Page 42 of 401 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #411
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    ஹிட்லர் பற்றிய பதிவிற்கு பாராட்டுகள் என்று சொல்லுவது formality. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள் காட்டும் சிரத்தை. அலசல் அல்லது ஆய்வு என்று எடுத்துக் கொண்டால் அதை ஒரு ஆத்மார்த்தமான தவமாக செய்யும் உங்கள் dedication எப்போதும் என்னை வியக்க வைக்கும். இந்தப் படம் 1982-க்கு பிறகு பார்க்கவில்லை. ஒரு மங்கலான நினைவாகவே இருக்கிறது. எனவே படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. படம் மீண்டும் பார்க்க நேர்ந்தால் உங்கள் ஆய்வு உதவி புரியும் என நம்புகிறேன்.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #412
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    குமுதத்தில் வந்த தவறான தகவலைப் பற்றிய என் பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. உண்மை வெளிப்பட்ட பிறகும் புகைப்படம் தவறுதான். ஆனால் செய்தி உண்மை என்பது போல் மீண்டும் ஒரு மாயை தோற்றம் உருவாக்க முயற்சி நடந்து அதுவும் எடுபடாமல் போய் விட்டது. சிலர் ஒன்றை மறந்து விட்டனர். குமுதத்தில் வாராவாரம் வெளியாகும் இந்த பகுதியே அபூர்வமான ஒரு புகைப்படத்தை அந்த புகைப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களிடம் காண்பித்து அதன் பின்னணியை அவர்களிடம் கேட்டு அதை வெளியிடுவது என்பதாகும். அப்படித்தான் இந்தப் புகைப்படத்தை காண்பித்து இந்த "செய்தியை" வெளியிட்டோம் என்கிறார்கள். அந்த புகைப்படமே சாந்தி படத்தோடு சம்மந்தம் இல்லாத ஒன்று என சொல்லும்போது அதில் எழுதப்பட்டிருப்பது அனைத்தும் கற்பனையே என்பது எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியதே. மேலும் தணிக்கை குழுவினரிடம் influence செலுத்தக்கூடிய அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் என்ற வாதமே தவறு என்பதை பல உதாரணங்களோடு என்னால் சொல்ல முடியும். ஆனால் தேவையின்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஒரு சிலர் நடிகர் திலகத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்பதற்காக பதிலுக்கு நாமும் அதை செய்ய வேண்டாம்.

    சந்திரசேகர் அவர்களே,

    நீங்கள் குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுவதை வரவேற்கிறேன். அதை செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்லாயிரகணக்கானோர் படிக்கும் நமது திரி போன்ற இணையதளங்களில் நாம் இந்த உண்மைகளை உரக்க சொல்ல வேண்டும். காரணம் குமுதம் அல்லது எந்த பருவ இதழாக இருந்தாலும் நாம் அனுப்பும் மறுப்பு கடிதத்தை பிரசுரிப்பார்கள் என்று நம்ப முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் வார இதழில் ஒரு பகுதி வெளியாகி கொண்டிருந்தது. ஒவ்வொரு பிரபலங்களைப் பற்றிய 25 தகவல்கள். அதில் பாக்கியராஜ் 25 என்ற தலைப்பில் வந்த செய்தியில் மதுரை தங்கம் திரையரங்கில் தூறல் நின்னு போச்சு படம் 100 நாட்கள் ஓடியது பற்றி குறிப்பிட்டு விட்டு எம்ஜிஆர் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படம் இதுதான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெரும்பாலோருக்கு தெரியும் அந்தப் படம் மதுரையில் மீனாட்சி திரையரங்கில் வெளியானது என்று. தங்கம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய மொத்தம் 7 படங்களில் 3 நமது நடிகர் திலகம் நடித்தது [பராசக்தி, படிக்காத மேதை, கர்ணன்]. வழக்கம் போல் அதை மறைத்து விட்டார்கள். சரி அங்கே 100 நாள் ஓடிய எம்ஜிஆர் அவர்கள் நடித்த ஒரே படத்தையாவது [நாடோடி மன்னன்] சரியாக குறிப்பிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அங்கே வெளியாகாத படத்தை அங்கே வெளியானது போல் எழுதுகிறார்கள்.

    இந்த தவறை சுட்டிக் காட்டி ஒரு சிலர் மின்னஞ்சல் அனுப்பினோம். ஒரு சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கருத்தை பதிவு செய்தார்கள். இவை எதுவும் கண்டுக் கொள்ளப்படவில்லை. நமது நண்பர் S.K விஜயன் விகடன் அலுவலகத்திற்கே நேரில் சென்று ஒரு கடிதத்தை கொடுத்தார். அவர் சென்ற நேரம் அதை எழுதிய முதன்மை ஆசிரியர் [நா.கதிர்வேலன் என்று நினைவு] அலுவலகத்தில் இல்லை. கடிதத்தில் தன அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்திருந்த விஜயனுக்கு சில மணி நேரத்தில் ஒரு அழைப்பு. விகடன் அலுவலகத்திலிருந்து. பேசியவர் அந்த கட்டுரையை எழுதிய முதன்மை ஆசிரியர். ஏன் இவருக்கு மட்டும் response என்று தோன்றுகிறதல்லவா? அதற்கு காரணம் விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு வரி. அப்படி என்ன எழுதியிருந்தார்? தமிழ் சினிமா வரலாறு தெரியாதவர்களை எல்லாம் சினிமா செய்திகளின் முதன்மை ஆசிரியராக ஏன் நியமனம் செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அது அந்த முதன்மை ஆசிரியருக்கு கோவத்தை வரவழைத்து விட்டது. என்னை வரலாறு தெரியாதவன் என்று எப்படி சொல்லலாம் என்று அலைபேசியில் வாதம் செய்தார். எனக்கு தகவல் சொன்னவர்கள் தவறான தகவலை தந்து விட்டனர். அதற்காக வரலாறு தெரியாதவன் என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டார். அதற்கு நம் விஜயன் அவர்கள், ஒரு தகவலை சரி பார்த்து பிரசுரிக்க தெரியாதவரை, லட்சம் பேர் படிக்கும் பத்திரிக்கையில் வரும் செய்தியின் உண்மை தன்மையை சரி பார்க்காமல் வேறு ஆட்கள் மீது பழி போடுபவரை வரலாறு தெரியாதவர் என்று சொல்வதில் தவறேயில்லை என்று கூறி அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

    அடுத்த வாரமும் சரி அதற்கு அடுத்து வந்த வாரங்களிலும் சரி மறுப்பை பிரசுரம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல வெளியிட்ட செய்தி தவறானது என்று வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை மாண்பை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் குமுதமும் இப்போது அது போன்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆகவேதான் இது போன்ற இணையதளங்களிலும் இவை பதிவு செய்யப்பட வேண்டும் என சொல்கிறேன்.

    நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது [முன்னரே நமது ஹப்பில் ஒரு சில வந்திருக்கின்றன] அவற்றை தெளிவுபடுத்தும் வண்ணம் உண்மைகள் உணரும் நேரம் தொடரும்.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 23rd November 2013 at 01:11 AM.

  4. #413
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு சின்ன வேதனைக் குறிப்பு:

    முழுவதும் அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் இந்த இழைக்குள் புகுந்தேன்..இந்த் இழையின் மெளன ரசிகனாக நான் ஆகி பலகாலம் கழிந்திருந்தும் கூட..

    காரணம் பாட்டுக்குப் பாட்டு இழையில் அறிமுகமான கோபால் சார், வாசுதேவன் சார், கவிதைக்குக் கவிதை இழையில் அறிமுகமான ராகவேந்தர் சார்..எனில் தைரியமாக ப் புகுந்து இரண்டு பதிவு செய்தேன்..அஃப்கோர்ஸ் கொஞ்சம் பிடித்த பாடலோ என்னவோ என இழை 11 ல்.. ஆனால் யாரும் வரவேற்கவில்லை..

    பின் மறுபடி முறைப்படி ஒருபதிவு எழுதி ஒருமுறைக்கு மும்முறை வாசித்து சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதை விட இங்கிருக்கும் பெரியவர்கள் மனம் நோகாமல் இருக்கிறதா என மறுபடி மறுபடி படித்து பதிவிட்டேன்..கோபால், ராகவேந்தர், வாசு கேசி சேகர், கல் நாயக் கார்த்திக் முரளி கண்பத் மற்றும் பல நண்பர்கள் வரவேற்றனர்..

    இங்கு எழுதுகையில் கொஞ்சம் மற்றவர்கள் சாயல் வரகூடாது என நினைத்து எழுதினேன்.

    இப்போது 11 ஆம் இழையில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவின் போதோ வேறு சமயமோ தெரியாது ராகவேந்தர் (என நினைக்கிறேன்) சரஸ்வதி லஷ்மி என்பவரைப் பார்த்தேன் என்று சொன்னார். அவரும் நடிகர் திலகம் நடித்த படங்களை - அதன் காணொளியைப் பதிவிட்டார்..

    பின் ப்க்கத்து இழைக்குச் சென்று சண்டையிட்டார். பின் சரஸ்வதி லஷ்மி என்பதை சருஷ்வதி லஷ்மி என் எழுதி ஒரு பதிவு. பின் கோபால் தன் கருத்தைச் சொன்னவுடன் சம்பந்தமே இல்லாமல் அவருடன் சண்டை.. சிகப்பு ப் பெரிய எழுத்துக்களில் மாடரேட்டர்ஸ் என்று ஒரு பதிவு வேறு. அவை எல்லாம் நீக்கப் பட்டவுடன்.

    முழுக்க முழுக்க தப்பும் தவறுமாக கிருபா என்பவரின் பதிவு. கெட்ட வார்த்தையில் திட்டவில்லையே தவிர இட் ஹர்ட்ஸ். படிக்கும் எவரையும்.பின் நிஜம்மாகவே ந.தியின் மீது அன்பு கொண்டவரைப் போல காட்டிக் கொண்ட அவர் எழுதியது என்ன.தப்பும் தவறுமான சங்கிலி பதிவு.யாருமே பேசவில்லை என்றவுடன் தியாகம் பதிவு. இங்கே இருப்பவர்கள் நண்பர்களா என்ன கல்லீஜ் என்று பேசிய வார்த்தைகள்.அதற்கு அவரே எதிர்பார்த்திராத அனைவரின் பாராட்டுதல்கள். நானும் பாராட்டினேன் - சில நகைச்சுவைத் தன்மைக்காக- வேறு வழியில்லாமல்.(அவரால் ஒழுங்கான தமிழில் எழுத முடியும் எனக் காட்டிக் கொண்டவுடன் அவருடைய நடிப்பை நினைத்து வருத்தமடைந்தேன்)

    இழை 12ஆர்பி சாரதி துவங்கி வைத்தவுடன் எங்கிருந்தோ வந்தார் உத்தம புத்திரன். போடுங்கள் வீடியோ பதிவு. சும்மா இல்லை பல பக்கங்கள். இதில் ஒரு நண்பர் காணொளிகளை வேறு இடங்களில் போடுங்கள் என்றவுடன் கிண்டல் வேறு.

    வாசு சார் உத்தம புத்திரன் பேசினார் எனச் சொன்னார். அவ்ரைப்பற்றிச் சொல்லவில்லை..

    .ஏற்கெனவே தெரிந்த ந்பரா அல்லவா எனச் சொல்லவில்லை.

    உத்தம புத்திரன் ஏற்கெனவே தெரிந்த நபர் எனில் ஏன் ஒளிவு மறைவு. யூ கேன் இண்ட்ரொட்யூஸ் யுவர் செல்ஃப். நாட் ஃபுல்லி.பட் இது என் ஒரிஜினல் பெயர் என.பார்த்த சாரதி சார் கேட்ட பின் கண்ணன் எனப் பதில்.

    இப்போது நடிகனின் குரல் எனக் காணொளிகள்.

    இந்த இழை உயிர் பெற வேண்டும் என உழைத்து எழுதும் ரவி, ராகுல் ராம், தமிழில் தப்பில்லாமல் எழுதிப் பாருங்க்ள் எனச் சொன்ன வுடன் நண்பரிடம் கொடுத்து எழுதிய ஆதிராம் என உயிர்ப்பான இளைஞர்கள். இளைஞரா அல்லவா நானறியேன்.ஆனால் தே ஆர் சின்ஸீயர்.

    ஆனால் இது ஒரு வலை. முழுவதும் உண்மையைச் சொல்ல இயலாது.ஆனால் கொஞ்சம் அறிமுகப் படுத்திக் கொண்டுஎழுதலாமே.

    தயை கூர்ந்து முறைப்படி அறிமுகமில்லாமல் வ்ரும் புதிய பதிவரை பாராட்டவோ திட்டவோ வேண்டாம்.என வேண்டிக் கொள்கிறேன்.
    Last edited by chinnakkannan; 23rd November 2013 at 02:03 AM.

  5. #414
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வேதனைக் குறிப்பின் தொடர்ச்சி..ஒரு சின்ன விளக்கம்: இங்கு ஏற்கெனவே பதிவிட்டு நடிகர் திலகத்தின் பெருமையை புகழை உரத்துச் சொல்லும் ஜாம்பவான்களின் ( ஆர்பிசாரதி, ராக்வேந்தர்,கோபால், முரளி ஸ்ரீனிவாஸ், கேசி சேகர் கண்ப்த் நெய்வேலி வாசு, எஸ் வாசுதேவன், ராதாகிருஷ்ணன் பரணி கல் நாயக் கார்த்திக் மற்றும் விடுபட்ட பலர்) சின்ஸியரிட்டியை நான் குறைத்துச் சொல்லவில்லை என்னை ப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்..

    எழுத்து என்பது தவம். நடிப்பும் அப்படித் தான்..அதில் வெற்றி கண்ட ந.தியின் புகழ் பாடுவது இந்தத் திரி. இது இன்னும் பல பாகங்கள் காணவேண்டுமென்ற என் ஆசையின் வெளிப்பாடே இந்தப் பதிவு.

  6. #415
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சந்திரசேகர் அவர்களே,
    நீங்கள் குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுவதை வரவேற்கிறேன். அதை செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்லாயிரகணக்கானோர் படிக்கும் நமது திரி போன்ற இணையதளங்களில் நாம் இந்த உண்மைகளை உரக்க சொல்ல வேண்டும். காரணம் குமுதம் அல்லது எந்த பருவ இதழாக இருந்தாலும் நாம் அனுப்பும் மறுப்பு கடிதத்தை பிரசுரிப்பார்கள் என்று நம்ப முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது.
    நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது [முன்னரே நமது ஹப்பில் ஒரு சில வந்திருக்கின்றன] அவற்றை தெளிவுபடுத்தும் வண்ணம் உண்மைகள் உணரும் நேரம் தொடரும்.
    டியர் முரளி சார்,
    தங்களின் பணி பாராட்டத்தக்கது. கண்டிப்பாக இதுமாதிரி இணையதளங்களின்மூலம், உண்மைகளை, தவறான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். பத்திரிகைகள் பிரசுரிக்கவில்லை என்றாலும், நாம் அதற்கு மறுப்பு எழுதுவது, குறைந்தபட்சம் கருத்தை அவர்கள் தெரிந்துகொள்ளவாவது உதவியாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து.

    தாங்கள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே நானும் கடிதம் எழுதமுடிந்தது. தங்களின் மேலான பணியைத் தொடருங்கள். நன்றி.
    Last edited by KCSHEKAR; 23rd November 2013 at 03:15 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #416
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Adiram Sir

    புரிந்துகொண்டால் தான் பிரச்சனையே - புரியாத வரை நல்லது - "Speed Breakers" என்று சொல்லும் பதிவுகள் - அப்படியே விட்டு விடுவோம்

    அன்புடன் ரவி

  8. #417
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    சரி... நானும் ஒரு பதிவு இடுகிறேன்...

    இங்கு தமிழ் பிலிம் செக்சனில் வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்த பலர் பங்குபெறும் திரியும் இதுதான்..
    மிகவும் குழந்தைத்தனமான பதிவுகள் அதிகம் கொண்ட திரியும் இதுதான்...
    என் பதிவை நீ பாராட்டவில்லை.. இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிடுகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை.. போன்ற பதிவுகளும்...
    குழாயடி சண்டைகள் போன்ற பதிவுகளும் சமீபகாலத்தில் அதிகமாகிவிட்டன...
    முன்பெல்லாம் எதிர் நடிகரின் ரசிகர்களுடன் தான் சண்டைகள் நடக்கும்.. இப்பொழுதெல்லாம் உண்மையில் காங்கிரஷ் கட்சி கூட்டம்போல் தான் கலந்துரையாடல் நடக்கிறது... online என்பதால் சட்டை கிழிய வாய்ப்பில்லை

    உடனே இந்த பதிவுக்கும் யாரும் கோவிச்சுக்காதீங்க


  9. #418
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Second HonestRaj's views. Peer pressure, attention seeking, domination are something I witness here since months. I also condemn the way CK been treated by harsh words.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #419
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா


    தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.
    என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.
    அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.
    ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார். ஒருமுறை ஷூட்டிங்குங் காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார். சாதா ரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.
    அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார். கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.
    மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.
    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.
    கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது. நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம். 1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.
    ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
    நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர். வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.
    யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.
    மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை. நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.
    சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
    முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம். சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி. சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம். அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.
    நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.
    கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
    - தொடரும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #420
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலாரின் புத்தகத்தை பதிவு செய்து முன்பணம் அனுப்பியாயிற்றா?
    முக்கியமாக மூன்றேழுத்துகளில் பதிவுகள் போட்டு விட்டு ,அவர் புகழை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறோம் என்று தையா தக்கா என்று குதித்து கொண்டிருக்கும் சித்தூர் வாசுதேவன் போன்றவர்கள்?(மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் பொறுமுகிறார் மனுஷர்!!!)
    Last edited by Gopal.s; 24th November 2013 at 05:45 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •