- 
	
			
				
					13th November 2013, 02:01 PM
				
			
			
				
					#3901
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 உங்களுக்கெல்லாம் நான் எப்படித்தான் புரிய வைப்பது? என் நெஞ்சை பிளந்து காட்டினால் அதில் நடிகர்திலகம் மட்டுமே தெரிவார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பக்தி கொண்டவன் நான். 
 என்னை இன்னும் இந்த திரி நண்பர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், நான் செலவழித்த நேரம் ,பட்ட பாடுகள் விரயமே.
 இன்னும் என்னதான் செய்வது?சொல்வது?விரக்தியும்,வேதனையுமே மிஞ்சுகிறது.
 
 
 
 நீங்கள் பக்தன் என்று தெய்வத்திற்கு தெரிந்தால் போதாதா கோபால் சார்? மற்ற பக்தர்களுக்கு என் தெரியவேண்டும்.?
 மேலும் தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டிக்கொள்வது  மனிதஇயல்பல்லவா?
 "புரிந்தது புரியாதது;தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிவோம் யாம்!"  என்பது தெய்வத்தின் வாக்கல்லவா?
 கவலையை விடுத்து, கடமையை தொடருங்கள்.
 .
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							13th November 2013 02:01 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 02:23 PM
				
			
			
				
					#3902
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 நாமெல்லாம் இறைவனுக்கு நடமாடும் கோவில்கள்.நம் நடிப்பு தெய்வத்தின் நடமாடும் நினைவு சின்னங்கள். அவருடைய சிலைக்கு எந்த குந்தகமும் நேராது. தமிழர்கள் அந்த அளவு நன்றி மறப்பார்களா என்ன? 
 
 
 சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், வழக்கு, நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
				
				
				
					
						Last edited by KCSHEKAR; 13th November 2013 at 02:38 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 02:30 PM
				
			
			
				
					#3903
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr Vasu Sir,
 
 Awaiting your golden post. Come soon and give a fitting
 reply those who are tarnishing the fame of NT.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 03:06 PM
				
			
			
				
					#3904
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 03:26 PM
				
			
			
				
					#3905
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							ரவி,
 தங்கள் கருத்து எனக்கு புரிகிறது. இங்கு உள்ள முக்கால்வாசி பதிவர்களுடன் எனக்கு உயரிய நட்பு உண்டு. தற்போது வந்த பிரச்சினை என் ஈகோ சம்பந்த பட்டதில்லை. நான் இதில் தீவிரமாக இருந்து எல்லோரிடம் வாங்கி கட்டி கொள்ளும் போது,எப்படி என் ஈகோ உயரும்? நடிகர்திலகத்தை நான் மிக மிக மிக உயரிய பீடத்தில் ,எல்லா கடவுள்களையும் விட இன்னும் உயரமாக வைத்துள்ளேன். அவர் புகழுக்கு தகுதியில்லாத பதிவுகள் வரும் போது வெகுண்டு விடுகிறேன். (நான் அந்த பதிவு வேண்டாம் என்று நண்பர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.)சுடும் வார்த்தைகளை தவிர்க்கவே எண்ணுகிறேன். ஞான ஒளி அண்டனி போல கோபத்தில் என்னை மறக்கிறேன். உங்கள் பதிவு இதமாக உள்ளது.நன்றி.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 03:51 PM
				
			
			
				
					#3906
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							http://tamil.oneindia.in/movies/news...ay-187304.html
 
 என்னுடைய விருப்ப பாடகிகள் வரிசையில் என்றுமே முதலாக இருக்கும் சுசிலா அம்மாவின் பிறந்த நாள் இன்று. (78 வது)
 
 கடந்த முறை எம்.எஸ்.வீ ஐயா அவர்களின் பேரன் திருமண வரவேற்பில்,தங்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது எனது மோட்ச  வாயில்.
 
 அம்மாவின் சிறந்த இருபது(Solo) என் பார்வையில்.....
 
 1)சொன்னது நீதானா
 2)எங்கே நீயோ நானும் அங்கே
 3)ஒரு நாளிரவு பகல் போல் நிலவு
 4) காதல் சிறகை காற்றினில் விரித்து
 5)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
 6)மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம்
 7)அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
 8)என்னை எடுத்து தன்னை கொடுத்து
 9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
 10)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
 11)இதய வீணை தூங்கும் போது
 12)பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை
 13)கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
 14)மனம் படித்தேன் உன்னை நினைப்பதற்கு
 15)நீராடும் கண்கள் இங்கே
 16)என்ன என்ன வார்த்தைகளோ
 17)மாலை பொழுதின் மயக்கத்திலே
 18)காதல் எனும் வடிவம் கண்டேன்
 19)உன்னை நான் சந்தித்தேன்
 20)பார்த்த ஞாபகம் இல்லையோ
 
 
 
 
				
				
				
					
						Last edited by Gopal.s; 13th November 2013 at 03:55 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 04:26 PM
				
			
			
				
					#3907
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							32 ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
 33 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
 34 ஓராயிரம் மேடையில் ஆடினாள் (சுசீலாம்மா தானே)
 35 அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது..
 
 (யோசிச்சுப் பாத்தா எல்லாம் தேவிகானாஸ்!! - ஒன்றைத் தவிர ம்ம் கண்ணா என்னவோ போடா ) )
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 04:45 PM
				
			
			
				
					#3908
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
				
					அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? - ஒரு நண்
				
					
						
							தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.
  எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
 
  கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
 
  புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.
 
  சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
 
  பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
 
  நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
 
  தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
 
  ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
 
  அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
 
  காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
 
  சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
 
  உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.
 
  எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
 
  எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
 
  அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
 
  உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
 
  எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
 
  எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
 
  வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
 
  எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர்,  நடிப்புக்கு  நடிப்பு சொல்லிகொடுக்ககொடிய,  தமிழை வாழ  வைக்க கூடிய நடிகர் திலகம் நம்முடன் இருந்தார் அவரால் தமிழ் வளர்ந்தது , அவர் வளர்த்த தமிழால் , தமிழ் நாடு தன் மதிப்பில் உயர்ந்தது - இன்று பேசும் த்மில் கொலை  வெறியாக தமிழ் நாட்டை சுட்டு எரித்து கொண்டிருக்கின்றது .
 
  உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
 
  நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
 
  இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
 
 இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.
 
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 04:50 PM
				
			
			
				
					#3909
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							The tile of my above posting  was cut short - it should be read as " அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? ஒரு நண்பனின் எண்ண ஓட்டங்கள்  "  
 
 Ravi
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th November 2013, 04:53 PM
				
			
			
				
					#3910
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							//இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.// நன்னாவே எழுதியிருக்கேள் ரவி..அதே சமயம் அதை எந்த ஊடகத்துல எழுதியிருக்கேள்னு பார்க்கறச்சே (வலை) - சுசீலாம்மா நினைப்பு வருது - நினைத்தால் சிரிப்பு வரும்...  
 
 
 
 
 
 
 
Bookmarks