Page 37 of 401 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #361
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஹிட்லர் உமாநாத்.
    படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது.
    டியர் வாசுதேவன் சார்,
    தங்களுடைய 4000 வது பதிவாக ஹிட்லர் உமாநாத் அலசல் பதிவை அளித்து அசத்தியுள்ளீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல படத்தில் உமாநாத்தின் சிங்கநிகர் நடிப்பு, சுருளிராஜன் வில்லுப்பாட்டு (சுப்பு ஆறுமுகம் உதவியுடன்), என்று பல அம்சங்கள் இருந்தும் கால சூழ்நிலையால் படம் சரியாகப் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    தங்களுடைய பிறந்தநாளில், 4000 வது பதிவை அளித்த தாங்கள், பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் வெளிக்கொணரும் விதத்தில், இன்னும் பல ஆயிரம் பதிவுகளை அளிக்கவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    நடிகர் திலகம் திரியின் பாகம் 12-ஐ துவக்கி வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரியின் பாகம் 12 க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #363
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஹிட்லர் உமாநாத்' பதிவை முழுதும் பொறுமையாக படித்து விட்டு பின் தங்கள் பின்னூட்டத்தை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #364
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு தேவன் சார்..வருக வருக..

    வந்தவுடன் இனிமையாக ஒரு நீஈஈள சுவையான உழைப்புமிக்க பதிவு- ஹிட்லர் உமா நாத்..

    நாங்கள் எல்லாம் வெகு சாதாரண ரசிகர்கள்..படம் மொத்தமா நல்லா இருக்கா பார்ப்போம்..சிவாஜி ஆக்டிங்க் நல்லா இருக்கும்..அதுக்காக மத்தவங்க சரியா செய்யலைன்னா எப்படிப் பார்க்கறது..என்ற மன நிலையில் இருப்பவர்கள்/இருந்தவர்கள்..

    சில சமயங்களில் சிவாஜியின் நடிப்புக்காகவே சில படங்கள் திருப்பித் திருப்பி ப் பார்த்ததுண்டு/பார்ப்பதுமுண்டு.

    நீங்கள் இட்டிருக்கும் ஹிட்லர் உமா நாத்தின் பதிவில் நடிகர் திலகத்தின் மீதான உங்களது பக்தி மிக அழகாக வெளிப்படுகின்றது..

    இந்தப் படம் நான்பார்க்காத ஒன்று..

    //அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம்,//

    மகேந்திரன் கதை மெளலி வசனம் என்பது நான் அறியாத ஒன்று.. ந.தி யின் ஸ்டில் பார்த்த போது வித்தியாசமான் கெட் அப் என்று தெரிந்ததே தவிர..வெளிப்படையாகச் சொன்னால் - அது என் மனத்துக்கு விருப்பமானதாக இல்லை என்று சொல்லுகையிலேயே சிலர் மெட்ராஸ் பாஷையிலும் சிலர் ஆங்கில கொட்டேஷன்களை வைத்தும் திட்ட வருவது போல் தோன்றுகிறது..

    //அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ!

    ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! //

    படத்தைப் பார்த்து விட்டு நீங்கள் சொன்ன காட்சிகளை அசை போட்டு விட்டுச் சொல்கிறேன்..

    பட் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய விஷயம்..உங்கள் அசாத்திய பக்தி- நடிகர் திலகத்திடம், அவர் புகழ் பரப்புவதற்கான உழைப்பு என்பது அளவிடற்கரிய ஒன்று.. தொடருங்கள் உங்கள் தொண்டினை..

    வாசக தோஷ ஷந்தவ்யஹ..

  6. #365
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    என் ஆருயிர் அண்ணன் வாசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஹிட்லர் உமாநாத் அலசல் என்ற பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை எங்களுக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அண்ணன் வாசுவுக்கு நன்றி பலகோடி .

    திரு முரளி சார்,
    தங்கள் ஆதங்கம் நம் எல்லோரின் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது .கண்டிப்பாக நம் கண்டனத்தை அந்த பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும்.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #366
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    nadigarthilagam avargalukku bharatha rathna viruthu thara vendum

  8. #367
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார் - சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகின்றது இரண்டு காரணங்களால் - ஒன்று - எங்கள் எல்லோருடிய கோரிக்கையும் ஏற்று விரைவில் திரிக்கு வந்ததற்காக ---- இரண்டாவது - உங்கள் பிறந்த நாள் பரிசாக " ஹிட்லர் உமாநாத்" யை பற்றி பதிவிட்டது - 5 பாகங்களில் - எவ்வளவு உழைப்பு - எவ்வளவு நாள் இந்த அருமையான பதிவுக்காக உறக்கம் இல்லாமல் , சரியாக உணவு உண்ணாமல் , உடம்பை அலட்சியம் படித்திருப்பீர்கள் - 5 பாகம் படிப்பதற்கு எவ்வளவு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் - உங்கள் 5 பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன் - திருப்தி ஏற்படவில்லை - மீண்டும் படித்துகொண்டு இருக்கிறேன் - என் பேராசை லிஸ்டில் எழுதினவை எல்லாம் நிறைவேறிவிட்டது - நீங்கள் பதிவை போட்ட பின் - 3 நாட்களக்காவது திரியில் எல்லோரும் உங்கள் பதிவை மட்டும் படிக்க வேண்டும் பிறகு தங்கள் பதிவுகளை தொடரல்லாம் - இப்படி சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை - ஆனால் ஒன்று நிச்சயம் - 3 நாட்களுக்கு மேல் படிக்க பல விஷயங்கள் உள்ளது உங்கள் பதிவில் - நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்த மாதிரி பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று , பூண்டி ஆலய கர்த்தரையும் , நம் இறைவனையும் வேண்டி கேட்டுகொள்கிறோம் - என் கருத்துக்கள் தொடர்கின்றன

    அன்புடன் ரவி


  9. #368
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.

    ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!

    அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.

    -----
    உண்மை - நவரத்தினமாக திகழ்தவர் நம் தலைவர் ஒருவரே - தன்னால் முடியாது என்று எந்த Roleயும் விட்டு விடவில்லை - அந்த அந்த Roleக்கு உரிய மரியாதையை அவர் ஒருவர் தான் கொடுத்திருக்கிறார் - படத்தின் வெற்றி தோல்விகள் , நடிப்பின் வெற்றியை தொடாமல் போயிருக்கலாம் ஆனால் அதுவே அவர் நடிப்புக்கு தந்த மரியாதையை குறைத்துவிடாது

    தொடரும்

  10. #369
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.

    ======

    படிக்கும்போதே கண்கள் குளம் ஆகிவிட்டன வாசு சார் - எப்படியிருந்திருக்கும் படத்தில் என்று யூகிக்க முடிகிறது - துரதிஷ்டமாக , இந்த படம் வெற்றி பெறாவிட்டாலும் , இதிலும் ஒரு சாதனை புரிந்திருக்கும் ntயை என்ன சொல்வது - அதை அருமையான நடையில் எங்களுக்கு எடுத்துசொன்ன உங்களை எப்படி புகழ்வது - கிருபா சார் மொழியில் சொன்னால் - படா ஷோக்கா எலுதரே கண்ணா - என் வீட்டு பக்கம் வரியா நயினா - அப்பால பார்ட்டி யே தரேன் - ஆங் -----

    தொடரும்

  11. #370
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.

    இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

    அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.

    ==============================================

    முற்றிலும் உண்மை - உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை - பாத்திரங்களை பேச வைத்தார் - அது ஒரு கோழையோ , வீரனோ , முட்டாளோ , மூடனோ - அவர் கவலைப்பட்டதே இல்லை - கவலை படுவதெல்லாம் நாம் தான் - ஏன் அவர் அந்த பாத்திரத்தில் நடித்தார் - ஏன் அந்த கதாநாயகியுடன் நடித்தார் என்று - இப்படி நடித்து இருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும் , அப்படி நடித்ததினால் , படம் நினைவில் நிக்க வில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம் - உண்மையில் எல்லோரும் ஒரே மனதாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் - அவர் இல்லாமல் இருந்திருந்தால் - நடிப்பு என்ற வார்த்தை ஒரு NRI யாகவே இருந்திருக்கும் - சும்மாவா சொன்னார் கோபால் சார் - சிவாஜி ஒரு மாமனிதர் என்று --------

    அன்புடன் ரவி


Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •