்னை மீண்டும் ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையைக் கண்டு நெகிழ்ந்து அதையே 'பந்தம்' படத்தில் ஒரு காட்சியாகவும் (நடிகர் திலகம் தவறு செய்த தன் டிரைவரை வேலையை விட்டுத் தூக்கி விடுவார். பின் அதனை மறந்து மன்னித்து மீண்டும் அதே டிரைவரை வேலைக்கு அமர்த்திக் கொள்வார்) வைத்து பரிகாரம் தேடிக் கொண்டார். (அந்தக் காட்சியை விஜயன் நடிகர் திலகத்திடம் விளக்கும் போது நடிகர் திலகம் விஜயனின் மன நிலைமையை அறிந்து விஜயனிடமே அதைப் பற்றிக் கேட்டாராம்). ஆக 'பந்தம்' மூலம் மீண்டும் விஜயனும், திலகமும் இணைந்தனர்.





    பின் 1986-இல் அடுத்தடுத்து இரண்டு படங்கள். சொந்த பேனரில் நடிகர் திலகத்தின் 'ஆனந்தக் கண்ணீர்', அடுத்து பாலாஜியின் பிரம்மாண்ட தயாரிப்பான 'விடுதலை'. இரண்டுமே ஹிட் படங்கள். பிரஸ்டிஜ் பத்மனாபனாகக் கொடி நாட்டியவரை 'ஆனந்தக் கண்ணீரி'ல் காம்ப்ரமைஸ் கல்யாணராமனா'கக் காட்டி பரிதாபப்பட வைத்தார் விஜயன்.

    'குர்பானி' அம்ஜத்கான் ரோலை தலைவர் விடுதலையில் செய்தார். மெட்ராஸ் தமிழில் காமெடி கலக்கல் ('நென்ச்சேன்') ரஜினி ஒரு ஹீரோ. விஷ்ணுவர்த்தன் ஒரு ஹீரோ. படம் கமர்ஷியல் ஹிட்.

    பின் 1987-இல் நடிகர் திலகம் அற்புதமாக நடிக்க 'தாம்பத்யம்' என்ற ஒரு நல்ல படத்தை இயக்கித் தந்தார் விஜயன். ('தாம்பத்யம்' படத்தைப் பற்றி முழு ஆய்வு செய்து நான் பதிவு அளித்துள்ளது நண்பர்களுக்குத் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்)

    கமலை வைத்து பாலாஜியின் தயாரிப்பில் 'மங்கம்மா சபதம்' என்ற படத்தையும் விஜயன் இயக்கினார். அது மட்டுமல்லாமல் சில மலையாள, இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். தீபம் படம் 'அமர்தீப்' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் பாலாஜியேதான். இயக்கியவரும் விஜயன்தான். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ராஜேஷ் கண்ணா, வினோத் மெஹ்ரா, சபனா ஆஸ்மி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்திற்கு லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைத்தார். இந்தப் படத்திற்கு டைட்டில் இசை அமைத்தவர் யார் தெரியமா?! சாட்சாத் நம் மெல்லிசை மன்னர்தான். என்ன! குழப்பமாக இருக்கிறதா? 'ராஜா' படத்தின் அற்புதமான டைட்டில் இசையை அப்படியே இந்தப் படத்திற்கு பாலாஜி டைட்டிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அப்படின்னா டைட்டில் இசை விஸ்வநாதன் சார் தானே! அடப் பாவிகளா!

    இவரும் எனக்கு மிகப் பிடித்த இயக்குனர். நான் முன்பே சொன்னது போல அனாவசிய வள வள காட்சிகளை வைக்கவே மாட்டார். சொல்ல வேண்டியதை 'நச்'சென்று சொல்வார். தொண்ணூறு சதம் வெற்றி நிச்சயம். காட்சிகள் மிக அழகாகக் கோர்வையாகச் செல்லும். சிக்கலான மூன்று கதாபாத்திரங்களை நடிகர் திலகத்திற்குக் கொடுத்து கொஞ்சமும் குழப்பாமல், குழம்பாமல் பாமர ஜனங்களுக்கு எளிமையாக புரியும்படி ஈடுஇணையில்லா வெற்றி 'திரிசூலம்' வழங்கியவர். சொன்னால் சொன்னபடி நேரத்துக்கு படத்தை முடித்துத் தரக் கூடியவர். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியே நடிகர் திலகத்தை வைத்து குறுகிய நாட்களில் ஷூட் செய்து சாதனை படைத்தவர்.

    'சிவந்த மண்' ணில் நடிகர் திலகத்துடன் விஜயன்.



    விஜயன் என்றால் வெற்றி. இது இவருக்கு மிகப் பொருந்தும்.
    Last edited by vasudevan31355; 5th November 2013 at 07:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3723
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Fine analysis of K Vijayan Sir. You have touched each and every movie
    directed by him not only NT but others also. Great Work.

  5. #3724
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Expecting Mr Kannan for your 4000th Post Mr Vasu Sir.

  6. #3725
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் கலக்கும் நமது நடிகர் திலகம் நடிப்பில் 1979 முதல் இன்று வரை சக்கை போடு போடும் 200வது திரைப்படம் "திரிசூலம்" - மாலை மலரில் செய்தி வெளிவந்துள்ளது.


    நடிகர் திலகத்தின் வீச்சு எந்தளவிற்கு உள்ளது என்பதை இதை பார்க்கும்போது உணரமுடிகிறது.



    இந்த செய்தியை பார்க்கும்போது ஒரு விஷயம் பற்றி கேள்வி எழுகிறது.

    இரண்டு திலகங்களும் இன்று உயிருடன் இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் மக்களின் மனதில் எந்தளவிற்கு ஆழ்ந்து உணர்வோடு உணர்வாக கலந்துள்ளார்கள் என்பது இதை படிக்கும்போது நமக்கு புரிகிறது.

    இந்த சாதனையை எந்தளவிற்கு அடுத்த தலைமுறை , அதற்க்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் சாதிப்பார்கள் என்பது மற்ற திரி நண்பர் திரு எஸ்வி அவர்கள் கூறியது போல கேள்விகுரியாகிறதோ?

    16592431.jpg

  7. #3726
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Dear All

    Now i am watching Airtel super singer programme in VIJAY TV. Everybody is praising our Great Nadigarthilagam.
    Particularly Thirumathi Asha Bonsle appreciated about our NT FAMILY. All singers now singing our great Nadigar thilagam's collection and superb
    While singing pasa malar song Aasha ji felt sorry and drops from her eyes. All young singers are beutifully singing our great nadigar thilagam's songs well.
    Just now Mr.Prabhu and Mr.Ramkumar sitting in front of Aasha ji and Mr.Prabhu tells about NT and Aashaji family relationship well.

    Superb

    C.Ramachandran

  8. #3727
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பவர்கள கொடுத்து வைத்தவர்கள்.
    நம் போன்ற பக்தர்கள் கண்ணீர் விடாமல் பார்க்கவும் முடியாது.
    வாழ்க தலைவர் புகழ்.

  9. #3728
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்... தொடர்ச்சி


    தேங்காய் சீனிவாசன்

    செல்வாக்குள்ள கதாநாயகர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திறமையான நடிகர்களைக் கூட தங்கள் படங்களில் இடம் பெறச் செய்யாமல் இருக்கச் செய்வது சரிதானா?



    நடிகர் திலகம் பதில்
    செல்வாக்குள்ள கதாநாயகர்கள் அரசியல் ரீதியாக மோதிக் கொள்ளும் போது, மற்ற கலைஞர்கள் விலகி இருந்தால், நீங்கள் சொல்லுகின்ற நிலைக்கு ஆளாக மாட்டார்கள்!



    சத்யகலா

    பானுமதி, பத்மினி, சாவித்திரி போன்ற புகழ் பெற்ற நடிகைகளைப் போல, விளங்க விரும்புகிறேன்.
    இளம் நடிகையான நான், நடிப்பில் முன்னேற என்னென்ன வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்?



    நடிகர் திலகம் பதில்
    நீங்கள் முன் கூறியவர்களை மனதில் நினைத்துக் கொண்டே இருந்தால் கூடப் போதும். உங்களுக்கு நடிப்பு தானே வந்து விடும்!



    வி.எஸ். ராகவன்

    கலை உலகின் முடிசூடா மன்னர் நீங்கள். அதுவும் மேடையில் நாடகத்தில் நீங்கள் நடிக்கும் போது காண்போரைப் பரவசப் படுத்தி விடுவீர்கள்.
    அந்தப் பரவசத்தை மீண்டும் எப்போது காணலாம்?



    நடிகர் திலகம் பதில்
    எனக்குத் தாய் வீடே மேடை தானே! தாய் வீடு புளித்து விடாது!



    ஜெய் சங்கர்

    நடிகர் சங்கத்துக்காக நல்ல பல திட்டங்களுடன், சிறந்த அரங்கத்தைக் கட்டி முடிக்கவும், மற்றும் அதன் வளர்ச்சியிலும் நீங்கள் பெரும் அக்கறை கொண்டிருந்தீர்கள்.
    இந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தலைவருக்காக நீங்கள் போட்டியிடாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் உங்களுக்கு?
    தவிர, ஏன் நீங்கள் இம்முறை போட்டியிட விரும்பவில்லை?



    நடிகர் திலகம் பதில்
    என்னைப் பொறுத்த வரை, ஒரு நல்ல காரியம் செய்யும் போது, எந்தப் போட்டியும் இருக்கக் கூடாது.
    அப்படி போட்டி ஏற்பட்டால், செய்யும் நல்ல காரியத்த்துக்கு யாரோ இடைஞ்சல் செய்வதாகத்தான் நான் நினைப்பேன்.
    இம்முறை அப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது. எந்தவிதமான பிரச்னைக்கும் ஆளாகாமல், விலகிக் கொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.
    ஆனால் விட்டார்களா?
    சில பத்திரிகைகள் – படிக்கவும் கூசுகின்ற அளவுக்கு என்னை விமர்சனம் செய்தன. அதை அவர்களாகச் செய்தார்களோ அல்லது யாராவது சொல்லிச் செய்தார்களோ..
    எல்லாவற்றுக்கும் மேலாக உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எனக்குத் துணையாக இருக்கும் போது, நடிகர் சங்கத்தின் நல்ல பணிகளிலிருந்து நான் விலகிக் கொள்ள மாட்டேன்.
    தவிர,
    நடிகர் சங்கத்துக்கென செயல்பட ஒரு ‘பொது அறக்கட்டளை’ இருக்கிறது. அதன் மூலமாகத்தான் பல நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை, யாரும் மறந்து விட வேண்டாம் எனவும் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.
    அந்த அறக்கட்டளைக்கு நான்தான் தலைவன் என்பதையும் யாரும் மறந்து விட வேண்டாம்!



    ஆர். எஸ். மனோகர்

    உங்களுடன் நடிக்கும் நடிக, நடிகையருக்கு, செட்டில் நடிக்கச் சிரமப்படும் கஷ்டமான காட்சியில், நீங்கள் நடிப்பு சொல்லித் தருவீர்கள். உங்களுடன் நடிக்கும் போது நேரில் நான் பார்த்திருக்கிறேன்.
    நீங்கள் முழு நேர டைரக்டராக சொந்தப் படம், அல்லது மற்ற படத் தயாரிப்பாளருக்காக ஏன் டைரக்ட் செய்யக் கூடாது?



    நடிகர் திலகம் பதில்
    எனக்கு அந்தத் துணிவு இன்னும் வரவில்லையே

    அடுத்த பதிவில் முடியும்
    Last edited by RAGHAVENDRA; 5th November 2013 at 10:15 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3729
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி அவர்களின் சிலையை பாதுகாக்க சிம்மக்குரலில் தனது நிலையை வெளிபடுத்திய சிவாஜி பக்தன் வீரத்தமிழன் சீமான் அவர்களுக்கு உலக சிவாஜி பக்தர்கள் சார்பாக

    எங்களது நன்றி யை தெரிவித்து கொள்கிறோம்.

    C.Ramachandran

  11. #3730
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் வாசு சார்

    நடிகர் திலகம் படங்களை இயக்கிய விஜயன் பற்றிய படத்தொகுப்பு மிக அருமை

    C.Ramachandran

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •