Results 1 to 10 of 984

Thread: Vishwaroopam 2 - UalagaNaayagan to Rock in India!

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கமல் என்றும் இளைஞர்களின் நாயகன் Contd#2..


    சினிமாவுக்காகவே வாழ்பவர்

    ஜெய்கணேஷ், சுப்பிரமணியபுரம், மதுரை.

    அபூர்வ சகோதரர்கள் படம் 1989லேயே வெளிவந்துவிட்டது. ஆனால், அதை நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் பார்த்தேன். குள்ள கமலின் சேட்டைகளை எந்தளவுக்கு ரசித்தேனோ, அதே அளவுக்குக் கடைசியில் அவர் அழும் காட்சியில் நானும் அழுதேன். தன் ரசிகர் மன்றங்களை எல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றவர் என்று நான் வளர வளர அவரைப் பற்றிய வியப்பான செய்திகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. சினிமாவை வைத்து வாழாமல், சினிமாவுக்காகவே வாழ்கிற அபூர்வ கலைஞர் எங்கள் கமல்.

    என்றும் புதுமை விரும்பி

    சுஜய், பிஎஸ்ஸி, முதலாம் ஆண்டு, விஸ்காம் மாணவர், சென்னை.

    கமல் எப்போதுமே கதாநாயகன்தான். அவர் மாதிரி தமிழ்த் திரையில் சோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் யாருமே இல்லை. தொழில்நுட்பத்தில் பலர் அவரைப் பின்தொடர்ந்து செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழில் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத் திரைப்படம் அவருடைய மும்பை எக்ஸ்பிரஸ். அதற்குப் பின்னாலதான் மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள். உன்னைப்போல் ஒருவனில் அவர்தான் ரெட் கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்தினார். இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். விஸ்வரூபம் அவுட்டோர் போகாமல் கிரீன் மேட்டில் ஹாலிவுட் தரத்தில் செய்த படம்.

    தமிழ் சினிமாவில் புதுமையைப் புகுத்துவதற்குப் படாத பாடுபடுகிறார். சோதனை முயற்சிகளை அவர் செய்துவரவில்லை என்றால் தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் இந்த அளவு வந்திருக்குமா என்பது சந்தேகமே.

    என்றும் மாணவன்

    பிரியங்கா தர்மராஜ், கண்டண்ட் ரைட்டர், கோவை.

    இளம் நடிகர்களுக்குப் போட்டியாகப் பெரும்பாலும் அனைத்து நடிகைகளுடனும் நடித்தவர் கமல்தான். கமல் படம் என்ற அடையாளம், பாடல், படம் என அனைத்து அம்சங்களிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துவிடும். கிளாசிக்கல் டான்ஸ் முதல் அனைத்தையுமே ஒரு பள்ளி மாணவன் போலக் கற்றுக்கொள்வதும், அதைப் பெரியதாய்க் காட்டிக்கொள்ளாததும் இவரது பிளஸ்.

    கேட்டவர்க்குக் கேட்டபடி

    கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர், நாகர்கோவில்.

    தமிழ் சினிமாவின் பிதாமகனே கமல்தான். இன்னிக்கும் என் மாதிரி இளவட்ட பசங்க பார்க்கும்படி லவ் சீன்ஸ்ல ரொமான்ஸ் பண்ணுவார்.வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகியை பார்த்த 5 நிமிடத்திலேயே லவ் புரபோஸ் பண்ணுவாரு. பார்த்த இவ்வளவு நேரத்துக்குள்ளயான்னு நாயகி கேட்கும் போது எனக்கு இதுவே லேட்ன்னு ரொமாண்டிக்கா சொல்லுவாரு.

    களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய வேகம் இப்போதும் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. இளமை எப்போதும் அவர் முகத்தில் நிழலாடும். மேடைகளில் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசும் பண்பு, நகைச்சுவை நாயகனாக, ஆக்ன்*ஷ ஹீரோவாக என எந்த ரோல் செய்தாலும் அதில் ரசிக்க வைப்பவர் கமல்தான். பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்பத் தன் உருவத்தை மாற்றி விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் கமல் என் கவனத்தை ஈர்க்கிறார்.

    ஒப்பற்ற கலைஞன்

    ஆர்.எஸ். சிந்து, கல்வித்துறை, சென்னை

    இந்திய சினிமாவில் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாகப் பலதுறை வல்லவன் கமல் ஹாசன் அவர்களைத்தான் கூறுவேன். நடிப்பு, நடனம், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு ஆகிய எல்லாத் துறைகளையும் அவரால் சிறப்பாகக் கையாள முடிந்திருக்கிறது. நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தேவர் மகன். அது தந்த பிரமிப்பில், அவரது படங்களைத் தேடித் தேடிப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறேன். ஒரு பெண் ரசிகையாக அவர் காதல் இளவரசனாக ஜொலித்த தொடக்கக் கால ரொமண்டி படங்களைப் பார்த்து ரசிக்கும் அனுபவமோ அதற்குரிய வயதோ இல்லாமல் போனது. அதன் காரணமாகவே அவரது முதிர்ச்சியான, சோதனை முயற்சிகள் நிறைந்த உலகத் தரமான நடிப்பு வெளிப்பட்ட பிந்தைய படங்கள் பார்க்கும் வாய்ப்பும் சினிமா ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன. கலையின் மீதான அக்கறையும், வெறித்தனமான நேசிப்பும் கொண்ட இக்கலைஞனிடம் இருந்து மேலும் தரமான படங்களை எதிர்பார்க்கிறேன்.

    (தி இந்து - தமிழ்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •