அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு முறையும் இது போன்ற பதிவுகள் இடும்போது இத்தகைய பதீவுகளை இடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சும். இம்முறை அப்படி நிகழாது என நம்புகிறேன்.

இங்கே சில நாட்களாக இருந்த கசப்புணர்வு, தேக்க நிலை இவற்றை நீக்கி மீண்டும் இந்த திரி தன் ஒளி வீசும் பெருமையை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

குறிப்பாக ராகவேந்தர் சார். நான் கேட்டுக் கொண்டேன் என்ற காரணத்திற்காகவே இறங்கி வந்து விட்டுக் கொடுத்த உங்கள் பெருந்தன்மைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

கோபால் அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று main திரியில் பலரும் மனம் புண்பட காரணமாயிருந்த சில பதிவுகளை நீக்கியதற்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.

வாசு ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு ருசி இருக்கும், ஒரு wish list இருக்கும். அதன்படிதான் அவர்களின் பதிவுகள் அமையும். நாம் யாரையும் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கூற வேண்டாம்.

கோபால் அவர்களுக்கு,

உங்கள் அறிவு, ஆற்றல், பல்வேறு துறைகளைப் பற்றிய ஞானம் உலக சினிமாக்களின் பரிச்சியம் இவை அனைத்தும் இங்கே உள்ள அனைத்து நண்பர்களாலும் பாராட்டப்படும் விஷயங்களாகும். உங்களுக்கு பிடித்ததை நீங்கள் எழுதுவது போல் அவரவருக்கு பிடித்ததை அவரவர்கள் எழுதுகிறார்கள். அதில் நமக்கு உடன்பாடு இருந்தால் பாராட்டலாம், பங்களிப்பு செய்யலாம். பிடிக்கவில்லையென்றால் ஏதும் கூறாமல் விலகி சென்று விடலாம். இது நான் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை. உங்களுக்கே தெரிந்ததுதான். ஆகவே நான் உங்களிடம் உரிமையோடு விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து யார் மனமும் புண்படாமல் நடந்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

நமது ஹப் மாடரேட்டர்கள் மற்ற திரிகளைப் போல் அல்லாமல் நமது திரியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். நம்மை கலக்காமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் இனிமேலும் அவர்கள் அந்தளவிற்கு பொறுமை காப்பார்களா என்பது சந்தேகமே. எனவே அனைத்து நண்பர்களும் திரியின் மாண்பு காத்து இந்த திரிதான் "The Thread Of the Hub" என்ற பெருமையை என்றும் தக்க வைப்போம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை என்றும் நாடும்

அன்புடன்