-
13th November 2013, 06:13 PM
#11
Senior Member
Senior Hubber
ஹோ வென்று பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது வெள்ளம் அந்த ஆற்றில்.. கரையில் இருந்தவர்கள் மூவர்..குரு, அவரது சீடன், பின் பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகின்ற அழகுடன் -கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒந்தொடி கண்ணே உள - என திருவள்ளுவர் இந்தப் பெணணைத் தான் பார்த்து எழுதியிருப்பாரோ என்பது போன்ற - ஜகஜ்ஜோதியான மிகப் பேரழ்கான இளம்பருவம் பூத்துக் குலுங்கும் இளம் பெண்..ம்ம்
*
அந்த இளம்பெண் குருவினை வணங்கி : ஐயன் மீர்.. இந்த ஆற்றை நான் கடக்க உதவுவீர்களா..” எனக் கேட்க கருணை கொண்ட அந்த குரு அதற்கென்ன பெண்ணே என் முதுகில் ஏறிக் கொள்.. நான் நீச்சலடித்து அக்கரையில் உன்னை விடுகிறேன் என்றார்..
*
குரு ஆற்றில் பாய பெண் அவர் முதுகில் அமர அவர் நீச்சலடித்தார்..பின்னால் சீடனும் கஷ்டப் பட்டவண்ணம் நீந்தி அக்கரையை அடைய, அந்த ப் பெண் குருவிடம் நன்றி சொல்லிச் சென்று விட்டாள்..
*
குருவும் சீடனும் தங்கள் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர்..வழி முழுவதும் சீடன் பேசவில்லை.. இருவரும் மாற்றுடை அணிந்து வகுப்பறைக்கு வந்த பின்பும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சீடன்..
*
குரு கேட்டார்..”வாட் ஹேப்பண்ட் மை சைல்ட்” சிஷ்யன்,”ஓ..லார்ட்.. நீங்கள் வயதில் பெரியவர்கள், அறிவிலும்..அதுவும் துறவு வேறு கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆனால்..” ஏவி.எம். ராஜனுக்கு அடைப்பது போல் சீடனுக்கும் நெஞ்சை அடைத்த்து..”எப்படி அந்த பியூட்டிஃபுல் யங்க் லேடியை உங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்தீர்கள்..தவறல்லவா.. இது முறையோ இது தகுமோ இது தரும்ம் தானோ..” எனக் கேட்டான்..
*
குரு மென் சிரித்து.”ஓஹ்..மை பாய்.. இதானா உன் டவுட்..ஆக்சுவல்லி ஸ்பீக்கிங்..அந்தப் பெண்ணை ஆற்றின் அக்கரையிலேயே நான் இறக்கி வைத்து விட்டேன்.. நீ தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்” என்றாராம்..
**
அதுபோலவே ரவி சார் – என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. !
-
13th November 2013 06:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks